திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டில் மின்வாரிய செயற் பொறியாளர் அலு வலகம் செயல் பட்டுவருகிறது. இந்த அலுவல கத்தில் ஐம்பதுக் கும் மேற்பட்ட ஆண், பெண் பணியா ளர்கள் பணிபுரிகிறார்கள்.
ஆனால் இந்த அலு வலகக் கட்டடம் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் பழமையாக இடியும் தறுவாயில் இருக்கிறது. கழிவறை வசதிகூட கிடை யாது. இங்குதான் சக பெண் ஊழியர்களை ஆபாசமாக சித்தரித்து மெயில் அனுப்பிய விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த அலு வலகத்தில் பணிபுரியும் இளநிலை பொறியாளர் ஒருவர், அலுவலக மெயில் ஐ.டி.யிலிருந்து, வத்தலக்குண்டு கோட்டத்திலுள்ள அனைத்து மின் உதவிப் பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கும் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த மெயிலில், "இரவு நேர இன்பத்திற்கு அழைக்கவும். விடிய விடிய ரூ.100' என எழுதப்பட்டு, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் பெயர் மற்றும் செல் நம்பரை பதிவிட்டு, அதற்கு கீழே "அப்பப்போ... இலவசம்' என மற்றொரு பெண் ஊழியர் பெயர் மற்றும் செல்போன் நம்பரை பதிவிட்டு அனைவருக்கும் அனுப்பப் பட்டிருந்தது.
அதைப் பார்த்துவிட்டு கதறி அழுதவாறே பாதிக்கப்பட்ட இரண்டு பெண் ஊழியர் களும் இதுதொடர்பாக உயரதிகாரிகளிட மும், திண்டுக்கல்லிலுள்ள எஸ்.பி. அலுவலகத்திலுள்ள சைபர் க்ரைம் போலீசிலும் உடனடியாக புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்தும்கூட, அதே அலு வலகத்தில் பணி யாற்றிவரும் ஊழி யரை கைது செய்யவில்லையாம். அந்த நபர், உயரதிகாரிக்கு ஆதரவாக இருந்துகொண்டு அவரையும் வளர்த்து வருவதால் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த வக்ரபுத்தி நபர் தங்கள் கண்முன் நடமாடுவது பொறுக்காமல் அந்த பெண் ஊழியர்கள் வேதனையோடு பணியாற்றுகிறார்கள்.
"கடந்த 14ஆம் தேதி மதியம் சுமார் 12:19 மணிக்கு நாங்கள் இருவரும் அலுவலக அறையிலிருந்து வெளியே சென்றிருந்த வேளையில், எங்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி, இளநிலை பொறியாளராகப் பணியாற்றும் பாஸ்கரன் என்பவர் அலுவலக ஐ.டி. யிலிருந்து வத்தலக்குண்டு மண்டலத்திலுள்ள அனை வருக்கும் ஆபாசமாக இ-மெயில் அனுப்பி யுள்ளார்.
இதுகுறித்து அலு வலக ரீதியாகவும், காவல்துறையிலும் புகாரளித்தும், இந்த பாஸ்கரன், செயற் பொறியாளர் கருப்பையாவின் உறவினர் என்பதால் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சம்பவத்தால் வெளியே தலைகாட்ட முடியாமல் வேதனையி-ருக்கிறோம். எங்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும். அதோடு, அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், எங்கள் துறை அமைச்சர் மற்றும் மின்வாரிய உயரதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள் ளோம்'' என்றனர் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள்.
இந்த குற்றச்சாட்டை பற்றி இளநிலை பொறியாளர் பாஸ்கரனிடம் செல்பேசி மூலம் கேட்டபோது,
"நான் அய்யம்பாளையம் துணைமின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறேன். ஏதாவது வேலை என்றால்தான் இந்த ஆபீசுக்கு வந்து போவேன். சம்பவத்தன்று நான் வந்தேன். ஆனால் 12 மணிக்கு அந்த சீட்டிலிருந்து நான் வெளியே போய் விட்டேன். எனக்கு ஒன்றும் தெரியாது'' என்று கூறினார்.
செயற்பொறியாளர் கருப்பையாவிடம் இதுகுறித்து கேட்டபோது, "எங்கள் துறை ரீதியாகவும் சைபர்கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்றவ ரிடம், "பாஸ்கரன் உங்கள் உறவினர் என்பதால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பெண் ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?'' என்றதற்கு... "ஆதாரம் இல்லாமல் யார் மேலயும் நடவடிக்கை எடுக்க முடியாது'' என்றார்.
இதுசம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, "அது தொடர்பாக நிர்வாக ரீதியான விசாரணையும் நடைபெற்றுவருகிறது. அதோடு போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் கூடிய விரைவில் குற்றவாளி யார் என்ற உண்மை வெளியே வரும். அதன்மூலம் சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை இருக்கும்'' என்று கூறினார்.
இரண்டு அரசு பெண் ஊழியர்களை ஆபாசமாக பாலியல் உறவுக்கு அழைப்பது போல் சித்தரித்து இ-மெயில் மூலம் பரப்பிய சம்பவம் நடந்து பல நாட்களுக்கு மேலாகியும் கூட இன்னும் சைபர் க்ரைம் போலீஸ் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தும் இதுவரை துறைரீதியாகவும் நடவடிக்கை இல்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கத் தயாராகி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் ஊழியர்களின் புகாரின் அடிப்படையில் தற்போதுதான் போலீசார் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய் திருப்பதாகக் கூறுகிறார்கள்.
-சக்தி