ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அட்ஜஸ்ட் ஆகிவிட்டதை ஊட கங்கள் தலைப்புச் செய்தியாக்கி னாலும், உள்கட்சியில் உள்ள நிலவரம் என்ன என்பதை எடுத்துக்காட்டியுள்ளது கள்ளக் குறிச்சி அ.தி.மு.க நிலவரம். பன்னீர் ஆதரவாளரான மாஜி மந்திரி மோகனுக்கும், எடப்பாடி ஆதரவாளரான குமரகுரு எம்.எல்.ஏ.வுக்கும் இடையிலான உரசல், கட்சி அலுவலகத்தைப் பூட்டும் அளவிற்கு போய் விட்டது.
அண்மையில் வழி காட்டுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மோகன் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார். அங்குள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அவர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இதையடுத்து மோகனை வரவேற்க, அவரது ஆதர வாளர்களான தொகுதி எம்.எல்.ஏ பிரபு, மாவட்ட மருத்துவர் அணி காமராஜ், சிறுபான்மைப் பிரிவு ஜான்பாஷா. கள்ளக்குறிச்சி ராஜசேகர், திருநாவலூர் செண்பகவேல் உள்ளிட்டோர் பெரு மளவில் ஆட்களைத் திரட்டி மோகனை வரவேற்றனர்.
அதேசமயம் மோகனை வரவேற்றால் மா.செ.குமரகுருவின் கோபத்திற்கு ஆளாக நேரலாம் என்ற பயத்தில், நகரச் செயலாளர் பாபு உள்ளிட்ட சிலர் அந்தப் பக்கம் தலை காட்ட வில்லை. கட்சி அலுவலகத்தைக் கூட அவர்கள் திறந்துவைக்க வில்லை. உற்சாகமான வர வேற்புடன் கட்சி அலுவலகம் வந்த மோகன், அங்கே பூட்டு தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி யானார். அவரது ஆதரவாளர் களோ ஆவேசமாகி பூட்டை உடைக்க முயல, அவர்களை மோகனே சமாதானப்படுத்தி யிருக்கிறார். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றார் மோகன்.
நம்மிடம் பேசிய அந்த அ.தி.மு.க. பிரமுகர்,“""இந்த இடத்தை வாங்கி, கட்சி பெயரில் பதிவுசெய்து, இங்கே கட்சி அலுவலகத்தையும் கட்டித் திறப்பு விழா நடத்தியவர் இந்த மோகன்தான். இப்போது அவரையே இந்த அலுவல கத்திற்குள் நுழைய முடியாதபடி தடுப்பது கொடுமையிலும் கொடுமை. மோகன் வர்றார்ன்னு தெரிஞ்சதும், அலு வலக உதவியாளர் இளஞ்செழியன், அவசர அவசரமா அலுவலகத்தைப் பூட்டி சாவியை எடுத்துக்கிட்டுப் போயிட்டார்'' என்றார் காட்டமாய்.
எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் வெளியே பகிரங்கமாகக் கட்டித் தழுவிக்கொண்டு போஸ் கொடுத்தாலும், கீழே இரு தரப்பும் எலியும் பூனையுமாகத்தான் இருக்கிறது. இவர்களை வைத்துக்கொண்டு எப்படி தேர்தல் வேலைகளை ஒருங்கிணைக்கப் போகிறது அ.தி.மு.க. என்ற பதற்றம் உண் மையான தொண்டர்களிடம் இருக்கிறது.
-எஸ்.பி.எஸ்