புதுவையின் முக்கிய அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையாக உள்ளது இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம். புதுவை கதிர்காமத்தில் இக்கல்லூரி உள்ளதால் இதனை கதிர்காமம் மருத்துவமனை யென்றும் அழைக்கின்றனர். இம்மருத்துவக் கல்லூரி, மாநில அரசின் நிதியுதவியால் இயங் கும் காமராஜ் மருத்துவக்கல்வி சங்கத்தால் நிர் வகிக்கப்படுகிறது. இதன் சேர்மனாக புதுவை முதலமைச்சரே இருப்பார். அதன்படி முதலமைச்சர் ரங்கசாமி சேர்மனாக இருந்துவரு கிறார். 

கடந்த 2023 - 2024 கல்வியாண்டில் மருத் துவக்கல்லூரி வளாகத்தில் செவிலியர் பயிற்சிக் கல்லூரி துவங்கப்பட்டது. பி.எஸ்.சி. நர்ஸிங் பாடப்பிரிவுக்கு புதுவை அரசு ஒதுக்கீடாக மாணவிகளுக்கு 40, மாணவர்களுக்கு 10, சுயநிதி ஒதுக்கீட்டில் மாணவிகள் 8, மாணவர்கள் 2 என மொத்தம் 60 இடங்கள் உள்ளன. சென்டாக் மூலமாக நிரப்பப்பட்டு மாணவ-மாணவிகள் படித்தும், பயிற்சி பெற்றும் வருகின்றனர். 

செவிலியர் கல்லூரி தொடங்கப்பட்டதும் நேரடியாக முதல்வர், துணை பேராசிரியர்களை நியமித்திருக்க வேண்டும், அப்படியொரு நியமனம் நடக்கவில்லை. அதற்கு பதிலாக அன்னை தெரசா செவிலியர் கல்லூரியில் உதவி பேராசிரியராக, சீனியாரிட்டியில் கீழேயிருந்த பிரமிளா முதல்வராக நியமிக்கப்பட்டார். அதேபோல் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றிய 7 பேர், டெபுடேஷனில் கல்லூரி உதவிப் பேராசிரியர் களாக நியமிக்கப்பட்டனர். 

Advertisment

இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் தினமும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங் கள், புதுவையின் பல்வேறு பகுதிகளிலிருந்து  1500க்கும் அதிகமான வெளிப்புற நோயாளி களும், 200க்கும் மேற்பட்ட உள்புற நோயாளிகளும் சிகிக்சை பெறுகின்றனர். இங்கு அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு மருத்துவம் என 18 வார்டுகள் உள்ளன. இவ்வளவு பெரிய மருத்துவமனையில் 194 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். 266 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வளவு பற்றாக்குறை இருக்கும்போது அயல் பணியாக இங்கிருந்த செவிலியர்களை, செவிலியர் கல்லூரிக்கு அனுப்பியதால் மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையால் திண்டாடுகின்றனர். 

pondy1

செவிலியர் கல்லூரி தொடங்கி  மூன்றா வது கல்வியாண்டு தொடங்குகிறது. இப்போதும் இன்சார்ஜ் பணியாளர்களை கொண்டே பாடம் நடத்தப்படுகிறது. இன்னமும் ஆய்வகக்கூடங் கள் அமைக்கப்படவில்லை. துணைபேராசிரியர் கள் பணிக்கு வருகிறார்களா எனக் கண்காணிக்க பயோமெட்ரிக் சிஸ்டம் கிடையாது. இப்படி தகுதியற்ற முறையில் இயங்கிவருகிறது இக்கல்லூரி. இதுகுறித்து நம்மிடம் பேசிய புதுச்சேரி சென் டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயண சாமி, "கடந்த மூன்றாண்டுகளாக செயல்படும் இக் கல்லூரியில் 200 மாணவ-மாணவிகள் பயின்றுவருகிறார்கள். இவர்களுக்கு கல்லூரியில் தகுதியான பேராசிரியர்கள் பாடம் எடுக்கவில்லை. இங்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டுமென்ற ஒன்றிய அரசின் ஆணை பின்பற்றப்படவில்லை. கல்லூரியில் ட்யூட்டராக பணியாற்றுபவர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுவதாகக்கூறி செவிலியர் படி வாங்குகின்றனர். அதெப்படி ஒரே நபர், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பணியாற்ற முடியும்? செவிலியர் பணிக்காக தரப்படும் படியை, பாடம் நடத்துபவர் எப்படி பெறமுடியும்? அரசின் பணத்தை மோசடி செய்து பெறுகிறார்கள். 

Advertisment

இதுமட்டுமல்ல ஒரு துணை பேராசிரியர், தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய தாக அனுபவச் சான்றிதழ் தந்து செவிலியர் கல்லூரியில் பணியாற்றுவதாக தெரிகிறது. இதுபற்றி அந்த தனியார் கல்லூரியில் ஆர்.டி.ஐ. மூலமாக கேள்வி கேட்டதற்கு, அதுபற்றிய தகவல் எங்களிடம் இல்லை என்கிறார்கள். சான் றிதழ் உண்மையா? பொய்யா என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டியது அரசின் மருத்துவக்கல்வியகம் தான். இதுகுறித்து புகாரளித்தும் அரசு உறக்கத்திலிருக்கிறது. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தவேண் டும் என துணைநிலை ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்'' என்றார். 

இதுகுறித்து இந்திரா காந்தி மருத்துவ மனை நிர்வாகத்தின் முக்கிய அதிகாரி ஒருவ ரிடம் கேட்டபோது, "இங்கே இருநூறுக்கும் அதிகமான செவிலியர்கள் பற்றாக்குறை இருக் கிறது. மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி, கல்லூரிப் பணிக்கு சென்றவர் களுக்கு சிறப்பு ஊதியப் படியை நிறுத்தியிருக்க வேண்டும், ஏன் நிறுத்தவில்லையெனத் தெரிய வில்லை. இப்போதுதான் நிறுத்தச்சொல்லி இயக்குநர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றுபவர்கள் தகுதியானவர்களா என்பதை சான்றிதழ்களை ஆய்வு செய்தால்தான் தெரியும். கல்லூரி முதல்வர், துறை அனுமதி பெறாமல் பலமுறை வெளிநாடுகளுக்கு செல் கிறார் எனப் புகார் வந்துள்ளது. உயரதிகாரிகள் இதனை இப்போதுவரை கண்டுகொள்ள வில்லை. காரணம், முதலமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சருமான ரங்கசாமிக்கும், எதிர்க் கட்சி பிரமுகர்களுக்கும் வேண்டப்பட்டவர்  என்பதால் அவரைக்கண்டு அதிகாரிகள் ஒதுங்கிச் செல்கிறார்கள்'' என்கிறார்கள்.

குற்றம்சாட்டப்படும் செவிலியர் கல்லூரி முதல்வர் பிரமிளாவை நாம் தொடர்புகொண்ட போது, அவர் நமது லைனை எடுக்கவில்லை. அவர் விளக்கம் அளித்தால் வெளியிடத் தயாராகவுள்ளோம்.

அரசு மருத்துவமனைகளில் காலியாக வுள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பாத தால் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ சிகிச்சை பெறலாமென்கிற நற்பெயர் அழிந்துவருகிறது. இதனால் புதுவை மக்களே பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.