Advertisment

மருத்துவர் மீது செவிலியர்  பாலியல் புகார்! -கண்டுகொள்ளாத காவல்துறை!

doctor

"என்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்தவன், பிணையில் வந்து சொந்த ஊரில் இருந்துகொண்டே வழக்கை வாபஸ் வாங்கு என கொலை மிரட்டல்களை விடுக்கின்றான். புகார் கொடுத்தால் அவனை தப்பிக்கவிடுகின்றது போலீஸ். இந்த கொடுமைகளால் பேசாமல் செத்துடலாம்னு தோணுது'' என "நக்கீரனை' அழைத்து விபரத்தை பதிவு செய்தார் செவிலியர் லீனா இந்திராமேரி.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் லீனா இந்திராமேரி. இவர் பழனியில் இயங்கும் தனியார் மருத்துவமனையான ராஜ் பல்நோக்கு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணியாற்றிவந்துள்ளார். மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான மதனகோபால் வாட்ஸ்அப்பில் ஒ சங்ங்க் ஹ்ர்ன், ஒ கண்ந்ங் ஹ்ர்ன், ஒ கர்ஸ்ங் வர்ன் என செவிலியர் லீனாவிற்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் இது தொடர்கதையாகவே...  இதனால் லீனா வேலைக்குச் செல் லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனால், மருத்துவர் மதனகோபாலோ, லீனாவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவதும், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதுமாக இர

"என்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்தவன், பிணையில் வந்து சொந்த ஊரில் இருந்துகொண்டே வழக்கை வாபஸ் வாங்கு என கொலை மிரட்டல்களை விடுக்கின்றான். புகார் கொடுத்தால் அவனை தப்பிக்கவிடுகின்றது போலீஸ். இந்த கொடுமைகளால் பேசாமல் செத்துடலாம்னு தோணுது'' என "நக்கீரனை' அழைத்து விபரத்தை பதிவு செய்தார் செவிலியர் லீனா இந்திராமேரி.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் லீனா இந்திராமேரி. இவர் பழனியில் இயங்கும் தனியார் மருத்துவமனையான ராஜ் பல்நோக்கு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணியாற்றிவந்துள்ளார். மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான மதனகோபால் வாட்ஸ்அப்பில் ஒ சங்ங்க் ஹ்ர்ன், ஒ கண்ந்ங் ஹ்ர்ன், ஒ கர்ஸ்ங் வர்ன் என செவிலியர் லீனாவிற்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் இது தொடர்கதையாகவே...  இதனால் லீனா வேலைக்குச் செல் லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனால், மருத்துவர் மதனகோபாலோ, லீனாவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவதும், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதுமாக இருந்துள்ளார். இதுகுறித்து லீனாவின் உறவினர்கள் மருத்துவரை எச்சரித்தபொழுது, ஒருகட்டத்தில் இனிமேல் இதுபோல் நடக்கமாட்டேன் என மருத்துவர் உறுதியளித்திருக்கின்றார்.

Advertisment

doctor1

"ஆனால், அதன்பிறகும் செவிலியர் லீனாவின் வீட்டிற்குச் சென்று அவரை கீழே தள்ளி அவர்மீது பாய்ந் திருக்கின்றார் மதனகோபால். அலறியடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டை விட்டு வெளியேவந்த செவிலியர் லீனா, பழனி டவுன் காவல் நிலையத்தை அணுகி புகாரளித்தார். பழனி டவுன் போலீஸோ அமைதியாக இருந்தது. லீனாவின் தொடர் புகார் மனுக்களால் ஒரு மாதம் கழித்து மருத் துவர் மதனகோபால் மீது பெண்களுக் கெதிரான வன்கொடுமை சட்டம் பாய்ந்தது. முன்ஜாமீன் பெற்ற மருத்துவர் தனக்குத் தெரிந்த நண்பர்கள், அரசியல் கட்சியினர் காவல்துறையினரைக் கொண்டு செவிலியர் லீனாவிடம் சமா தானம் பேசியிருக்கின்றார். சமாதானத் திற்கு இடம் கொடுக் காததால் நேரடி யாகவே கொலை மிரட்டலை பிர யோகிக்கத் தொ டங்கியிருக்கிறார் மருத்துவரும் அவரது நண்பர்களும். இதுகுறித்தும் செவிலியர் பழனி டவுன் காவல்துறையினரிடம் புகாரளிக்க வழக்கம்போல் ஒருமாதம் கழித்து மருத்துவர் மதனகோபால்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் பிணையை ரத்து செய்யவில்லை. மீண்டும் கொலை மிரட்டல்களை விடுக்கத் தொடங்கியுள்ளார் மருத்துவர் மதனகோபால்'' என்றார் தனது பெயரோ, புகைப்படமோ வேண்டாமென்ற செவிலியரின் உறவினர் ஒருவர்.

பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது இரண்டு முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், பாலியல் அத்து           மீறல் மருத்துவரை கைதுசெய்யக் கோரியும் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த லீனாவோ, "இரண்டு முறை புகாரளித்தும் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து மருத்துவர் மதனகோபால் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்க          வில்லை. செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது சாதாரண விஷயமென்று கூறுகின்றனர். ஆனால் மருத்துவர் மதனகோபால் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் வன்புணர்வு செய்யமுயன்றார், அதற்கும் நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர்'' என்றார்.

இது இப்படியிருக்க, மருத்துவர் சார்பில் மேல்நடவடிக்கை வேண்டாம் என்பதற்காக காவல்துறையிலுள்ள அதிகாரிகளுக்கு கொடுத்த பணம் குறித்து மதனகோபாலின் டிரைவர், மருத்துவமனையில் மேனேஜராகப் பணிபுரிந்த நெய்க்காரப்பட்டி அருண்கிரைச்செல்வன் பேசிய ஆடியோ வைரலாகியது. இதனால் கோப மடைந்த போலீஸார், அருண்கிரைச்செல்வனை பொய்யான புகாரில் கைது செய்தது தனிக்கதை.

பாலியல் துன்புறுத்தல்கள், கொலை மிரட்டல்களுக்கு ஆளான செவிலியர் லீனாவோ, "செத்துடலாம்னு தோணுது சார். முன்னதாக அளிக்கப்பட்ட பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் முதல் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, அதில் டாக்டர் மதனகோபால் ஜாமீனில் வெளியில் உள்ளார். 2025 செப்டம்பர் 20-ஆம் தேதி உயிர் அச்சுறுத்தல், மரண மிரட்டல் குறித்த இரண்டாவது எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வழக்கில் இதுவரை ஜாமீன் பெறவில்லை. எனினும், அவர் இன்னும் சுதந்திரமாகச் செல்வது குறித்து பொதுமக்களிடையே சந்தேகம் நிலவுகிறது. போலீஸ் அதிகாரிகள் அவரை “ஒளிந்திருக்கிறார்கள்’எனக் கூறுகிறார்கள், ஆனால் சாதாரணமாகவே நடமாடுகிறார். செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி, எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்ட பிறகும் இன்னும் மருத்துவர் மற்றும் இருவர் ரிமாண்ட் செய்யப்படவில்லை? இந்த வழக்கினைப் பொறுத்தவரை துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத மூத்த அதிகாரியால் நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணை வேண்டும்'' என்றார் அவர்.

இதுகுறித்து கருத்தறிய பழனி காவல்துறை டி.எஸ்.பி. தனஞ்செயனைத் தொடர்பு கொண் டோம். அவரோ, "அத்தகைய சூழலில் சாதிரீதி யான ஒரு வழக்கில் கவனம் செலுத்தவேண்டிய சூழலிருந்ததால் இதில் கவனம் செலுத்தவில்லை. மருத்துவர் ஊரில் நடமாடுகின்றார் எனக் கேள்விப்பட்டதுமே போலீஸாரை அனுப்பித் தேடினோம். அவர் தலைமறை வாகிவிட்டார். மருத்துவர் ஜாமீனுக்கு முயற்சிக்கிறார். இருப்பினும் ஜாமீனில் அவர் வரக்கூடாது என்பதற்காக அவர் மீதுள்ள பழைய வழக்குகள் குறித்தும் எங்களுடைய அறிக்கையை வைத்துள்ளோம்'' என்றார் அவர்.

இனி நடக்கப் போகின்ற நிகழ்வுகள் தான் குற்றவாளிக்கு போலீஸ் ஆதரவா? இல்லையா..? என்பதனை முடிவு செய்யும்.

-நா.ஆதித்யா

nkn011125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe