தமிழகம் முழுவதுமுள்ள தற்காலிக செவிலியர்கள் தங்க ளுடைய பணியை நிரந்தரமாக்க வேண்டும் என, சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, இதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், ஜூன் 7-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக எம்.ஆர்.பி. சங்கம் அறிவித்தது. அதற்கு தமிழக அரசு தடைவிதித்த நிலையில் திடீரென சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை முன்பாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nurse-strike.jpg)
கடந்த 2015-ஆம் ஆண்டு மருத்துவத் தேர்வு வாரியம் மூலமாக செவிலியர்களுக்கு தேர்வு நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற வர்களில் 7,243 பேரைத் தேர்வு செய்து தற்காலிகப் பணி வழங்கப் பட்டது. அதன்பிறகும் 2019-ஆம் ஆண்டு 4000 பேருக்கு பணி வழங் கப்பட்டது. 2015-ல் நியமிக்கப்பட்டவர்களில் 2000 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். நிரந்தரமாகா தவர்களிடம், "இரண்டு வருடம் பணி செய்யுங்கள். அதன்பிறகு பணி நிரந்தரம் செய்வோம் என்று முந் தைய அரசு சொன்னது. ஆனால், 7 வருடம் கழிந்தும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. கொரோனா காலகட்டத்தில் உயிரைப் பற்றிய கவலையின்றி உழைத்த எங்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்?''’என்கிறது எம்.ஆர்.பி. சங்கம்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ச்சி யாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களை, அரசு கண்டுகொள்ளாத நிலையில் ஜூன்-7 அன்று திடீரென 200-க்கும் மேற்பட்ட செவிலியர் கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் இறங்கினர். அவர்களை போலீசார் கைதுசெய்ய முனைகையில் சாலைமறியலில் இறங்க, அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக எம்.ஆர்.பி செவிலியர் சங்க பொதுச்செயலாளர் அம்பேத்கர் மற்றும் அரசு மணி ஆகியோர் அடங்கிய ஆறு பேர் குழுவை அழைத்து. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nurse-strike1.jpg)
இந்த ஓராண்டிற்குள் 5,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்துதருவ தாகவும், 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை எம்.ஆர்.பி. தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை தயார்செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளதால் செவிலியர்கள் போராட் டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து எம்.ஆர்.பி. சங்க பொதுச்செயலாளர் அம்பேத்கர் கணபதி, "நாங்கள் அமைச்சரின் கருத்தை முழுமையாக ஏற்கிறோம். தமிழக அரசையும் நம்புகிறோம். அடுத்த மூன்றுமாதத்தில் பணிநிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். அமைச்சர் வாக்குறுதி கொடுத்ததுபோல ஆறு மாதத்தில் பணி நிரந்தரம் செய்யவில்லை எனில் இதைவிட மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்''’என்றார்.
கொரோனா காலத்தில் முன்களப்பணியாளர் களாக இருந்து, மக்களின் உயிர் காக்கும் பணியை மேற்கொண்டவர்கள் செவிலியர்கள். ஆட்சிப் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்பதற்கு முன்பே செவிலியர் பணி நிரந்தரம் குறித்து கவனம் செலுத்தினார். எனினும், அரசுப் பணிகளுக்கான முறையான ஊதியம், இதர படிகள் ஆகியவற்றிற்கான நிதி நெருக்கடி காரணமாக இன்னமும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
முந்தைய ஆட்சியாளர்கள் போல இன்றைய முதல்வர் தங்களை ஏமாற்றமாட்டார் என்று செவிலியர்கள் நம்புகிறார்கள். அதற்கான உறுதியை அமைச்சர் வழங்கியிருக்கிறார். போராட்டம் சுமூகமாக முடிந்ததுபோல, அவர்களின் கோரிக்கையும் விரைவில் நல்லபடியாக நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/nurse-strike-t.jpg)