ருத்துவ மாணவர் சேர்க்கையில் போலிச் சான்றிதழ்கள் தந்து என்.ஆர்.ஐ. கோட்டாவில் சீட் பெற்ற 49 பேரைக் கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்துள்ளது புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசின் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளான மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா, பிம்ஸ், ஒன்றிய அரசின்கீழ் செயல் படும் ஜிப்மர் மருத்துவமனை, நிகர்நிலை பல்கலைக்கழகங் களான மகாத்மா காந்தி, அறுபடைவீடு, விநாயகா மிஷன், லட்சுமிநாராயணன் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

Advertisment

ssபுதுவை மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டம், கலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு சென்டாக் என்கிற ஒருங்கிணைந்த தேர்வுக் கமிட்டி உள்ளது. அரசுக்கு ஒதுக்கித் தரப்பட்ட இடங்களுக்கான சேர்க்கை இந்த கமிட்டியால் நடத்தப்படும். இந்த கமிட்டிக்கு விண்ணப்பங்களை ஆன்லைன் வழியே அனுப்பவேண்டும். அந்த கமிட்டி கட்அப் மார்க், இடஒதுக்கீடு மூலமாக ரேங்க் பட்டியல் வெளியிட்டு, அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். புதுவை மாநிலத்திலுள்ள மாநில அரசின் கல்லூரி, மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 830 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 15 சதவிகித வெளிநாடுவாழ் இந்திய ருக்கான என்.ஆர்.ஐ. கோட்டாவில் 116 இடங்கள் உள்ளன. இதில்தான் மோசடி நடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் சங்க தலைவர் பாலசுப்பிர மணியன் நம்மிடம், “"என்.ஆர்.ஐ. கோட்டாவில் ஒருவர் விண்ணப்பிக்கிறாரென்றால் அவர் வெளிநாட்டில் வாழ்பவராக இருக்கவேண்டும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்தியாவிலுள்ள தனது ரத்த உறவுகளின் பிள்ளைகளைப் படிக்க வைப்பவராக இருக்கவேண்டும். அதற்கான சான்றிதழ்களை அவர்கள் வாழும் நாட்டின் அரசிடமிருந்து பெற்று விண்ணப்பத்தோடு அனுப்பவேண்டும். என்.ஆர்.ஐ. கோட்டாவில் சீட் கிடைத்ததும், அரசின் இந்திராகாந்தி மெடிக்கல் காலேஜாக இருந்தால் அதன் அறக் கட்டளைக்கு இந்திய மதிப்பில் 90 லட்ச ரூபாய் அமெரிக்க டாலராக கட்டணம் செலுத்தவேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் என்றால் ஆண்டுக்கு 20 மற்றும் 5 லட்சம் என என ஐந்தரை ஆண்டுக்கு 1.5 கோடி செலுத்த வேண்டும்.

நீட் தேர்வில் 780-க்கு 118 மதிப்பெண் எடுத்து வெற்றிபெற்ற பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு எங்கும் சீட் கிடைக்காது என்பதால் இவர்கள் குறுக்குவழியாக என்.ஆர்.ஐ. கோட்டாவைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் தங்களது ரத்த உறவுகளின் பிள்ளையைத் தத்தெடுத்து படிக்க அந்நாட்டில் சான்றிதழ் வாங்கவேண்டும். அப்படி விண்ணப்பித்து வாங்குவது கடினமானது. இதனால் சென்னை, கேரளா, ஐதராபாத்தில் 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை வாங்கிக்கொண்டு தூதரகங்கள் தருவதுபோல் போலிச் சான்றிதழ்கள் தருவதற்கு ஆட்கள் உள்ளார்களாம். அவர்களிடம் போலிச் சான்றிதழ் வாங்கி அனுப்பிய மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்த மோசடி பாண்டிச்சேரி யில் வெளிவந்துவிட்டது, இது இந்தியா முழுமைக்குமே நடக்கிறது. இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானவர்கள்''” என்றார்.

இந்த மோசடி வெளியே வரக் காரணமான புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர், ஆசிரியர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி யிடம் நாம் பேசியபோது, "முதல் மற்றும் இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்தபின், என்.ஆர்.ஐ. கோட்டாவில் சேர மீண்டும் விண் ணப்பிக்கலாம் என அறிவித்தார்கள். அப்போது 150 பேர் விண்ணப்பிக் கிறார்கள். முதலில் இவ்வளவு விண் ணப்பம் வரவில்லை. இப்போது எப்படி இவ்வ ளவு வந்ததென சந்தேகம் வந்தது. செகன்ட் ரவுண்டில் ஒரு மாணவிக்கு என்.ஆர்.ஐ. கோட்டாவில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது, அவர் சேரவில்லை. அவருக்கு சீட் வாங்கித் தருகிறேன் என 9 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு போலிச் சான்றிதழ் தந்து விண்ணப்பித்து சீட் கிடைத்ததாகத் தெரிவித்தார். அதன்பின்தான் நான் புகார் தந்தேன். அப்போது 79 பேருக்கு அலாட்மெண்ட் ஆர்டர் போட்டிருந்தனர். புகார் சொன்னதும் அனைவரின் சான்றிதழை யும் ஆய்வு செய்தார்கள். இப்போதுவரை 49 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். முந்தைய ஆண்டு மாணவர் சேர்க்கை ஆவணங்களையெல்லாம் ஆய்வு செய்தால் இன்னும் பலரும் சிக்க வாய்ப்புள்ளது. ஏதோ ஒரு திறமையான பிள்ளையின் கனவை அழிக்கிறார்கள். இதனை தீவிரமாக விசாரிக்கவேண்டும்''’என்றார்.

போலி சான்றிதழ் புகார் சென்டாக் அமைப்பின் கன்வீனர் ஷெரின் ஆன்சிவனுக்கு வந்ததும் சான் றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய தூதரகங்களுக்கு சென்டாக் கடிதம் அனுப்பச்செய்தார். சில தூதரகங்கள் பதில் தரவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பி உதவி கேட்டு தகவல்கள் வாங்கினார்.

Advertisment

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், இதனைக் கிளறவேண்டாம் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்தம் தந்துள்ளதாகக் கூறு கின்றனர். காரணம், போலிச் சான்றிதழ் விவகாரத்தில் புரோக் கர்களாக இருப்பவர்களில் கல்லூரிகளுக்கு வேண்டப்பட்ட வர்களும் இருக்கிறார்கள். இதனால் இந்த விவகாரம் அடக்கிவாசிக்கப்படுகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.