புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியிலுள்ள ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் 15-வது ஆண்டு விழாவில் கட்சியின் தலைவர் ரங்கசாமி பேசியுள்ளார். இது சொந்தக் கட்சியில் ஆச்சர்யத்தையும், எதிர்க்கட்சிகளிடம் நமட்டுச் சிரிப்பையும் வரவைத்துள்ளது.
காங்கிரஸ்காரரான அமைச்சர் பெத்தபெருமாளின் உதவியாள ராக அரசியலுக்குள் வந்தவர் ரங்கசாமி. காங்கிரஸிலிருந்து விலகி 1989-ல் ஜனதாதளம் சார்பில் பெத்தபெருமாள் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டவர் சிஷ்யர் ரங்கசாமி. அந்த தேர்தலில் ரங்கசாமி தோல்வியடைந்தார். அதே தொகுதியில் 1991-ல் மீண்டும் குரு - சிஷ்யன் போட்டி. இம்முறை ரங்கசாமி வெற்றிபெற்றார். தொடர்ந்து நான்கு முறை குருவும் சிஷ்யனும் மோதினர், சிஷ்யன் தொடர்ந்து வெற்றிபெற்றார்.
10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ரங்கசாமியின் எளிமையால் காங்கிரஸ் தலைமையைக் கவர்ந்தார். இதனால் 2001-ல் சண்முகத்தை மாற்றி ரங்கசாமியை முதல்வராக்கினார
புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியிலுள்ள ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் 15-வது ஆண்டு விழாவில் கட்சியின் தலைவர் ரங்கசாமி பேசியுள்ளார். இது சொந்தக் கட்சியில் ஆச்சர்யத்தையும், எதிர்க்கட்சிகளிடம் நமட்டுச் சிரிப்பையும் வரவைத்துள்ளது.
காங்கிரஸ்காரரான அமைச்சர் பெத்தபெருமாளின் உதவியாள ராக அரசியலுக்குள் வந்தவர் ரங்கசாமி. காங்கிரஸிலிருந்து விலகி 1989-ல் ஜனதாதளம் சார்பில் பெத்தபெருமாள் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டவர் சிஷ்யர் ரங்கசாமி. அந்த தேர்தலில் ரங்கசாமி தோல்வியடைந்தார். அதே தொகுதியில் 1991-ல் மீண்டும் குரு - சிஷ்யன் போட்டி. இம்முறை ரங்கசாமி வெற்றிபெற்றார். தொடர்ந்து நான்கு முறை குருவும் சிஷ்யனும் மோதினர், சிஷ்யன் தொடர்ந்து வெற்றிபெற்றார்.
10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ரங்கசாமியின் எளிமையால் காங்கிரஸ் தலைமையைக் கவர்ந்தார். இதனால் 2001-ல் சண்முகத்தை மாற்றி ரங்கசாமியை முதல்வராக்கினார் சோனியாகாந்தி. 2006-ல் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. முதலமைச்சர் பதவியில் ரங்கசாமி தொடர்ந்தார். இப்போது அவரின் போக்கில் மாற்றம். காங்கிரஸை வளர்க்காமல் தன்னைமட்டும் வளர்த்துக்கொள் கிறார், சீனியர்களை மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளை கோஷ்டி தலைவர்கள் டெல்லியில் அடுக்கினார்கள். இதனால் முதலமைச்சர் பதவியிலிருந்து ரங்கசாமியை இறக்கிவிட்டு வைத்தியலிங்கம் முதல்வராக்கப்பட்டார்.
மீண்டும் முதலமைச்சர் பதவியைப்பெற தலைமையோடு முட்டிப்பார்த்தார், எதுவும் நடக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 2011 பிப்ரவரி 7-ஆம் தேதி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ரங்கசாமி தொடங்கினார். கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் உட்பட 8 பேர் கொண்ட நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். புதுவையின் மெஜாரிட்டியான வன்னியர் சமுதாயத்தை புறக்கணிக்கிறார்கள் எனச்சொல்லி சாதி அரசியலைப் பேசி தனித்து ஆட்சியைப் பிடித்து ரங்கசாமி முதலமைச்சரானார்.
என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கி 15 ஆண்டுக ளாகிறது. ஒரு மாவட்டத்திலும் என்.ஆர். காங் கிரஸுக்கு நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர் கள்கூட கிடையாது. 2014 பிப்ரவரி மாதம் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞரணி, மகளிரணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவர் அணி என 18 அணிகளைத் தொடங்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டது, அந்த தீர்மானம் நடைமுறைக்கே வரவில்லை. கட்சியைக் கட்டமைத்தால் அதனை நடத்த எவ்வளவு செலவாகும் என்பது ரங்கசாமிக்கு தெரியும். அதனாலயே அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை.
புதுச்சேரி அரசியல் களமென்பது வித்தியாசமானது. இங்கு கட்சி செல்வாக்கைவிட தனிநபர் செல்வாக்கே வெற்றியைத் தீர்மானிக்கும். தேர்தலின்போது காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காதவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்பார்கள். இவரும் தருவார், அவர்கள் வெற்றிபெறுவார்கள். அவர்கள் அடுத்த தேர்தலில் வேறு கட்சிக்கு போய்விடுவார்கள் அல்லது சுயேட்சையாக நிற்பார்கள். இப்போது அமைச்சர்களாக, எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள் 4, 5 முறை கட்சி மாறியவர்களே. இப்படிப்பட்ட வர்களை வைத்தே ஆட்சியை நடத்திவருகிறார்.
கடந்த 2020 ஜூலை 27-ஆம் தேதி பொதுச்செயலாளர் பாலன் இறந்தார். ஒரு கட்சியின் முதுகெலும்பே பொதுச்செயலாளர் பதவிதான், அந்த பதவி 5 ஆண்டுகளாக காலியாகவே இருந்தது. கட்சியின் 15-வது ஆண்டு விழா நடத்தும்போது பொதுச்செயலாளர் இல்லாத கட்சி என விமர்சனம் வரக்கூடாது என ஜெயபாலை பொதுச்செயலாளராக நியமித்தார். இப்போது 11 தொகுதிகளுக்கு மட்டும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதுதான் புதுச்சேரியிலேயே அக்கட்சியின் நிலை.
இதில் தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கப்போகிறோம், தேர்தலில் போட்டி யிடப்போகிறோம் என அவர் சொல்வதெல் லாம் நகைச்சுவை. ஒருவேளை தமிழ்நாட்டில் இவர் கட்சி போட்டியிட்டால் காங்கிரஸ் ஓட்டுக்களை பிரிக்கும் என்பது கற்பனையானது. தமிழ்நாட்டில் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க ஒரு கட்சி தேவை. அதற்கு என்.ஆர். காங்கிரஸ் தேவைப்படலாம், அதற்காக தமிழ்நாட்டில் கட்சி தொடங்கலாம். இதைத் தாண்டி அதில் எதுவுமில்லை'' என்றார்கள் எதிர்க்கட்சி நிர்வாகிகள்.
இதுதொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜனார்த்தன னிடம் நாம் பேசியபோது, “"புதுச்சேரி அரசியல் களத்தில் 40 பேர் தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் கட்சி மாறி மாறி போட்டி போட்டு வெற்றி பெறுகிறார்கள். இது பெரிய களமில்லை என்பதால் இப்படி நடக்கிறது. இங்கு கட்சியின் நிர்வாகிகள் யாரும் சம்பாதிக்க முடியாது, தொண் டர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதனால் புதிதாக கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து கட்சியென்கிற பெயரில் அவர்களது குடும்பத்தை ஏன் அழிக்கவேண்டுமென நினைத்து என்.ஆர். நிர்வாகிகளை நியமிக்க வில்லை. தமிழ்நாடு பெரிய களம். அங்கு தொண்டர்களும் பதவிக்கு வரமுடியும், அதனால் அங்கு கட்சியைத் தொடங்குகிறார். புதுவையில் காமராஜர் ஆட்சியை நடத்திக்கொண்டி ருக்கிறார், அது தமிழ்நாட்டிலும் நடக்கவேண்டும் என்பதற்காக அங்கே கட்சியைத் தொடங்கு கிறார்''’என்றார்.
“வருங்காலத்தில் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, ஆட்சிக்கு ஆதரவாக எந்த கட்சி இருக்கிறதோ, அது தி.மு.க., அ.தி.மு.க., விஜய் கட்சி, ஏன் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியுடன் இங்கும், தமிழ்நாட்டிலும் கூட்டணி வைக்கலாமென தனக்கு நெருங்கிய வட்டத்தில் சொல்கிறாராம் ரங்கசாமி.