சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர். கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவில் இது குறித்து ரெங்கசாமி அறிவிப்பார் என்று கடந்த நக்கீரன் இதழில் பதிவு செய்திருந்தோம். அதன்படியே அறிவித்திருக்கிறார் முதல்வர் ரெங்கசாமி.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 2011-ல் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை துவக்கினார் ரெங்கசாமி. புதுவையில் ஆட்சியையும் கைப்பற்றினார். கடந்த 2021 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற ரெங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணி அரசின் முதல்வராக இருந்துவருகிறார்.
பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர். காங்கிரசின் 15ஆம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ரெங்கசாமி ஆலோசனை செய்தபோது, "நம் கட்சியின் பெயருக்கேற்ப கட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழகத்தில் கட்சியைத் துவக்கி, தேர்
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர். கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவில் இது குறித்து ரெங்கசாமி அறிவிப்பார் என்று கடந்த நக்கீரன் இதழில் பதிவு செய்திருந்தோம். அதன்படியே அறிவித்திருக்கிறார் முதல்வர் ரெங்கசாமி.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 2011-ல் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை துவக்கினார் ரெங்கசாமி. புதுவையில் ஆட்சியையும் கைப்பற்றினார். கடந்த 2021 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற ரெங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணி அரசின் முதல்வராக இருந்துவருகிறார்.
பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர். காங்கிரசின் 15ஆம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ரெங்கசாமி ஆலோசனை செய்தபோது, "நம் கட்சியின் பெயருக்கேற்ப கட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழகத்தில் கட்சியைத் துவக்கி, தேர்தலிலும் போட்டியிட வேண்டும்''’என்றனர் சீனியர்கள். தமிழகத்தைச் சேர்ந்த கலியன் கந்தசாமி உள்ளிட்ட ரெங்கசாமியின் ஆதரவாளர்கள் பலரும் இதே கருத்தை அவரிடம் வலியுறுத்தியபடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 7-ந்தேதி கட்சியின் 15ஆம் ஆண்டு விழாவை கட்சித் தலைமையகத்தில் சிறப்பாக கொண்டாடினார் முதல்வர் ரெங்கசாமி. அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். 2026 தேர்தலை சந்திப்பது பற்றி கட்சியினருடன் நிறைய விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பேசிய ரெங்கசாமி,‘’"என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என தொடர்ந்து எனக்கு கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கிறது. காமராஜரின் கொள்கைகளை நிறைவேற்றும் ஆட்சியை புதுவையில் நடத்தி வருவதுபோல, தமிழகத்திலும் காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும். அதற்காக தமிழக சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும். விரைவில் தமிழகத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து அன்றைய சூழலில் முடிவு செய்யப்படும்''’என்றார்.
இந்த நிலையில், ரெங்கசாமியின் அறி விப்பை வரவேற்கும் வகையில் கலியன் கந்த சாமி, மருதுபாண்டி உள்ளிட்ட பிரமுகர்கள், கடந்த 9-ந் தேதி இதற்கான ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் நடத்தி, ரெங்க சாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து கலியன் கந்தசாமியிடம் கேட்டபோது, "புதுவையில் வலிமையாக உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் தொடங்க, கட்சியின் தலைவர் ரெங்கசாமி அறிவிப்பு செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. அவரது அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார். எங்கள் கட்சி போட்டியிடுவதால் தமிழகத்தில் பல மாற்றங்கள் வரும். தமிழகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பல லட்சம் தொண்டர்கள் இருக்கின்றனர். என்.ஆர். காங்கிரசுக்கு தமிழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, தொண்டர்களை உறுப்பினர்களாக மாற்றும் செயல்திட்டம் வேகமெடுக்கும். அதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்கான முதல்கட்ட முயற்சிதான், தலைவர் ரெங்கசாமி எடுத்துள்ள முடிவு. அந்த முடிவினை செயல்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் வாழும் காமராஜராக இருந்து வருபவர் முதல்வர் ரெங்கசாமி. காமராஜர் கண்ட கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைப் புதுவையில் கொடுத்து வருகிறார்.
அவரது கனவு, லட்சியம் அனைத்தும் தமிழகத்திலும் தொடரவேண்டும். அதற்கான நாட்கள் தொலைவில் இல்லை. காமராஜர் ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக அமையும். விரை வில் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார் முதல்வர் ரெங்கசாமி. அவரது வருகையின் போது பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட விருக்கிறது. தலைவரின் உத்தரவின்படி, சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயா ராகி வருகிறோம்''’என்கிறார் கலியன் கந்தசாமி.
தமிழக சட்டமன்றத்தில் என்.ஆர். காங் கிரஸ் போட்டியிடும் என்கிற ரெங்கசாமியின் அறிவிப்பு, தமிழக காங்கிரஸ் கட்சியை உற்றுக் கவனிக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியி லுள்ள காமராஜர் பக்தர்கள் மத்தியில் என்.ஆர். காங்கிரஸ் குறித்து விவாதம் தொடங்கியிருக் கிறது. அவர்களிடம் நாம் விசாரித்தபோது, "காமராஜரை போல எளிமையானவர் ரெங்கசாமி. அவர் தமிழகத்தில் அரசியல் செய்ய திட்டமிடுவது காங்கிரஸ் கட்சியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்''’என்கின்றனர்.
அதேசமயம், முதல்வர் ரெங்கசாமியின் இந்த முடிவுக்கு பின்னணியில் த.வெ.க. தலைவர் விஜய் இருப்பதாகவும் சொல்லப்படும் சூழலில், த.வெ.க.வின் நிர்வாகிகளிடம் விசாரித்த போது,”ரெங்கசாமி மீது விஜய்க்கு நல்ல மரியாதை இருக்கிறது. கட்சியை துவக்குவதற்கு முன்பு ரெங்கசாமியை சந்தித்து விவாதித்தவர் விஜய். இன்னும் சொல்லப்போனால், விஜய் கட்சி துவக்க ரெங்கசாமியும் ஒரு காரணம். அவரது ஆலோசனையை விஜய் உள் வாங்கிக்கொண்டே கட்சியைத் துவக்கினார்.
இந்த நிலையில், விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காகத்தான் தமிழகத்திற்குள் தனது கட்சியை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார் ரெங்கசாமி. விரைவில் சென்னைக்கு வரும் ரெங்கசாமியை விஜய் சந்திப்பார். அவர்களின் சந்திப்பு அரசியல் பரபரப்பை உருவாக்கும்'' என்கின்றனர்.