Advertisment

மசூதி நிர்வாகத்தின் நோட்டீஸ்! சர்ச்சையாக்கும் இந்துத்வா அமைப்புகள்!

ss

வேலூர் மாவட்டத்தில், வக்பு வாரிய இடத்தில் குடியிருக்கும் மக்களுக்கும், மசூதி நிர்வாகத்துக்குமிடையிலான பிரச்சனையில் மத ரீதியிலான அரசியலுக்கு கொம்பு சீவி விடப்படுவதாகத் தெரிகிறது.

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்திலுள் ளது கீழாண்டை நவாப் மசூதி & ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்கா. இந்த மசூதி நிர்வாகத் துக்கு சொந்தமாக சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இறைவன்காடு காட்டுக்கொல்லை என்ற கிராமத்தில் சொத்துள் ளது. அந்த இடத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், அந்த குடும்பங்களுக்கு மசூதி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், மசூதிக்கு சொந்தமான இடத்தில் வசித்துவரும் நீங்கள், மாதாமாதம் தரை வாடகை செலுத்த வேண்டும், அப்படியில்லை யெனில் ஆக்கிரமிப்பு எனக்கூறி அப்புறப்படுத் தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அம்மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. அதிலும், அங்கே குடியிருப்பவர்கள் இந்து மதத்

வேலூர் மாவட்டத்தில், வக்பு வாரிய இடத்தில் குடியிருக்கும் மக்களுக்கும், மசூதி நிர்வாகத்துக்குமிடையிலான பிரச்சனையில் மத ரீதியிலான அரசியலுக்கு கொம்பு சீவி விடப்படுவதாகத் தெரிகிறது.

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்திலுள் ளது கீழாண்டை நவாப் மசூதி & ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்கா. இந்த மசூதி நிர்வாகத் துக்கு சொந்தமாக சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இறைவன்காடு காட்டுக்கொல்லை என்ற கிராமத்தில் சொத்துள் ளது. அந்த இடத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், அந்த குடும்பங்களுக்கு மசூதி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், மசூதிக்கு சொந்தமான இடத்தில் வசித்துவரும் நீங்கள், மாதாமாதம் தரை வாடகை செலுத்த வேண்டும், அப்படியில்லை யெனில் ஆக்கிரமிப்பு எனக்கூறி அப்புறப்படுத் தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அம்மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. அதிலும், அங்கே குடியிருப்பவர்கள் இந்து மதத்தினர் என்பதைவைத்து மதரீதியாகவும் பரபரப்பாக்கியுள்ளனர்.

Advertisment

mm

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுகன்யா வெங்கடேசன், "நாங்கள், என் மாமனார், அவரது அப்பா என மூன்று தலைமுறையாக இங்கு வீடுகட்டி வசித்துவருகிறோம். இப்போது திடீரென இது எங்கள் இடம், இதற்கு தரை வாடகை கட்டுங்கள் அல்லது காலி செய்யுங் கள் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். மூன்று தலைமுறையாக நாங்கள் வாழும் இந்த இடம் எப்படி அவர்களுக்கு சொந்தமான இடமாகும்? இங்கே புதியதாக வீடு கட்டுவதாக இருந்தால் மசூதி நிர்வாகத்திடம் சென்று அனுமதி பெறவேண்டும். அதற்கு ஒரு கட்ட ணத்தை வாங்கிக்கொண்டு அனுமதி தருவார்கள். அதேபோல் மின்இணைப்புக்கு பணம் வாங்கிக்கொண்டு கடிதம் தருவார்கள். அதைத்தவிர எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. அப்படியிருக்க இப்போது வந்து தரை வாடகை கட்டுங்கள் எனக்கேட்பது எந்த விதத்தில் சரியானது?'' எனக் கேட்டார்.

Advertisment

அதே குடியிருப்பை சேர்ந்த இந்து முன்னணி ஒ.செ. மகேந்திரன், "இங்கு வசிக்கும் அனைவரும் ஏழை, எளிய மக்கள். நாங்கள் வீட்டு வரி, குடிநீர் வரியை பஞ்சாயத்துக்கு கட்டிவருகிறோம். இப்போது திடீரென இது எங்கள் இடம், காலி செய், வாடகை கட்டுன்னு மசூதி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருக் காங்க. இது அவுங்க இடம் அப்படின்னு சொல்றதுக்கு 1950-ல் இருந்துதான் ஆவணம் இருக்கு. அதுக்கு முன்னாடி இது யாரோட இடம்ங்கற ஆவணம் இல்லை. அப்பறம் எதுக்கு எங்களை காலி செய்யச் சொல்லணும்? அந்த மசூதி நிர்வாகிங்க எங்க குடியிருப்புக்கு பக்கத் துல இருந்த இடத்தை பிளாட் போட்டு விற் பனை செய்தாங்க. இப்போ நாங்க குடியிருக்கற இந்த இடத்தையும் பிளாட் போட்டு விற்கவே இப்படி செய்யறாங்க'' எனக் குற்றம்சாட்டினார்.

mm

இதுகுறித்து மசூதியின் பரம் பரை முத்தவல்லி சையத் சதாமை தொடர்பு கொண்டு கேட்டபோது, "எங்கள் மசூதிக்கு எனச் சில கிராமங்களில் சொத்துக்கள் உள்ளன. அதில் இறைவன்காட்டில் உள்ள இரண்டு சர்வே நம்பரில் 6.5 ஏக்கர் நிலத்தில் தான் பிரச்சனை. அங்கு வசிக்கும் மக்களுக்கு அது மசூதி இடம் என்பது நன்றாகவே தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அம்மக்களிடம் தரை வாடகை மட்டும் செலுத்துங்கள் என்றேன். சிலர் மட்டும் வாடகை செலுத்த முன்வந்தார்கள், பலர் வரவில்லை. அதற்கு காரணம், சிலர் அவர்களைத் தூண்டிவிட்டு கட்டாதீர்கள் எனத் தடுத்துவிட்டார்கள். இந்த மாதத் தொடக்கத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். மசூதி இடத்தை போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர். அதேபோல் சிலர், பள்ளிகொண்டா மின்வாரிய அலுவலகத்தில் போலியாக ஆவணங்களைத் தந்து மின் இணைப்பு பெறுகிறார்கள் எனப் பல ஆண்டுகளாகவே பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புகார் தந்துள்ளார் என் தந்தை. பத்திரப்பதிவு ஐ.ஜி.யிடமிருந்து மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியும் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் பணம் வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவை தொடர்ந்து செய்துள்ளனர்.

ssd

பணம் வாங்கிக்கொண்டு போலியான ஆவணங்களை பெற்றுக்கொண்டு மின்இணைப்பு தந்துள்ளனர். சிலர் என் தந்தையை மிரட்டி இடங் களை பதிவு செய்துள்ளார்கள். சென்னையை சேர்ந்த நவாஸ்கனி என்பவர் எங்கள் மசூதிக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணம் மூலமாக பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளார்'' என்றார்.

வேலூர் கோட்டாசியர் செந்தில்குமார், "மக்கள், மசூதி நிர்வாகத்திடம் உள்ள ஆவணங் கள், வருவாய்த்துறையிடம் உள்ள கோப்புக்களை ஆய்வு செய்து வருகிறார். அவ் வறிக்கை வந்ததும் ஆட் சியர் அதனை அரசுக்கு அனுப்பவுள்ளார்.

மசூதி இடத்தை போலி ஆவணங்கள் மூலமாக விற்பனை செய்தது அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவும், அவரது இரண்டு பிள்ளைகளு மாம். இந்த விவகாரத் தில் மக்களைத் தூண்டி விடுவதும் அவர்கள் தானாம். இதனை மதப்பிரச்சனையாக்க பா.ஜ.க. உட்பட இந்து அமைப்புகள் முயற்சிக் கின்றன என்கிறார்கள் விபரமறிந்த முக்கிய புள்ளிகள்.

-து.ராஜா

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn300425
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe