"கடந்த சில தேர்தல்களாகத் தமி ழகத்தில் வாக்குக்குப் பணம் தருவது அதிகரித்துள்ளது' என இந்திய தேர்தல் ஆணையம் வேதனை தெரிவித்து வருகிறது. தேர்தலில் அளவுக்கு அதிகமான பணப்புழக்கத்தை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் தருவதைத் தடுக்க பலவித முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுத்தாலும், அரசியல் கட்சிகள் அதனைப் பலவித வழிகளைக் கையாண்டு முறியடிக்கின்றனர். இந்த பண விநியோகத்தைத் தடுக்க முடியாததால் பல மாநில மக்கள் தமிழகத்தை கேலியாகப் பார்க்கின்றனர்.

தமிழகத் தேர்தல் அலுவலர்களோ, "தமிழகத்தில் பணம், பொருள்தான் பிடிபடுகிறது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மக்களின் உயிரோடு விளையாடும் போதைப்பொருட்களான கஞ்சா, ஹெராயின், மதுபாட்டில்கள் அதிகமாகப் பிடிக்கப்பட்டுள்ளது' என்கிறார்கள்.

s

தற்போது நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் தொகுதிக்கு 3 பறக்கும் படை, ஒரு நிலை கண்காணிப்புக்குழு, செலவின பார்வையாளர் குழு என 234 தொகுதிகளுக்கும் தலா 5 குழுக்கள் இருந் தன. அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகள் உள்ளன. காவல்துறை, வணிகவரித்துறை, வருமானவரித்துறை, வருவாய் புலனாய் வுப் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பறக்கும் படை, நிலை கண்காணிப் புக்குழு, செலவினக்குழு என 756 பறக்கும் படை களத்தில் இருந்தது. மேற்குவங்கத் தில் 294 தொகுதிகள் உள்ளன, இங்கு 2106 பறக்கும் படை, 702 நிலைக் கண்காணிப் புக் குழுவினர் பணியில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்டவை குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ (06.04.2021) அறிவிப் பின்படி, தமிழகத்தில் 236 கோடி ரூபாய் பணமும், 176.22 கோடி ரூபாய் மதிப் புள்ள தங்கம், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசாம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரியில் பணம், தங்கம், வெள்ளி பறிமுதலில் தமிழகத்தோடு ஒப்பீடும்போது பத்தில் ஒரு பங்கு அளவுக்கே பறிமுதலானது. போதைப்பொருள் பிடிபட்டதில் முதலிடத்தில் அசாம் மாநிலம். அதாவது 6940.95 கிலோ (6892 கிலோ கஞ்சா, 10.27 கிலோ மெத்தாம்பேட் மைன், 4.22 கிலோ ஹெராயின், 1 கிலோ மார்பின், 302188 போதை மாத்திரைகள் மற்றும் சில போதைப்பொருட்கள் என) பறிமுதல் செய்தனர். இதன் தோராய மதிப்பு 34 கோடி. அதற்கடுத்து கேரளாவில் 812 கிலோ போதைப் பொருள் பிடிக்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு 4.05 கோடி, மேற்குவங்கத்தில் 255 கிலோ, பாண்டிச் சேரியில்கூட 95 கிலோ பிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கிலோகூட பிடிபடவில்லை. அதேபோல் மதுபானம், அசாம் மாநிலத்தில் 20.44 லட்சம் லிட்டர், மேற்குவங்கத்தில் 19.35 லட்சம் லிட்டர், தமிழகத்தில் 2.89 லட்சம் லிட்டர், கேரளாவில் 67 ஆயிரம் லிட்டர், புதுவையில் 27 ஆயிரம் லிட்டர் பறிமுதல் செய்துள்ளனர்.

அசாம் மாநில தலைமை தேர்தல் ஆணை யாளர் நிதின்கடே, கடந்த தேர்தலில் மொத்தமாக 20 கோடி அளவுக்கே பணம், பரிசுப்பொருள், மதுபானம் போன்றவை பிடிபட்டன. இந்தத் தேர்தலில் பிடிபட்டதன் மதிப்பு 110 கோடி. அதில் 34 கோடி ரூபாய்க்கு மதுபானம், 35 கோடிக்கு போதைப் பொருட்கள், பரிசு பொருட்களான வெளிநாட்டு சிகரெட்கள், பான்மசாலாவின் மதிப்பு மட்டும் 15 கோடி. இதுதொடர்பாக 5234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்.

இதுபற்றி டெல்லியில் உள்ள பத்திரிக்கை யாளர் ஒருவரிடம் கேட்டபோது, ""அசாம், மேற்குவங்கம் மக்களிடம் போதை பழக்கம் அதிகம். அதனால் கஞ்சா, மதுபானங்களை தந்து வாக் காளர்களை வளைக்கிறார்கள். ஆனால் படித்தவர் கள் நிறைந்த மாநிலம் எனச் சொல்லப்படும் கேரளாவில், மதுபானத்தை விட போதைவஸ்த்துக் கள் அதிகம் பிடிபட்டது அதிர்ச்சியைத் தருகிறது'' என்றார்.

அசாம் தேர்தல் களத்தில் அதிகளவு போதைப்பொருட்கள் பிடிபட்டது குறித்து அங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் நாம் கேட்டபோது, ""தமிழக தேர்தல் களத்தைப்போல் இங்கு பணம் ஆதிக்கம் செலுத்தாது. போதைப்பொருள் அதிகம் பிடிபட்டதற்கு காரணம், அருணாச்சலபிரதேசம், மியான்மர், பங்களாதேஷில் இருந்து அசாம் வழியாகத்தான் அவை கடத்தப்படும். தேர்தல் காலகட்டத்தில் அவை பிடிபட்டதால் அதிகம்போல் தெரிகின்றன'' என்றார்.

""தமிழகத்தில் 300 கோடி பிடித்தோம், 400 கோடி பிடித்தோம் எனச்சொல்லும் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் முடிந்தபின் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்தோம் என்பதைச் சொல்வதேயில்லை. காரணம்... இவர்கள் வியாபாரிகள், விவசாயிகளிடம் பணத்தைப் பிடுங்கி "இதோ பாருங்கள் எவ்வளவு பணம் பிடித்துள்ளோம்' என கணக்குகாட்டிவிட்டு, 10 ஆயிரத்துக்கு 2 ஆயிரம் கமிஷன் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கிறார்கள். இது வெளியே தெரியக்கூடாது என்றே பிடிபட்டதை பிரமாண்டமாக காட்டுகிறார்கள். அரசியல் வாதிகளின் பணம் ட்ராவல் ஆகும் ரூட் தெரிந்தும் எந்தத் துறையும் கண்டுகொள்வ தில்லை. மீறி சில நேரங்களில் கண்டெய்னர்களில் பிடிபடும் பணத்தை வங்கிப்பணம் என அலுங்காமல் குலுங்காமல் ஒப்படைக்கிறார்கள். இவையெல்லாம் மாறாதவரை தமிழகத் துக்கு தலைகுனிவுதான்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Advertisment