Advertisment

ஓட்டுக்கு நோட்டு! மகளிர் படை ரெடி! இலையை சமாளிக்குமா சூரியன்?

dd

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்றபடி தி.மு.க. தலைவர் வலம் வர, "வெற்றிநடை போடும் தமிழகமே' என எடப்பாடி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

Advertisment

மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வது, அதனைத் தீர்த்து வைக்குமளவு மக்களிடம் நம்பிக்கையை வரவழைப்பது ஸ்டாலினுக்கான வியூகங்களை ஐபேக் வகுக்க, அ.தி.மு.க. அரசு நிறைவேற் றிய திட்டங்களை டிஜிட்டல் வீடியோவாக்கி, அதனை மேடையிலுள்ள மெகா ஸ்கிரீனில் ஓடவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக் கான ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது சுனிலின் நிறுவனம்.

bb

சங்கரன்கோவிலில் நடந்த எடப்பாடியின் தேர்தல் பரப்புரை மகளிர் கூட்டக் கலந்துரையாடலில் ஐ.டி. அணி, வந்திருந்த ஆண்கள் -பெண்களிடம் மைக்கைக் கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல வைத்தபோது, எதிர்பாராத வகையில், பேசிய வேப்பங்குளம் மஞ்சுளாவும், புளியம்பட்டியின் வேல்சாமியும், ""கிராமங்களில் எங்க புள்ளைக ரொம்பப் பேரு படிச்சிட்டு வேலையில்லாம தவிக்

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்றபடி தி.மு.க. தலைவர் வலம் வர, "வெற்றிநடை போடும் தமிழகமே' என எடப்பாடி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

Advertisment

மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வது, அதனைத் தீர்த்து வைக்குமளவு மக்களிடம் நம்பிக்கையை வரவழைப்பது ஸ்டாலினுக்கான வியூகங்களை ஐபேக் வகுக்க, அ.தி.மு.க. அரசு நிறைவேற் றிய திட்டங்களை டிஜிட்டல் வீடியோவாக்கி, அதனை மேடையிலுள்ள மெகா ஸ்கிரீனில் ஓடவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக் கான ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது சுனிலின் நிறுவனம்.

bb

சங்கரன்கோவிலில் நடந்த எடப்பாடியின் தேர்தல் பரப்புரை மகளிர் கூட்டக் கலந்துரையாடலில் ஐ.டி. அணி, வந்திருந்த ஆண்கள் -பெண்களிடம் மைக்கைக் கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல வைத்தபோது, எதிர்பாராத வகையில், பேசிய வேப்பங்குளம் மஞ்சுளாவும், புளியம்பட்டியின் வேல்சாமியும், ""கிராமங்களில் எங்க புள்ளைக ரொம்பப் பேரு படிச்சிட்டு வேலையில்லாம தவிக்கிறாங்க. டி.என். பி.எஸ்.சி. பரீட்சை எழுதி என்னைக்கி எங்க புள்ளைக வேலைக்கிப் போவ. அதனால அதுமாதிரி பரீட்சை வைக்காம, படிச்சி முடிச்ச சீனியாரிட்டிப்படி வேலை கொடுங்க'' என்று பேசியது கண்டு அரண்டுபோனது. அடுத்து மக்களிடம் மைக் கொடுத்தால் வேறு மாதிரி ஆகிவிடும் என்பதால் நாசூக்காக நிறுத்திக்கொண்டது.

Advertisment

எடப்பாடியின் தேர்தல் பரப்புரை வருகைக்குப் பின்னர் இலைக் கட்சியினரிடமிருந்தே அவர்களின் தேர்தல் நேர வியூகங்கள் தொகுதிகளில் கசியத் தொடங்கியுள்ளன.

""தொகுதியின் ஒவ்வொரு வார்டிலுமுள்ள அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் என இருவர் இருப்பர். அவர்கள் இரண்டு பேருக்கும் தேர்தல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை வேட்பாளரால் சன்மானமாகத் தரப்படும். அவர்கள் சார்ந்த வார்டுகளில் கட்சியைச் சேர்ந்த பெண்கள், அவர்களுக்குப் பரிட்சயமானவர்கள் என 25 பேர் திரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் நம்பர்கள், முகவரிகள் அத்தனையும் கலெக்ட் செய்யப் பட்டுள்ளதாம். இந்த 25 பெண்களுக் கும் வார்டிலுள்ள வாக்காளர்களை, தலைக்கு இத்தனை பேர் என பங்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இதில் அந்த 25 பெண்களுக்கும் கூலியாகத் தலா ஒரு தொகை தனியாகத் தரப்படும். வாக்காளர்களுக்குத் தரப்படும் பணத்தில் அவர்கள் கைவைக்கக்கூடாது. அந்த 25 பெண்களும் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட வாக்காளர்களிடம் வோட்டுக்கு இவ்வளவு என்று வேட்பாளர் தரும் தொகையை அப்படியே கொண்டுபோய் சேர்த்துவிட வேண்டும். அதன்பின் அவர்கள் பணப்பட்டுவாடா செய்த வாக் காளர்களின் பெயர்கள், அவர்களின் அத்தனை மொபைல் நம்பர்களையும், வேட்பாளர் தரப்பிடம் சேர்த்து விடவேண்டும். பணம், வாக்காளர் களுக்கு முறையாகப் போய்ச் சேர்ந்துவிட்டதா என்பதை வாக்காளர்களிடமே செக்கப் செய்து கொண்டுவிடுமாம் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு. இப்படிப்பட்ட பக்காவான ஏற்பாடுகள் செய்யப் பட்ட இந்தப் பெண்களின் டீம், தேர்தல் நேரத்தில் ஓவர் நைட்டில் சிந்தாமல் சிதறாமல் ஓசையின்றிக் காதும் காதும் வைத்தது போன்று பணப்பட்டுவாடாவை முடித்து விடும். இதுதான் வாக்காளர் ஆபரேஷனுக்காகக் கட்சித் தலைமை வைத்திருக்கிற மகளிர் வியூகம்'' என்கிறார்கள் இலைத்தரப்பு நிர்வாகிகள்.

kk

மேலும் ""நகர மற்றும் ஒன்றியச் செயலாளர்களுக்கு வெயிட்டான தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கு. தவிர, தற்போது தமிழகம் முழு வதும், புதிய குடிநீர் பைப்லைன்கள் போடப்பட்டு வருவதால் அதற்காகத் தோண்டப்படும் சாலைகளில் புதிதாக தார்ச்சாலைகள் தமிழகம் முழுக்க போடப்பட்டு வருகின்றன. அப்படி தார்ச்சாலைகள் போடப்படுகிற இடத்தை ஒட்டியுள்ள இரண்டு பக்கத்திலுமுள்ள இரண்டு வார்டு களைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் இரண்டு கிளைச் செயலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் கணிசமான தொகையைக் கமிசனாகக் கொடுத்துவிடவேண்டும் என்பது வாய்மொழி ஆணையாம். இப்படி வரப்போகும் தேர்தலில் இலைக் கட்சியின் நிர்வாகிகளின் காட்டில் பண அடைமழைதானாம்.

வழக்கம்போல் பிரச்சாரம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், இலைத்தரப்பு கரன்சியையே இந்தத் தேர்தலின் பிரம்மாஸ்திரமாகவும் நாகாஸ்திரமாகவும் பயன்படுத்தும் திட்டம் வைத்திருக்கிறது'' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

dd

"தி.மு.க.வில் ஆட்சியமைந்த 100 நாட்களில் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம்' என்று வாக்குறுதியாகவே தரப்படுவதால் தொகுதிக்கு இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்பிக்கையில் மனுக்கள் அளிக்கிறார்கள். மனுக்கள் கொடுப்பதோடு நின்றுவிடக்கூடாது. நாம் வாக்களித்தால்தானே அவர்களால் ஆட்சியமைக்க முடியும். நம் குறைதீரும் என்ற எண்ணத்தில் மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு வாக்களிப்பார்கள். நமது வாக்கு வங்கி பெருகி வெல்வோம் என்பது சூரியத் தரப்பின் நம்பிக்கையாக உள்ளது.

வைட்டமின் ப இல்லாமலா... அதற்கு சூரியத் தரப்பு என்ன வியூகங்கள் வகுத்திருக்கிறது என்பதில் இருக்கிறது கழகங்களின் வெற்றி வாய்ப்புகள்!

nkn270221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe