நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 4ஆம் தேதி, புதனன்று, மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். உரையை ஆங்கிலத்தில் தொடங்கியவர், “"இங்கு வரமுடி யாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனது உடனடி கவலை, வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப்பிழைகளையும், முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 4ஆம் தேதி, புதனன்று, மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். உரையை ஆங்கிலத்தில் தொடங்கியவர், “"இங்கு வரமுடி யாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனது உடனடி கவலை, வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப்பிழைகளையும், முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. "துரை' (உன்ழ்ஹண்) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர் களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாச்சாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர் கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3ஆம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான், அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப்பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றி!
பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துகொண்டி ருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோப மில்லாமல் இந்த பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார். கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில், செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உட னுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்'' என்பதுவரை ஆங்கிலத்தில் உரையாற்றியபின் தமிழுக்கு மாறினார்.
"ப்ரிய சகோதரி, "பவதி பிச்சாந்தேகி' என்று தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர் இசைமேதை தியாகராயர். அவர் பிச்சா பாத்திரத்தி-ருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிவித்தவர்கள் நீங்கள்.“
நீங்கள் வெள்ளைக்காரக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகளாகிவிட்டன. அதன்பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து, ‘தமிழ், பிச்சை எடுக்கக்கூட உதவாது’ என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!
தமிழன் பிச்சை எடுக்கமாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள் ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச்சித்தன் கூற்று இது, 'உம் வினை உம்மை சுடுக, எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக, வந்தீர் வென்றீர் செல்வீர்!' இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட… வீழ்க வளமுடன்! தமிழ் என்றும் வாழும் நலமுடன்'' என்று கமல் பேசினார்.
கடந்த ஆண்டு, தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியாரை 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ்ப்புலவர் என்றார். இவர் கண்ணுக்கு பெரியார் புலவர் ஆகிவிட்டார் போல! பெரியார் கூறியதாக, "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை'' என்று கூறியிருந்தார். அப்போதே அவரது பேச்சுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதை சுட்டிக்காட்டித்தான் கமலும் பதிலடி தந்துள்ளார். கமலின் முதல் பாராளுமன்ற உரைக்கு பலரும் பாராட்டுகளை பகிர்ந்துள்ளனர்.
கமலின் பாராளுமன்ற உரையை கவிப்பேரரசு வைரமுத்து, "கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு! ஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழச் சாதியின் குரல்!'' என்று பாராட்டினார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us