முக்குலத்தோர் அல்ல.. இருகுலத்தோர்! -அகமுடையார் ஆதங்கம்!

ss

2025 ஏப்ரல் 16-19 இதழ் கட்டுரையின் தொடர்ச்சி..

அகமுடையார் அரண் -தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நம்மிடம்,“"எம்.ஜி.ஆர். தனது அரசியல் பிரவேசத்தில், மக்களவைக்கான திண்டுக்கல் இடைத்தேர்தலில் பிறமலைக்கள்ளர் பிரிவைச் சேர்ந்த மாயத்தேவரை அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தியபோது, அகமுடையாரான பொன்.முத்துராமலிங்கத்தை தி.மு.க. எதிர்த்துப் போட்டியிட வைத்தது. அப்போது அகமுடையார்களும், எம்.ஜி.ஆர். மீதான அபிமானத்தால் இரட்டை இலைக்கு வாக்களித்து மாயத்தேவரை வெற்றிபெற வைத்தனர். அடுத்து 1977 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றிபெற்ற அருப்புக்கோட்டை (மறுசீரமைப்புக்குப் பின் தற்போது திருச்சுழி) அகமுடை யார்கள் மெஜாரிட்டியாக உள்ள தொகுதிதான். அடுத்து, 1980ல் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற மதுரை மேற்கு தொகுதியும் 70 சத வீதம் அகமுடையார்கள் உள்ள தொகுதி. எம்.ஜி.ஆர். முதலமைச்ச ரானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றுப்போன தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்துக்கு சாதி அடிப்படையில் அகமுடையார் வாக்குகள் விழவில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் முதன்முதலாக அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் -டி.ராமசாமி அமைச்சரானார். அகமுடையாரான கவிஞர் முத்துலிங்கம் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரை பெரிதும் நேசித்த, எம்.ஜி.ஆரால் நேசிக்கப்பட்ட அகமுடையார் இனம் இன்று ஏன் பழிவாங்கப்படுகிறது?

aa

எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1989ல் ஜெயலலிதா போட்டியிட்ட போடிநாயக்கனூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றது அகமுடையாரான முத்துமனோகர். 1991ல் ஜெயலலிதா முதலமைச்சரானார். அகமுடையார் சமு தாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில்கூட, திராவிட இயக்கத் தலைவர்களுக்கு சாதி பாராமல் வாக் களித்து வெற்றிபெறச் செய்தனர். அதற்கான பிரநிதித் துவத்தை அ.தி.மு.க.வில் அகமுடையார்களுக்கு வழங்க வில்லை. ஜெயலலிதா தலைமையிலான ஆ

2025 ஏப்ரல் 16-19 இதழ் கட்டுரையின் தொடர்ச்சி..

அகமுடையார் அரண் -தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நம்மிடம்,“"எம்.ஜி.ஆர். தனது அரசியல் பிரவேசத்தில், மக்களவைக்கான திண்டுக்கல் இடைத்தேர்தலில் பிறமலைக்கள்ளர் பிரிவைச் சேர்ந்த மாயத்தேவரை அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தியபோது, அகமுடையாரான பொன்.முத்துராமலிங்கத்தை தி.மு.க. எதிர்த்துப் போட்டியிட வைத்தது. அப்போது அகமுடையார்களும், எம்.ஜி.ஆர். மீதான அபிமானத்தால் இரட்டை இலைக்கு வாக்களித்து மாயத்தேவரை வெற்றிபெற வைத்தனர். அடுத்து 1977 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றிபெற்ற அருப்புக்கோட்டை (மறுசீரமைப்புக்குப் பின் தற்போது திருச்சுழி) அகமுடை யார்கள் மெஜாரிட்டியாக உள்ள தொகுதிதான். அடுத்து, 1980ல் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற மதுரை மேற்கு தொகுதியும் 70 சத வீதம் அகமுடையார்கள் உள்ள தொகுதி. எம்.ஜி.ஆர். முதலமைச்ச ரானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றுப்போன தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்துக்கு சாதி அடிப்படையில் அகமுடையார் வாக்குகள் விழவில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் முதன்முதலாக அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் -டி.ராமசாமி அமைச்சரானார். அகமுடையாரான கவிஞர் முத்துலிங்கம் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரை பெரிதும் நேசித்த, எம்.ஜி.ஆரால் நேசிக்கப்பட்ட அகமுடையார் இனம் இன்று ஏன் பழிவாங்கப்படுகிறது?

aa

எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1989ல் ஜெயலலிதா போட்டியிட்ட போடிநாயக்கனூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றது அகமுடையாரான முத்துமனோகர். 1991ல் ஜெயலலிதா முதலமைச்சரானார். அகமுடையார் சமு தாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில்கூட, திராவிட இயக்கத் தலைவர்களுக்கு சாதி பாராமல் வாக் களித்து வெற்றிபெறச் செய்தனர். அதற்கான பிரநிதித் துவத்தை அ.தி.மு.க.வில் அகமுடையார்களுக்கு வழங்க வில்லை. ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி என்பது சசிகலா குடும்பத்தினரின் ஆட்சியாகவே இருந்தது. ஜெய லலிதா மறைந்தபிறகு சசிகலா குடும்பத்தினரே இதை வெளிப்படையாகப் பேசினார்கள். அகமுடையார் மெஜா ரிட்டியாக உள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி களில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், முக்குலத்தோர் என்ற பெயரில் மறவர்கள், கள்ளர்களுக்கு மட்டும் சீட் கொடுத்து, அகமுடையார்களை முற்றிலுமாக ஓரம்கட்டினார்கள்.

மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் போன்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தற்போது அகமுடையார்களை வேட்பாளர்களாக நிறுத்து வதில்லை. முன்புகூட தி.மு.க., இராமநாதபுரத்தில் பவானி ராசேந்திரன், சிவகங்கையில் தா.கிருட்டி ணன், தஞ்சையில் டி.ஆர்.பாலு, தேனியில் பொன். முத்துராமலிங்கம் போன்ற அகமுடையார்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது. அகமுடையார் எதிர்ப்பில் சசிகலா குடும்பம் காட்டிய தீவிரத்தால், அகமுடையார் தொகுதிகள் எல்லாம் இப்போது கள்ளர், மறவர் தொகுதிகள் ஆக்கப்பட்டுவிட்டன. ஒரு தொகுதியில் அகமுடையார் வேட்பாளருக்கு சீட் கிடைத்து வெற்றிபெற்றுவிட்டால், தொடர்ந்து அத்தொகுதியில் அந்த சமுதாய வேட்பாளரையே நிறுத்தவேண்டியது வரும். அதனாலேயே, அக முடையாருக்கு போட்டியிட வாய்ப்பு தருவதில்லை. தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்களைச் சுட்டிக்காட்டி, ஒருவேளை அகமுடையார் சமுதாயத்தவர் சீட் பெற்றுவிட்டால், ஏதாவது உள்ளடி வேலை பார்த்து, சொந்தக் கட்சியினரே தோற்கடித்துவிடுவார்கள். அப்படித்தான், தென் மாவட்டங்களில் அகமுடையார் பிரதிநிதித்துவம் என்பதே இல்லாமல் செய்துவிட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் 1991-1996, 2001-2006 2011-2016, 2016-2021 காலகட்டத்தில் அகமுடையார்கள் அடியோடு புறக்கணிக்கப் பட்டது குறித்து அகமுடையார் சமுதாய மக்களே ஒன்றும் புரியாமல்தான் இருக்கிறார்கள். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராம நாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அகமுடையார்கள் கணிசமாக வாழ்கிறார்கள். எந்த அகமுடையார் அமைப்பும் சமுதாய மக்கள் அரசியல் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கவும் இல்லை, அதற்குத் தயாராகவும் இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால், மூன்று பிரிவுகளில் மெஜாரிட்டியாக உள்ள அகமுடையார் வாக்குகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், முக்குலத்தோரில் பெரும்பாலோர் சசிகலா, ஓ.பன் னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் போன்றோருக்கு சாதிப்பாசத்துடன் தொடர்ந்து ஆதரவாளர்களாக இருப்பதைப் போன்ற ஒரு பிம்பத்தைப் பரப்பி விட்டு, போலியான முக்குலத்தோர் அரசியலில் குளிர்காய்வதுதான். இனியும் முக்குலத்தோர் பெயரில் ஏமாற்றுவதை விட்டுவிட்டு, இருகுலத் தோர் (கள்ளர், மறவர்) என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளட்டும். அந்த இரண்டு சாதிகளை முன்னிறுத்தி தாராளமாக அரசியல் பண்ணட் டும்''’என்றார் ஆதங்கத்துடன்.

"1977 முதல் 2021 வரை, முன்பு அருப்புக் கோட்டை, தற்போது திருச்சுழி தொகுதி, 11 பொதுத் தேர்தல்களையும், ஒரு இடைத்தேர்தலை யும் சந்தித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் 7 தேர்தல் களில் அகமுடையார்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டு 5 தேர்தல்களில் பிச்சை, பஞ்சவர்ணம், மணிமேகலை, சிவசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆனார்கள். 2006ல் ஒரு தடவையும், 2011 முதல் 2021 வரை தொடர்ந்து 3 தடவையும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தங்கம் தென்னரசு வெற்றிபெற்றுள்ளார். எம்.ஜி.ஆர் களம் கண்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க.வின் கோட்டையாகத் திகழ்ந்த இத்தொகுதி, தி.மு.க.வின் கோட்டையாக மாறியது எப்படி? முக்குலத்தோர் பெயரில் அரங்கேறிய துரோக வரலாறும் பகிரங்கமாக நடக்கின்ற உள்ளடி வேலைகளுமே காரணம் என்பதை அகமுடையார்கள் மட்டுமல்ல, இத்தொகுதியின் இரட்டை இலை வாக்காளர் களும் நன்கறிவார்கள்.

திருச்சுழி தொகுதியில் சுமார் 60 சதவீத வாக்கு வங்கி, அதாவது ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட வாக்குகள் அகமுடையார் சமுதாயத்துக்கு உள்ளது என்ற புள்ளிவிபரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துக் கொடுத்துவிட்டு, 2026 சட்ட மன்றத் தேர்தலில் திருச்சுழி தொகுதியில் அ.தி. மு.க. போட்டியிட வேண்டும், அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த உள்ளூர் வேட்பாளரை யே நிறுத்தவேண்டும், விருதுநகர் கிழக்கு மாவட்ட கட்சி பொறுப்புகளிலும் உரிய விதத்தில் அகமுடையார்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்'' என நம்மிடம் கூறினார் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக அம்மா பேரவைச் செயலாளர் மச்சேஸ்வரன்.

“பெரும்பான்மையாக உள்ள அகமுடையார் சமுதாயத்தைக் கணக்கில்கொண்டு காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய 6 ஒன்றி யங்களில் அகமுடையார் 3 பேரை யும், மறவர் இருவரையும், முத்தரையர் ஒருவரையும் ஒன்றி யச் செயலாளர்களாக தி.மு.க. நிய மித்துள்ளது. அ.தி.மு.க.வோ, இத் தொகுதியின் 7 ஒன்றியங்களில் மறவர் 4 பேரையும், அக முடையார் 3 பேரையும் ஒன்றியச் செயலாளர்களாக, தவறான விகிதாச்சாரத்தில் நியமித்திருக் கிறது. மெஜாரிட்டியான அகமுடையார் சமுதாய வாக்காளர்கள் எப்படி மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்களின் கீழ் இணக்க மாக வேலை பார்ப்பார்கள்? தென்மாவட்ட சாதி வாக்குகள் குறித்த தீர்க்கமான அரசியல் பார்வை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லாமல் போனது ஏன்?

முன்னாள் சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வான ராஜவர்மன் கட்சி தாவி, 2021 சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக ரவிச்சந்திரனை எதிர்த்துப் போட்டியிட்டார். அப்போது விருதுநகர் மாவட் டத்தில் 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை தோற் கடிப்போம் என்று சவால்விட்டார். அந்தத் தேர் தலில் ராஜவர்மன் 32,916 வாக்குகள் பெற்றார். ரவிச்சந்திரன் 11,179 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுக வேட்பாளர் இரகுராமனிடம் தோற்றுப் போனார். அ.தி.மு.க.வுக்கு மீண்டும் தாவிய ராஜ வர்மனுக்கு அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பினைக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தோற்றுப்போன ரவிச்சந்திரனும், தோற்கடித்த ராஜவர்மனும், இருவருமே மறவர்கள் என்பதால் சாதிப் பாசத்துடன் கைகோர்த்துக் கொண்டு திருச்சுழி தொகுதியில் கட்சிப்பணியாற்ற (?) சுற்றி வருகிறார்கள். இவ்விருவரையும் இத்தொகுதி அகமுடைய சமுதாய மக்கள் எப்படி பார்ப்பார்கள்?''’என்று கேட்கிறார்கள் திருச்சுழி தொகுதி ர.ர.க்கள்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மனை தொடர்பு கொண்டோம். “"2006 மற்றும் 2016 தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்த முருகனும், தினேஷ்பாபுவும் அகமுடையார்கள்தானே? அ.தி.மு.க. ஜாதிக் கட்சி கிடையாது. யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஒருசிலர் குழப்பம் செய்கிறார்கள். யார் யார் கட்சி வேலை பார்க்கிறார்கள் என்று தெரிந்துதான் அவர்களுக்கு எடப்பாடியார் முக்கியத்துவம் தருகிறார். விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெற மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனும் நானும், சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பாடுபடுகிறோம்''’ என்றார்.

பாலமுருகனோ, "திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு வெற்றி பெறுவதற்கான அத்தனை வழிகளையும் 2011-லிருந்தே அ.தி.மு.க. திறந்து வைத்திருக்கிறது. சில அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் சாதிப்பற்றுடன் அவருடைய கட் டுப்பாட்டில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர், "தோற்கக்கூடிய அ.தி.மு.க. (கூட்டணி) வேட்பாளரை, ஒவ்வொரு தேர்தலிலும் சீர்தூக்கிப் பார்த்துப் போட்டியிடவைத்து, உறவுக்குக் கை கொடுத்துவருகிறார்'' எனப் பகீரூட்டினார்.

சுய சாதிப்பற்று, திராவிட அரசியலிலும் கொடிகட்டிப் பறக்கிறதே!

nkn190425
இதையும் படியுங்கள்
Subscribe