Advertisment

தற்கொலையல்ல - கொலை! முதல்வருக்கு கோரிக்கை வைத்த மூதாட்டி!

ss

டந்த ஜூன் 8-ஆம் தேதியன்று, தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகி லுள்ள தனியார் விடுதி ஒன் றில் தங்கியிருந்த ஒருவர், மாடியிலிருந்து குதித்து தற் கொலை செய்துகொண்டதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார், பலியானவரின் உடலை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். தற் கொலை செய்துகொண்ட தாகக் கூறப்படுபவரின் பெயர் ஆனந்தராஜ். இவர் சிவகங்கை, பருத்தியூரைச் சேர்ந்தவர். இவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெ

டந்த ஜூன் 8-ஆம் தேதியன்று, தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகி லுள்ள தனியார் விடுதி ஒன் றில் தங்கியிருந்த ஒருவர், மாடியிலிருந்து குதித்து தற் கொலை செய்துகொண்டதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார், பலியானவரின் உடலை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். தற் கொலை செய்துகொண்ட தாகக் கூறப்படுபவரின் பெயர் ஆனந்தராஜ். இவர் சிவகங்கை, பருத்தியூரைச் சேர்ந்தவர். இவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகின்றார். மனைவியுடன் ஏற்பட்ட திருமண விவாகரத்தால் பிரிவு தாங்காமல் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலை அடிப்படையாகக்கொண்டு வழக்கினைப் பதிவுசெய்துள்ளது காவல்துறை.

Advertisment

ss

"இரண்டு பெண் பிள்ளைகளோட உடன் பிறந்தவன் அவன். நன்றாகப் படித்து தஞ்சாவூர் அரசு மெடிக்கல் காலேஜில் லேப் டெக்னீசிய னாக வேலை பார்த்து வந்தான். சம்பவத்தன்று ஆனந்தராஜ் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்து விட்டதாகக் கூறி என்னுடைய சின்ன மகளுக்கு போன் வந்தது. அரக்கப், பறக்க போய்ப் பார்த்தால் மெடிக்கல் காலேஜில் அவனை வைச்சிருக் கிறதா சொன்னாங்க. கீழேதான் விழுந் துருக்கான்... எதற்காக மெடிக்கல் காலேஜுக்கு கொண்டு போனாங்க? என்கின்ற கேள்வியோட அங்க போனால், மகனை பிரேதப் பரிசோதனை அறையில் வைச்சுருக் காங்க. மகன் செத்துட்டான் என்கிற தகவல்கூட சொல்ல லை.. நாங்க என்ன சொல்ல வர்றோம் என்பதை காது கொடுத்துக் கேட்காமலேயே அவசர அவசரமாக எங்க ளை அனுப்பிவைப்பதில் போலீசார் குறியாக இருந் தாங்க. குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் புத்தி சொல்றவன். அவன் எப்படி தற்கொலை செய்துகொள் வான்? அவன் சாவில் மர்மம் இருக்கு. இதைத்தான் முதல் வர் ஐயாவுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்'' என்றார் பலியான ஆனந்தராஜின் அம்மா ஜானகி.

ss

Advertisment

அக்கா அன்புக்கரசி யோ, "சம்பவ இடத்துக்கு, போலீஸ் ஸ்டேஷனுக்கு என தொடக்கத்தில் அலைய விட்டவர்கள் கடைசியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யிலுள்ள பிரேதப் பரிசோதனை கூடத் திற்கு வரச்சொன்னாங்க.. அவனோட தொடையில் இரண்டு பக்கமும் நைலான் கயிறுபோல் ஏதோ ஒன்று அழுத்திய காயங்களும், மார்பு, முகவாய்ப் பகுதியில் கீறல்களும் இருந்தன. ஹோட்டல் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான் என்கிறது போலீஸ். மேலேயிருந்து கீழே விழுந்தால் காயம்கூட இல்லாமலா இருக்கும்? இதுபற்றி மூச்சுக்கூட விடவில்லை போலீசார். அவன் தற்கொலைதான் செய்திருக்கான் என்று கேஸை முடிப்பதில் கவனம் செலுத் தினர். அவனுக்கென்று தங்குமிடம் இருக்கை யில் அவன் ஏன் இங்கு ஹோட்டலில் தங்கவேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் எங்களை அரிச்சுக் கிட்டு இருக்கு. காவல் துறை இதுகுறித்து மௌனத்தைக் கலைக்கவேண்டும்'' என்கிறார் அவர்.

படங்கள்: விவேக்

nkn301122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe