Advertisment

கட்சியின் ஆட்சியல்ல.. இனத்தின் ஆட்சி! -முப்பெரும் விழாவில் முனைப்புடன் திராவிடம்!

dd

பெரியார், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள் என இம்மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது தி.மு.க., அண்ணா அறிவாலயத்திலோ, ஏதாவதொரு அரங்கத்திலோ நடந்துவந்த இவ்விழாவை, ஒரு மாநாடு போல பிரம்மாண்ட மாக, 15-ஆம் தேதி விருதுநகரில் நடத்திய பின்னணியில் ஒரு ‘சென்டிமெண்ட்’ இருக்கிறது.

Advertisment

dmk-meet

இவ்விழா மேடையில் வரவேற்புரை நிகழ்த்திய விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும்கூட, “"இதே விருது நகரில் 2004-ல் தென்மண்டல தி.மு.க. மாநாடு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி, 2019-ல் விருதுநகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி, அதன்பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் 40-க்கு 40-ல் வெற்றி பெறுவோம். அதற்கும், விருதுநகரில் நடைபெறும் இந்த விழா துணை நிற்கும்''’என குறிப்பிட்டார்.

சீதை பதிப்பகம் கௌரா ராஜசேகரனின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட, கலைஞர் முரசொலியில் எழுதிய 4041 கடிதங்கள் அடங்கிய 54 தொகுதி க

பெரியார், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள் என இம்மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது தி.மு.க., அண்ணா அறிவாலயத்திலோ, ஏதாவதொரு அரங்கத்திலோ நடந்துவந்த இவ்விழாவை, ஒரு மாநாடு போல பிரம்மாண்ட மாக, 15-ஆம் தேதி விருதுநகரில் நடத்திய பின்னணியில் ஒரு ‘சென்டிமெண்ட்’ இருக்கிறது.

Advertisment

dmk-meet

இவ்விழா மேடையில் வரவேற்புரை நிகழ்த்திய விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும்கூட, “"இதே விருது நகரில் 2004-ல் தென்மண்டல தி.மு.க. மாநாடு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி, 2019-ல் விருதுநகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி, அதன்பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் 40-க்கு 40-ல் வெற்றி பெறுவோம். அதற்கும், விருதுநகரில் நடைபெறும் இந்த விழா துணை நிற்கும்''’என குறிப்பிட்டார்.

சீதை பதிப்பகம் கௌரா ராஜசேகரனின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட, கலைஞர் முரசொலியில் எழுதிய 4041 கடிதங்கள் அடங்கிய 54 தொகுதி களும், மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் நூலும் விழா மேடையில் வெளியிடப்பட்டு, தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றது.

Advertisment

dd

கழகம் ஒரே குடும்பம் என்னும் உணர்வோடு, தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் கழகப்பணியில் சிறப்பாகச் செயல்படும் தலா ஒருவருக்கு, நற்சான்றும் ரூ.1 லட்சம் பண முடிப்பும் வழங்கி கவுரவித்தபோது தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். சமூக அக்கறையோடு கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்தால், இதுபோன்ற அங்கீகாரம் நமக்கும் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையை, நிர்வாகி கள் மற்றும் தொண்டர்களின் மனதில் விதைத்த நிகழ்வாக இது அமைந்தது.

பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் பெயரில் சம்பூர்ணம் சாமிநாதன், இரா.மோகன், டி.ஆர்.பாலு, சி.பி.திருநாவுக் கரசு, மற்றும் குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது, இந்த ஐவருக்கும் கழகத்துக்கும் உள்ள பிணைப்பு குறித்து சிலாகித் துப் பேசினார்கள்.

சம்பூர்ணம் சாமிநாத னுக்கு விருது வழங்கியபோது, கரைவேட்டி கட்டும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் சாமிநாதன் எனக் குறிப்பிட்டதோடு, முதன்முதலில் தனக்குத் தெரிந்த நெசவாள ரான ஆறுமுகத்தை நெசவு செய்யவைத்து, அந்தக் கரைவேட்டியை பேரறிஞர் அண்ணா விடம் காட்டியதையெல்லாம் விவரித் தார்கள். விருதுபெற்றபோது உணர்ச்சிவசப்பட்ட சம்பூர்ணம் சாமிநாதன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தபடி, தலைவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் காலில் விழ முயற்சிக்க, லாவகமாகத் தடுத்தார் மு.க.ஸ்டாலின்.

f

விழிகள் விரியுமளவுக்கு பெரும் திரளான தொண்டர்களைத் திரட்டி, இவ்விழாவை எழுச்சியுடன் நடத்திய விருதுநகர் மாவட்ட செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும், தங்கம் தென்னரசுவையும் பாராட்டிவிட்டு, "நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நாம் உணர்ச்சியும் எழுச்சியும் பெறக்கூடிய நாள் இது...''” எனச் சிறப்புரை ஆற்றிய மு.க.ஸ்டாலினிடம், கவரத்தக்க புதிய மேனரிசங்கள் தென்பட்டன. “"கலைஞரின் கடிதத் தொகுப்பு நூலை வெளியிட்டோம். இந்த நேரத்தில் சண்முகநாதன் இல்லையே...''’என நினைவுகூர்ந்தபோது அவரது நா தழுதழுத்தது. "இது கட்சியின் ஆட்சியல்ல... இது ஒரு இனத்தின் ஆட்சி. நாம் கொள்கைக்காரர்கள்...''’என மொத்த உடலையும் முறுக்கிய அவர், “"திராவிடம் என்ற சொல் இந்தியா முழுமைக்கும் ஒரு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம்''’என விளக்கம் தந்துவிட்டு, "ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட நிதி உரிமை, மறுக்கப்பட்ட கல்விக் கொள்கை' குறித்து ஆதங்கப்பட்டார். “"ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள்விரோத சட்டங்களாக உள்ளன. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள்''’என மோடி அரசையும் ஒரு பிடிபிடித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என்ற இலக்கோடு நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆற்றவேண்டிய களப்பணியை, இம்முப்பெரும் விழா ஆர்ப்பரிப்புடன் தொடங்கி வைத்துள்ளது.

________________

கலைஞர் இருந்திருந்தால்..?’

-ஓரம்கட்டப்பட்ட மீடியாக்கள்!

dd

விழா மேடையின் ஓரத்திலேயே பத்திரிகையாளர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்க்கவோ, படம் பிடிக்கவோ, வீடியோ பதிவு செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பிட்ட சேனலை மட்டுமே மேடைக்கு முன் அனுமதித்ததால், மற்ற பத்திரிகை யாளர்கள் ஓரம்கட்டப்பட்டனர். "கலைஞர் இருந்திருந்தால் இது நடந் திருக்குமா? நடைமுறையை ஏன் மாற்றினார்கள்?'’என, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. மேடைக்கு முன்பாக கேமராக்களுடன் மீடியாக்கள் குவிவது, பார்வையாளர்களுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதினார்களோ என்னவோ?

கூட்டத்தை ‘லிமிட்’ செய்த நிர்வாகிகள்!

விழா முகப்பையும் பந்தலையும் பிரம்மாண்டமாக அமைத்து, லட்சக்கணக்கான தொண்டர்களை, விருதுநகர் -பட்டம்புதூரில் திரட்டிவிட வேண்டுமென, முதலில் திட்டமிட்டிருந்தனர். அத்தனை தொண்டர்களும் ஒரே இடத்தில் குவிந்தால் திடல் தாங்காது; கடும் நெருக்கடி ஏற்படும் என நினைத்தார்கள் போலும். விருதுநகரில் ஒவ்வொரு வார்டிலிருந்தும் 300 பேர் கலந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்திருந்த நிர்வாகிகள், விழா நெருக்கத்தில் 100 பேர் வந்தால் போதும் என ‘லிமிட்’ செய்துவிட்டனர். ஆனாலும், விழா நடந்தபோது பந்தலில் போடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நாற்காலிகள் அனைத்தையும் தொண்டர்கள் நிறைத்துவிட்டனர். பந்தலுக்கு வெளியிலும் பெரும்கூட்டம் கூடியிருந்தது.

nkn210922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe