Skip to main content

இது கைதல்ல.. கடத்தல்! - முகிலன் சிறைப்பேட்டி!

Published on 13/07/2018 | Edited on 14/07/2018
தமிழகத்தில் இயற்கை, கனிமவளக் கொள்ளைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய சமூக ஆர்வலர் முகிலன், கடந்த 295 நாட்களாக (ஜூலை 9 வரை) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது மதுரை சிறையில் தனிமை சித்ரவதைகளைச் சந்தித்துவரும் அவரை, அவரது வழக்கறிஞர் சரவணக்குமார் உதவியுடன் நக்கீரன் மேற்கொண்ட பேட்டி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பிரதமர் மோடி வருகை; சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் கைது

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's visit; Environment activist Mugilan arrested

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் 5 லட்சம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கதிட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Prime Minister Modi's visit; Environment activist Mugilan arrested

கோவை மதுரை ஆகிய இடங்களில் பிரதமர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி திருப்பூர் வருகையில் அவருடைய வருகையை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த இருப்பதாக சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

முகிலனுக்கு ஜாமீன் வழங்கியது- உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு. சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் (53). இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். 

social activist mugilan bail high court madurai branch

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்தவர்,திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஒரு பெண்ணை இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதானார்.
 

தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முகிலன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.