த்தரப் பிரதேசத் துக்கும் தலைநகர் டெல்லிக்கும் அதிக தூரமில்லை. டெல்லியில் புகை மாசு என்றால், உத்தரப்பிரதேச வயல்வெளியிலிருந்து வரும் புகையே காரணமென்று குற்றம் சுமத்துமளவுக்கு இரு மாநில அரசியலும் பின்னிப் பிணைந்தவையே. இன்னும் சொல்லப்போனால், உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெறும் கட்சியே டெல்லி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவ தாக இருக்கும்.

upd

தற்போது யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அங்கே கோலோச்சிய நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் யோகியின் அரசுக்கு ராமர் கோவில் ஆன்மீக அரசியல் தவிர்த்த அனைத்துமே எதிர்மறையான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றன. டெல்லி எல்லையில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகளின் போராட்டத்துக் கும் உத்தரப்பிரதேசத்தில் அமோக ஆதரவு இருந்துவந்தது. இதைப் புரிந்துகொண்டு, இன்னும் சில மாதங்களில் பஞ்சாப்பிலும், உத்தரப் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக மோடி அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி 4 பேர் உயிரிழப்புக்குக் காரணமான விவகாரம் பூதாகரமாகி, உத்தரப்பிரதேச பா.ஜ.க.வுக்கு தலைவலியை உருவாக்கியுள்ளது. டெல்லி, விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, லக்கிம்பூர் பகுதியில் ஒரு விழாவில் கலந்துகொள்ள வருவதையொட்டி, அவருக்கு கருப்புக்கொடி காட்டுவதற்காக அக்டோபர் 3-ம் தேதி விவசாயிகள் சாலையோரமாகக் குவிந்தனர். இதை அறிந்துகொண்ட அஜய் மிஸ்ராவின் வாரிசு ஆசிஷ் மிஸ்ரா, தனது பா.ஜ.க. பரிவாரங்களுடன் காரில் அப்பகுதிக்கு வர, அவருக்கு எதிராகத் திரண்ட விவசாயிகள் மீது காரைக் கொடூரமாக ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே விவசாயிகள் நால்வர் கொல்லப்பட்டனர். உடனே கொதித்தெழுந்த விவசாயிகள் தாக்கியதில் பா.ஜ.க. தரப்பில் நால்வர் கொல்லப்பட்டனர். போலீசார் நடத்திய தடியடியில், ராமன் காஷ்யப் என்ற பத்திரிகையாளர் உயிரிழந்தார்.

Advertisment

uu

இந்த விவகாரம் நாடுமுழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளைக் கொன்றவர்கள்மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டுமென்று விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கின. பிரியங்கா காந்தி, ஆறுதல் தெரிவிக்க வர, அவரைக் கைதுசெய்து தனி அறையில் அடைத்தது உ.பி. அரசு. கடும் போராட்டத்துக்குப்பின் அவரை அனுமதித்தது. விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் மகனைக் கைது செய்யாமல் நாட்களைக் கடத்திய சூழலில், உத்தரப்பிரதேச அரசின் விசாரணைமீது நம்பிக்கை இல்லாததால், இதில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, உத்தரப்பிரதேச அரசைக் கடுமையாக விமர்சித்தது. "விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சரின் மகனை இதுவரை கைது செய்யவில்லை. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கும்கூட கெஞ்சிக்கொண்டு இருக்கிறீர்கள். முதலில் அவரைக் கைது செய்யுங்கள். அவர் மீது விசாரணை நடத்துங்கள்!" என்று கெடுபிடி செய்ததால், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிப்பதாக உத்தரப்பிரதேச அரசு உறுதியளித்தது. இந்த விசாரணையின் கண்காணிப் பாளராக, உச்ச நீதிமன்றத்தின் சார்பில், ஓய்வுபெற்ற பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டார். மேலும், உத்தரப்பிரதேச அரசின் விசாரணைக்குழுவில், மூன்று அதிகாரிகளை நீதிமன்றமே மாற்றம் செய்தது. இதன்பிறகு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், விசாரணைக்குழு தனது அறிக்கையை லக்கிம்பூரிலுள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

Advertisment

ppஅந்த அறிக்கையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகப் பதியப்பட்ட குற்றச்சாட்டுகளை மாற்றி, விவசாயிகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு அவர்கள்மீது மோதி படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் கடுமையான பிரிவில் வழக்குப்பதிவு செய்யும்படி பரிந்துரைத்துள்ளது. விவசாயிகளின் படுகொலை திட்டமிட்ட சதி என்ற செய்தி வெளியானதுமே ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு வலுத்தது.

ராகுல்காந்தி, "மோடி அவர்களே, நீங்கள் மீண்டும் மன்னிப்பு கேட்கவேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு முன்பாக, குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குங்கள்'' என்று தனது ட்விட்டர் பதிவில் மோடிக்கு நெருக்கடி கொடுத்தார். அவரோடு இணைந்து, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் மத்திய அமைச்சரை உடனடியாக நீக்கும்படி போர்க்கொடி தூக்கி யுள்ளனர். இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கான நோட்டீஸை ராகுல்காந்தி வழங்கியிருக்கிறார்.