Advertisment

ராங்கால் ஒரு ஒட்டு கூட பறிபோகக்கூடாது! மா.செ.க்களை எச்சரித்த ஸ்டாலின்!  என் முதுகில் குத்திவிட்டார் விஜய்! புலம்பும் பிரபல தயாரிப்பாளர்!

rang


"ஹலோ தலைவரே, அரசியல் களம் எல்லா தரப்பிலும் சூடுபிடித்து வருகிறதே.''”

"ஆமாம்பா, தேர்தல் குறித்து அறிவுறுத்த தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருக்கிறாரே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.  மா.செ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலின் தலைமையில் நடந்தது. எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து விவாதிக்கவே இந்தக் கூட்டம் என்று சொல்லப்பட்டாலும், தொகுதிப் பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தொகுதியில் சந்திக்கும் சவால்கள், சந்தேகங்கள், குழப்பங்கள், குளறுபடிகள் ஆகியவை பற்றியெல்லாம் இதில் விவாதிக்கப்பட்டன. பி.எல்.ஏ.-2 எனப்படும் பூத் லெவல் முகவர்கள் இன்னும் தங்கள் பணிகளைத் தொடங்காமல் இருப்பது குறித்தான பட்டியல்கள் ஏற்கனவே முதல்வரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அது குறித்தும் மா.செ.க்களிடம் கேள்விகளைக் கேட்டதோடு, ’தகுதியான வாக்காளர் ஒருவரின் பெயர்கூட பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது, அதேசமயம் போலி வாக்காளர்கள் எந்த வடிவத்திலும் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்’ என்று ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக அறிவுறுத்தினார். மேலும் தனக்குக் கிடைத்த தகவலின்படி எஸ்.ஐ.ஆர். குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. அதனால் மிகுந்த விழிப்போடு இருக்கவேண்டும் என்றும் நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார்.''” 

Advertisment

"இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசையும் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறாரேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, அவர் பேசும்போது "தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்திடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற பா.ஜ.க. நிறைய திட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறது. குறிப்பாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகிய விசாரணை அமைப்புகள் மூலம் நமக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க அது திட்டமிட்டுள்ளது. அதேபோல், தேர்தல் ஆணையத்தின் மூலமாகவும் நம்மை முடக்கப் பார்க்கிறது. இதெற்கெல்லாம் பயப்படுகிற இயக்கம் நம் இயக்கம் அல்ல. பயப்படுகிற தொண்டர்கள் நம் தொண்டர்கள் அல்ல. யார் வந்தாலும் நாம் நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து நிற்போம். களம் நமக்கானது; வெற்றியும் நமக்கானது'’ என்று அழுத்தமாகப் பேசிய அவர், ’"சிறப்புத் தீவிர வாக்காளர் ப


"ஹலோ தலைவரே, அரசியல் களம் எல்லா தரப்பிலும் சூடுபிடித்து வருகிறதே.''”

"ஆமாம்பா, தேர்தல் குறித்து அறிவுறுத்த தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருக்கிறாரே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.  மா.செ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலின் தலைமையில் நடந்தது. எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து விவாதிக்கவே இந்தக் கூட்டம் என்று சொல்லப்பட்டாலும், தொகுதிப் பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தொகுதியில் சந்திக்கும் சவால்கள், சந்தேகங்கள், குழப்பங்கள், குளறுபடிகள் ஆகியவை பற்றியெல்லாம் இதில் விவாதிக்கப்பட்டன. பி.எல்.ஏ.-2 எனப்படும் பூத் லெவல் முகவர்கள் இன்னும் தங்கள் பணிகளைத் தொடங்காமல் இருப்பது குறித்தான பட்டியல்கள் ஏற்கனவே முதல்வரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அது குறித்தும் மா.செ.க்களிடம் கேள்விகளைக் கேட்டதோடு, ’தகுதியான வாக்காளர் ஒருவரின் பெயர்கூட பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது, அதேசமயம் போலி வாக்காளர்கள் எந்த வடிவத்திலும் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்’ என்று ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக அறிவுறுத்தினார். மேலும் தனக்குக் கிடைத்த தகவலின்படி எஸ்.ஐ.ஆர். குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. அதனால் மிகுந்த விழிப்போடு இருக்கவேண்டும் என்றும் நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார்.''” 

Advertisment

"இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசையும் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறாரேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, அவர் பேசும்போது "தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்திடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற பா.ஜ.க. நிறைய திட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறது. குறிப்பாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகிய விசாரணை அமைப்புகள் மூலம் நமக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க அது திட்டமிட்டுள்ளது. அதேபோல், தேர்தல் ஆணையத்தின் மூலமாகவும் நம்மை முடக்கப் பார்க்கிறது. இதெற்கெல்லாம் பயப்படுகிற இயக்கம் நம் இயக்கம் அல்ல. பயப்படுகிற தொண்டர்கள் நம் தொண்டர்கள் அல்ல. யார் வந்தாலும் நாம் நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து நிற்போம். களம் நமக்கானது; வெற்றியும் நமக்கானது'’ என்று அழுத்தமாகப் பேசிய அவர், ’"சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது'’ என்றும் எச்சரித்தார்.''” 

"அறிவாலயத்தில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காகவே ஸ்பெஷல் வார் ரூமை தி.மு.க. அமைத்திருக்கிறதே?''”

"இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் தி.மு.க. தலைமை, சென்னை அறிவாலயத்தில் வார் ரூம் ஒன்றை அமைத்திருக்கிறது. தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் திருத்தப் பணிகளைக் கண்காணிப்பது, ஆணைய அலுவலர்கள் ஏற் படுத்தும் குளறுபடிகள் ஆகியவற்றில் தி.மு.க.வின ருக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்குவது போன்ற பணிகளுக்காகவே இந்த வார் ரூம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 700-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வார் ரூமில் இப்போதே பதிவாகின்றன. தி.மு.க.வினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இந்த வார் ரூமை தொடர்புகொண்டு தெளிவு பெறுகிறார்கள். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் அறிவாலயம் ஏக பிஸியாக இருந்துவருகிறது. இந்த திருத்தப் பணிகளில் தேர்தல் ஆணையத்தை விட மிகவேகமாக செயல்படுகிறது தி.மு.க.''” 

"சரிப்பா, தேர்தல் ஆணையத்தின் போக்கு ஏடாகூடமா இருக்குன்னு புகார்கள் கிளம்புதே?''”

"தமிழகத்தில் மட்டும் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக 77,000-க்கும் அதிகமான வாக்குச் சாவடி அலுவலர்களை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இவர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களைக் கொடுத்து வருகிறார்கள். ஆனாலும், முறையாக இந்தப் பணிகளை அதிகாரிகள் செய்வதில்லை என் கிற குற்றச்சாட்டுகள் பெரும்பாலான தொகுதிகளில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது தவிர, விண்ணப்ப படிவங்களை விநியோகிப் பதிலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெறுவதிலும் குளறுபடிகள் நிலவுவதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் பறந்துள்ளன. சென்னை வேளச்சேரியில் பூத் எண் 87-க்கு, பூத் லெவல் அலுவலராக நியமிக்கப்பட்ட பெண்மணி, ஜூஸ் கடையில் வேலை பார்த்து வருகிறாராம். இவர், எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை தனது மகனிடம் கொடுத்து விநியோகிக்கச் செய்திருக்கிறார். மேலும், விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் எதுவும் இவருக்கோ, இவரது மகனுக்கோ தெரியவில்லை யாம். இந்த தகவலை வெளியே கொண்டு வந்திருக்கிறார் பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன். சம்மந்தப்பட்ட பெண்மணியிடம் கராத்தே விசாரிக்கும் ஆடியோ ரிலீஸாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி    வருகிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தி.மு.க.வும் இந்த ஆடியோ விவகாரத்தை வைரலாக்கியிருக்கிறது.''”

"நடிகர் விஜய்யின் "ஜனநாயகன்' திரைப்பாடல் வெளியீட்டுக்கு முன் நிகழ்ந்த ஒரு சிறப்பு பூஜை, பெரிதாக கவனம் பெற்றிருக் கிறதே?''”

rang1

"ஆமாங்க தலைவரே, கடந்த  சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி என்பதால், பிள்ளையார் பட்டிக்கு வந்தார் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இதை முன்னதாகவே அறிந்த ஊடகங்கள் அங்கே குவிந்திருந்தன. மஞ்சள் வேஷ்டி, மஞ்சள் சட்டை அணிந்து மனைவி சகிதமாக கையில் ஒரு கவருடன் பிள்ளையார்பட்டிக்கு   வந்த புஸ்ஸி,  வந்த வேகத்திலேயே  வி.ஐ.பி.க்களுக்கான தரிசன வழியில் கருவறை அருகே சென்றார். அங்கு சிறப்பு பூஜை நடந்திருக்கிறது. அப்போது, தன்  கையிலிருந்த ஒரு கவரைக் கொடுத்து பிள்ளையார் காலடியில் வைத்துக் கொடுக்கும்படி அவர் கூறியிருக்கிறார். பின்னர் கவரை பெற்ற நிலையில், உட்பிரகாரத்திலிருந்து வெளியேறியவர், வெளிப்புறத்தில் விளக்கையும் ஏற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் கருவறையில் வைத்து எடுத்த கவருக்குள், "ஜனநாயகன்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்தான் இருந்ததாம். முறைப்படி கடவுளிடம் வைத்து வணங்கிய பிறகே, அந்தப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.''”

"விஜய் தன்னை ஏமாற்றிவிட்டதாக பிரபல படத் தயாரிப்பாளர் ஒருவர் புலம்புகிறாராமே?''”

rang3

"உண்மைதாங்க தலைவரே, பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பாளரான கே.டி.குஞ்சுமோன், நடிகர் விஜய்யை வைத்து இதுவரை  "நிலாவே வா', "என்றென்றும் காதல்' ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். இரண்டு படங்களுமே படுதோல்வியைத் தழுவின. விஜய் மூலம் விட்ட காசை எடுக்க நினைத்த குஞ்சுமோன், விஜய்யிடம் மீண்டும் கால்ஷீட் கேட்க,’நிச்சயம் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன்’ என்றபடி, பிடிகொடுக்காமல் தொடர்ந்து அலைய விட்டிருக்கிறார். இதனால் நொந்துபோன குஞ்சுமோன், ’விஜய்யிடம் எனக்கு கால்ஷீட் வாங்கிக் கொடுங்கள்’ என்று, அவருடைய அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை அணுகியிருக்கிறார். சந்திரசேகரோ ’எனக்கும் என் மகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை, ஆளை விடுங்கள்’என்று கும்பிடு போட்டு ஒதுங்கிக் கொண்டாராம்.’விஜய்யை நம்பிப் போனதனால் என் வாழ்க்கையே போச்சு. நம்பவைத்து என் முதுகில் குத்திவிட்டார் விஜய்’என்று இப்போது ரொம்பவே புலம்பிவருகிறாராம் குஞ்சுமோன்.''”

"கட்சி நிர்வாகிகளை விடவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இப்போது விஜய் நம்புகிறாராமே?''”

“"ஆமாங்க தலைவரே, த.வெ.க. தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கரூர் சம்பவம்போல் நடந்துவிடாமல் இருக்கவும், பாதுகாப்பு பணிகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை கவனிக்கவும் ஓய்வுபெற்ற ஐ.பிஎஸ். அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை சமீபத்தில் உருவாக்கியிருக்கிறார் விஜய். அதேபோல, அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கவும், தி.மு.க. அரசின் நிர்வாக செயல் பாடுகளை விமர்சிக்கவும் தேவையான ஆலோசனைகளை வழங்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட மற்றொரு குழுவை உருவாக்கும் யோசனையிலும் விஜய் இருக்கிறாராம். இதற்கு முன்னோட்டமாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் ஆலோசனையைக் கேட்டு வருகிறாராம். விரைவில் சகாயம் தலைமையில் ஒரு குழு உருவாக்கப் படலாம் என்கிறார்கள் த.வெ.க.வினர்.''” 

"தி.மு.க. பிரமுகர்களை வளைக்க அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி முயல்கிறாராமே?''”

rang2

"அ.தி.மு.க.வின் கோட்டை என்று முன்பு, கொங்கு மண்டலத்தைக் குறிப்பிடுவார்கள். சட்டமன்றத் தேர்தலில் 10-லும் வெற்றி பெற்றாலும், செந்தில்பாலாஜி வருகைக்குப்பின் அ.தி.மு.க. மேயர் பதவியை இழந்தது. இது தி.மு.க.  தலைமைக்கு உற்சாகத்தை தர, அது செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப் பாளராக்கியது. இது அ.தி.மு.க. தரப்பை மிரள வைத்துவிட்டது.  தன்னுடைய தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி மீது அதீத ஆர்வம் காட்டிவரும் மாஜி மந்திரி வேலுமணி, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கோவையில் தி.மு.க.  மா.செ.வாக இருந்த ராமச்சந்திரனுக்கு சிறுமுகையில் 65 ஏக்கர் தோட்டத்தைக் கொடுத்ததோடு,  தெலுங்குபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த தி.மு.க. வட்டச் செயலாளர்களுக்கு ஆக்டிவாவை வாங்கிக் கொடுத்து எளிதாக வென்றார். இதேபாணியில் அவர், இப்போது கோவை தி.மு.க. வடக்கு மா.செ. தொண்டாமுத்தூர் ரவியிடம் டீல் பேசி வருவதாக தகவல் கசிந்தது. இது இப்போது, அறிவாலயத்தின் காதுவரை சென்றிருக்கிறதாம்.''”

"ஆளுங்கட்சி மாவட்ட கவுன்சிலர் ஒருவர் த.வெ.க.வுக்குத் தாவியிருக்கிறாரே?''”

"ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர்  தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான  சிவகுமார், திமிரி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய வார்டிலிருந்து வெற்றிபெற்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த வாரம் தி.மு.க.விலிருந்து திடீரென த.வெ.க.வுக்குத் தாவியிருக்கிறார். இதுகுறித்து அவரிடமே நாம் கேட்டபோது, ’"என் ஊரான மேல் நெமிலி கிராமத்தில் நீர்நிலைப் புறம்போக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு பட்டா வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசினேன். ஊரில் நத்தம் பொறம்போக்கு 7 ஏக்கர் இருந்ததை, 20 பேருக்கும் அளந்து ஒதுக்கினார்கள். அங்கு சம்மந்தப்பட்டவர்கள் கூரைக்கொட்டாய் போட்டபோது, ஊர் பக்கத்தில் காலனி இருக்கக்கூடாது என்று சிலர் தடுத்துவிட்டார்கள். இதுகுறித்து நான் சேர்மன் அசோக் தொடங்கி, தொகுதி எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் வரை அனைவரிடமும் முறையிட்டேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. அதோடு என்னையும் அவர்கள் முழுதாக ஒதுக்க ஆரம்பித்தார்கள். அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்'’என்றார். இதுபற்றி தி.மு.க. திமிரி கிழக்கு ஒ.செ.வும், சேர்மனுமான அசோக்கிடம் கேட்டபோது, ’"அவர்கள் கேட்ட இடத்துக்கு பட்டா வழங்க, தாசில்தார் அளந்தபோது அது தனிநபர் ஒருவரின் இடம் என்று தெரியவந்துள்ளது, அதனால் பட்டா தரமுடியவில்லை, மற்றபடி அவர் வைக்கும் புகார்களில் உண்மை இல்லை'’என்று அழுத்தமாக மறுத்தார்.''”

என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். தமிழக காங்கிரசின் துணைத்தலைவராக இருப்பவர் நாசே ராமச்சந்திரன். இவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்கிற கோபம்தான் ராமச்சந்திரனுக்காம். அதனால் கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர், இப்போது விலகியிருக்கிறார். இருப்பினும்  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கள் கிரீஸ் ஜோடங்கர், சூரஜ் ஹெக்டே ஆகிய மூவரும் அவரை சமாதானப்படுத்த முயன்று வருகிறார்களாம். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்விடம் அடிக்கடி ஆலோசனைப் பெற்றுவரும் நாசே ராமச்சந்திரன், தனது தலைமையில் இயங்கும் யாதவா சமூக சங்கத்தை, அரசியல் கட்சியாக மாற்றும் திட்டத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.”

nkn121125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe