ளும்கட்சியான தி.மு.க.வில் தேர்தல் பணிகளை ஒருங் கிணைக்க,  தமிழ்நாட்டை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களிடம், எந்தெந்த தொகுதி எப்படியிருக்கு? சிட்டிங் எம்.எல்.ஏக்களின் ப்ளஸ்,  மைனஸ் ரிப்போர்ட்டை வாங்கியுள்ளது தலைமை. அதோடு, யாரை வேட்பாளராக நிறுத்தலாமென்றும் கேட்டு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

திருவண்ணாமலை தெற்கு மா.செ.வும், பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சரு மான எ.வ.வேலு, வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட் டங்களிலுள்ள 41 தொகுதிகளை சர்வே செய்து, தேர்தல் வேலையில் தீவிரம் காட்டிவருகிறார். 

Advertisment

இதுகுறித்து அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஒரு சர்வேயில்லை, மூன்று சர்வே எடுத்துள்ளார். மறைந்த முரசொலி செல்வம் சார், பெங்களுரூவை சேர்ந்த ஒரு நிறுவனத்தை வைத்து தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி அந்த ரிப்போர்ட்டை தலைவரிடம் தருவார். 

அதேபோல் பெங்களுரூவை சேர்ந்த ஒரு நிறுவனம், டெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனம், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் என 3 நிறுவனங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வடக்கு மண்டலத்திலுள்ள 41 தொகுதிகளிலும் சர்வே எடுத்தன. அந்த நிறுவனங்கள் தந்த ரிப்போர்ட்         டில் எங்களுக்கு தெரிந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள  ஆரணி தொகுதி, கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, ராணிப் பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், 

Advertisment

ஆற்காடு, தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டு, பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளில் தி.மு.க. இரண்டாமிடத்தில் உள்ளது. மற்ற தொகுதிகளில் தி.மு.க. முதலிடத்தில் உள்ளது. 

காட்பாடி தவிர மற்ற தொகுதிகளில் வாக்கு சதவீதமும் அதிகளவில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் மாவட் டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 8, அதன் கூட்டணி யான பா.ம.க. 2 என பத்து இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. 

இந்த முறை, எடப்பாடி, சங்ககிரி தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கும், ஆத்தூர், ஓமலூர், சேலம் தெற்கு, ஏற்காடு தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் கடும்போட்டியும், கெங்கவல்லி, வீரபாண்டி, 

சேலம் வடக்கு, சேலம் மேற்கு, மேட்டூர் தொகுதிகள் தி.மு.க.வுக்கு சாதமாகவும் இருப்பதாக ரிப்போர்ட் வந்துள்ளது. அதாவது, 11 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெறுமென்று சொல்லப்பட்டுள்ளது. 

அதேபோல் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற போளூர், கே.வி.குப்பம், வாணியம்பாடி, கள்ளக்குறிச்சி தொகுதிகள் இப்போது தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளன. அதே நேரத்தில், தி.மு.க. வெற்றிபெற்ற உளுந்தூர்பேட்டை, ஆற்காடு தொகுதிகள் இப்போது வீக்காக உள்ளன. அதற்கு காரணம், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் மீதான கடும் அதிருப்தி. உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் மீது பணமோசடி, ஒப்பந்தங்கள் தராதது எனப் பல புகார்களை கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். அதேபோல் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன'' என்றார்கள்.

வடக்கு மண்டலத்தில்  நடிகர் விஜய்யின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளதென்றும் சர்வே எடுத்துள்ளனர். அதில், 7 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை விஜய்யின் கட்சி வாக்கு வாங்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதுவும், கிராமப் பகுதிகளில் விஜய்க்கு பெரிய செல்வாக்கு இல்லை, நகர்புறங்களில் தான் விஜய்க்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்களில் 40 சதவீதம் பேர் விஜய்யை ஆதரிக்கிறார்கள். மீதியுள்ள 60 சதவீத இளைஞர்களின் ஆதரவு தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், பா.ம.க., வி.சி.க. என மற்ற கட்சிகளுக்கு போகிறது. சாதிரீதியாக பார்க்கும்போது பட்டியல் சமூக இளைஞர்கள் வாக்குகளும், வன்னிய சமூக வாக்குகளும் விஜய்க்கு சாதகமாக உள்ளன. மற்ற சாதிக்காரர்களின் வாக்குகளும் குறைந்த அளவு போகிறது. கல்லூரியில் படிப்பவர்களின் 

வாக்குகள் நடிகர் விஜய்க்கு போகிறது எனச்சொல்வதெல்லாம் சுத்தப்பொய். கல்லூரி மாணவ -மாணவிகளின் வாக்குகளில் தி.மு.க. முதலிடத்தில் உள்ளது.

வடக்கு மாவட்டங்களில் வன்னியர் சமூகம் வலிமையானது. பா.ம.க. உடைந்துள்ள நிலையில், வன்னிய சமூகத்தினரில், அன்புமணிக்கு 70 சதவீதமும், ராமதாசுக்கு 30 சதவீதமும் ஆதரவாக இருக்கிறது. இளைஞர்கள் அன்புமணிக்கும், வயதானவர்கள் ராமதாஸுக்கும் ஆதரவாக உள்ளனர். மகளிர் வாக்குகளில் முதலிடம் தி.மு.க.வுக்கும், அடுத்ததாக அ.தி.மு.க.வுக்கும், அதன்பின்பே நடிகர் விஜய்க்கும் போகிறதாம். மொத்தத்தில் 48 சதவீத ஆதரவு தி.மு.க.வுக்கு இருப்பதாகவும், கடந்த தேர்தலைவிட 3 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் ரிப்போர்ட் சொல்வதாக விவரித்தார்கள். 

வடக்கு மண்டலத்தின் கருத்துக்கணிப்பை கையில் வைத்தபடி சில தொகுதிகளில் சர்ச்சைக்குரிய, கட்சியினர், பொதுமக்கள் 

மத்தியில் பெயர் டேமேஜான சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் இன்னார், இன்னாரை மாற்றி புதிய வேட்பாளரை அறிவித்தால் சுலபமாக வெற்றி பெறலாம் எனத் தலைவரிடம் மண்டல பொறுப்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு சொல்லியதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். 

-கிங்