வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!

ss

மிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கிய அரசு, தற்போது கடலூர் -விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 ரூபாய் வழங்குகிறது. விவசாய நிலங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்று அறிவித்துள்ளது. "இந்த இழப்பீடுகள் போதாது' என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகளும், பொதுமக்களும். விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து பயிர் நாசமானதோடு, நிலங்களை மண் மூடிவிட்டது. அதை சீர்படுத்த இந்தத் தொகை போதாது என்று குமுறுகிறார்கள். அதோடு கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரிக்கு அடுத்து திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் அமைந்துள்ளது. மிகப்பெரிய வெலிங்டன் ஏரிமூலம் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை நம்பி கொடிக்களம், கூடலூர், இறையூர், தொளார், மாளிகை கோட்டம், புத்தேரி, அருகேரி, கோனூர், வடகரை, மேலூர், மருதத்தூர், முருகன்குடி, வெண்கரும்பூர், தீவளூர், தாழநல்லூர் உட்பட 63 கிராமங்கள் பயனடைகின்றன. திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி யில் மூன்றில் இரண்டு பங்கு இதில் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட இந்த ஏரி, 1996ஆம் ஆண்டு முதல் பலவீனமடைந்து சரிந்து வந்தது. அதை சீர் செய்து பாச னத்தை பாதுகாக்க கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங் களை நடத்தினார்கள்.

vv

இந்த நிலையில், கடந்த 2006-2011, தி.மு.க. ஆட்சிக்கால

இந்த நிலையில், கடந்த 2006-2011, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அப்போதைய திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த செல்வப்பெருந்தகை, பெருமுயற்சியெடுத்து முதல்வர் கலைஞரிடம் கரையை சீர் செய்யு மாறு எடுத்துக் கூறி நிதி ஒதுக்கீடு செய்ய வைத்து, சுமார் 600 மீட்டர் நீளத்துக்கு கரையை சரிசெய்தனர். மிச்சமுள்ள கரைப் பகுதிகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் சரிசெய்வதாக அரசு உறுதியளித்தது. ஆனால் 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் இதைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் திட்டக்குடி தி.மு.க. சட்டமன்ற உறுப்பின ராக இருந்த சி.வி.கணேசன், 2018-ல்,சட்ட மன்றத்தில் நடைபெற்ற நிதி நிலை அறிக்கை விவாதத்தின்போது, "வெலிங்டன் ஏரிக்கரையை சரிசெய்து ஏரியைத் தூர்வாரி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டுமென்று' கோரிக்கை வைத்துப் பேசினார். அதற்கு பதிலளித்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வெலிங்டன் ஏரி பராமரிப்புப் பணிக்காக 36 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் ஏரி பராமரிப்புப் பணிகள் தொடங்கும் என்று அறிவித்தார். ஆனால் ஆட்சி முடியும்வரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், தற்போதைய பருவ மழையில், ஏரியின் நீர் கொள்ளளவு 28 அடியாக உயர்ந்துள்ளது. தண்ணீரைத் திறந்து பாசனம் செய்வது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து வெலிங் டன் நீர்த்தேக்க ஆய்வு மாளிகையில் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தினார்கள். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கொந்தளிப்புக்கான காரணம் குறித்து விசாரித்தோம்...

முருகன்குடி முருகன் நம்மிடம், "கல்வ ராயன் மலையிலிருந்து உற்பத்தியாகிவரும் வெள்ளாற்றின் குறுக்கே 1918-ல் தொழுதூர் அணை கட்டப்பட்டு, அதிலிருந்து கால்வாய் மூலம் வெலிங்டன் ஏரிக்கு நீர்வரத்து வருவதற்கு வழிவகுத்தனர். ஏரியின் கரையை உருவாக்கும் பணி 1916-ல் துவங்கி, 1923-ல் முழுமையாக முடிக்கப்பட்டு, 1924ஆம் ஆண்டு பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த ஏரி 100 ஆண்டுகள் பழமையானது. இந்த ஏரியின் கரை பலவீனமடைந்துள்ளது. ஏரி உருவாக்கத்திலிருந்து தற்போதுவரை ஏரியில் படிந்துள்ள வண்டல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. ஏரியின் முக்கியத்துவத்தை தமிழக அரசு உணரவில்லை. கடந்த பத்தாண்டுகளாக ஏரியில் தேக்கப்படும் தண்ணீரை அதிகாரிகள், விவசாயிகள் என்ற பெயரில் சிலரை கைக்குள் வைத்துக்கொண்டு, அவர்கள் சொற்படி முடிவெடுத்து, ஒரு பகுதிக்கு தண்ணீரைத் திறப்பதும், மறுபகுதிக்கு மறுப்பதுமாக இருந்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அராஜகப்போக்கைக் கண்டிக்கத்தான் தற்போது இங்கு கூடியிருக்கிறோம், எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஏரிக்கரையையும், உட்பகுதியையும் சீர்படுத்த வேண்டும். காலம் தாழ்த்தினால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

ll

"இந்த ஏரியின் பாசனக் கால்வாய்களின் தூரம் 21 கிலோமீட்டர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் அதன் கரைகள் உடைந்து நாசமாகியுள்ளன. சுமார் 40 ஆண்டுகளாக பாசன வாய்க்கால் களைப் பராமரிக்கவேயில்லை. அதேபோல் ஏரிக்கு நீர்வரத்து வரக்கூடிய தொழுதூர் அணைக்கட்டு வாய்க்கால், வெங்கணுர் ஓடை, ஆலம்பாடி ஓடைப் பகுதிகளில் புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால் மழைத்தண்ணீர் ஏரிக்கு வர தாமதமாகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி களிடம் பலமுறை புகாரளித்தும் அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏரி, குளங்களை சீர்படுத்த வேண்டுமென்று உயர் நீதிமன்றங்கள் அரசுக்கு எவ்வள வோ அழுத்தம் கொடுத்தும்கூட அரசாங்கம் செவிமடுக்க மறுக் கிறது'' என்கிறார் தொளார் வீராசாமி.

"50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியின் பராமரிப்புப் பணிக்காக நீர்க்காவலர், கரைக்காவலர் என்று இரு பிரிவாக சுமார் 35க்கும் மேற்பட்டவர்கள் பணியிலிருந்தனர். இவர்கள், காவல்துறையைப் போல் தினமும் ரோந்து சென்று பாசனக் கால்வாய், நீர்வரத்துக் கால்வாய்களைக் கண்காணிப்பார்கள். யாராவது ஆக்கிரமிப்பு செய்தாலோ, கரையை உடைத்தாலோ காவல்துறையில் புகாரளித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். தற்போது அப்படிப்பட்ட நிரந்தரப் பணியாளர்கள் ஒருவர்கூட இல்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் மட்டும் தற்காலிகமாக சில பணியாளர்களை வைத்து வேலை செய்கிறார்கள். எனவே, நிரந்தர ஊழியர்களை நியமித்து கால்வாய்களைப் பாதுகாக்க வேண்டும். தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டும் கடைமடை வரை செல்லாததற்கு சிதிலமடைந்த கரைகளே காரணம். திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் போன்ற நகர்ப்பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவு, சிக்கன், மட்டன் கழிவுகளைக் கொட்டி, பாசனக் கால்வாயை துர்நாற்றமிக்க சாக்கடைக் கால்வாயாக மாற்றிவருகிறார்கள். மேலும், வாய்க்காலில் மண்டியிருக்கும் புதர்களை அப்புறப் படுத்தாமல் தண்ணீரை மட்டும் திறந்து விட்டால் எப்படி பாசனத்துக்கு செல்லும்? வாய்க்கால்களை சீர்படுத்தினால் மட்டுமே தண்ணீர் கடைமடைவரை சென்று சேரும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீராகத்தான் வீணாகும்'' என்கிறார் உழவர் பேரியக்க ஞானவேல்.

"வெலிங்டன் ஏரி, நூறாண்டுகள் பழமையானது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு சிலைவைத்து கொண்டாடுகிறார்கள். இந்த ஏரியை உருவாக்கிய ஆங்கிலேயர் வெலிங்டன் பிரபுக்கு சிலை வைத்து நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். அதோடு, ஏரியை சீர்செய்து கரையோரத்தில் பூங்கா அமைத்து, இதை சுற்றுலாத்தலமாக உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்துவருகிறோம். அரசு கண்டுகொள்ளவே இல்லை. "நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வெலிங்டன் ஏரியைத் தூர்வாரி கரையை பலப்படுத்துவோம்' எனக் கூறித்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் நான்காண்டுகள் ஆனபிறகும் அதைப்பற்றி கண்டுகொள்ளவேயில்லை'' என்கிறார் உழவர் முன்னணி இயக்கத்தை சேர்ந்த வெண்கரும்பூர் கனகசபை.

இந்த நிலையில், தற்போதுள்ள 28 அடி தண்ணீரை பாசனத்திற்காக கடந்த 14ஆம் தேதி அமைச்சர் சி.வி.கணேசன் திறந்துவிட்டார். அவரிடம் ஏரியின் நிலை குறித்தும், கால்வாய்களை சீர்படுத்துவது குறித்தும் நாம் கேட்டோம். "முதல்வர் ஸ்டாலின் இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிச்சயம் வெலிங்டன் ஏரியைத் தூர்வாரவும், கரையை பலப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து கொடுப்பார்'' என்று மிகுந்த நம்பிக்கையோடு கூறிய அமைச்சர், தற்போது அனைத்துப் பகுதி விவசாய நிலங்களும் பாசனம்பெறும் வகையில் 120 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் விடப்படும் என்றும், இன்னும் சில தினங்களில் பாசனக் கால்வாய்களிலுள்ள அடைப்புகள் அகற்றப்பட்டு கடைமடைப் பகுதி வரை தண்ணீர் முழுமையாக சென்று பாசனம் பெறும்'' என்றும் உறுதியளித்தார்

nkn251224
இதையும் படியுங்கள்
Subscribe