வடமாநிலக் கொள்ளையர்களின் கொடூர அட்டகாசம் தமிழகத்தை பதட்டமாக்கி வருகிறது.
சம்பவம் 1: அண்மையில் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் இது. அமெரிக்காவில் இருக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய மயிலாப்பூர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோரை, அவர்களின் பயணக் களைப்பு தீருவதற்குள், அவர்களின் டிரைவரான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவன், தன் நண்பன் ரவிராயின் உதவியோடு, கடுமையாகத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்து, அவர்கள் உடலை, அவர்களின் பண்ணைத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டான். அவர்கள் வீட்டில் ரூபாய் 400 கோடி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நடத்தப்பட்டிருக்கிறது இந்தப் படுகொலைகள். இது தமிழகத்தையே உலுக்கிய துயர நிகழ்வாகும்.
சம்பவம்-2: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு. மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் புதுவீடு கட்டிவந்தார். அந்த வீட்டில் டைல்ஸ் பதிப்பதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது அமீரையும் 23 வயது பவன்குமாரையும் வேலைக்கு வைத்துள்ளார். அங்கேயே அவர்கள் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இந்தநிலை யில், ஒருநாள் இரவு பவன்குமார் படுகொடூரமாகக் கொல்லப்பட்டார். கொலையாளி அமீர் தப்பி ஓடி விட்டான். அவனைப் பற்றி எந்த அடிப்படை விபர மும் இல்லாததால் உளுந்தூர்பேட்டை போலீசார், கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகிறார்கள்.
சம்பவம்-3: அதே ஊரைச் சேர்ந்த லோக நாதன் என்பவர் வீட்டில் பட்டப்பகலில் காரில் வந்த ஒரு கும்பல், 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியது. அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், அந்த கேட்டை உடைத்துக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அந்த கார் குஜராத் மாநில பதிவு எண்ணைக் கொண்டது என்கிறார்கள்.
சம்பவம்-4: கோவை அன்னூர் ஊஞ்சல் குட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. அவரது மனைவி பெயர் ராஜாமணி. இருவரும் புது வீடு கட்டும் முயற்சியில் இருந்தனர். அந்த வீட்டுக்கு டைல்ஸ் பதிப்பதற்காக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சாம்ராட், அகஸ், பிந்து என்ற மூன்று பேரை வேலைக்கு வைத்துள்ளனர். அவர்களுக்கு தினசரி ராஜாமணி சமைத்துப் போட்டுள்ளார். அப்படிப்பட்ட அந்தப் பெண் மணியை ஈவு இரக்கமின்றிக் கொலை செய்துவிட்டு, அவரது கணவர் மயில்சாமி மீது மின்சாரத்தைப் பாய்ச்சிவிட்டு, நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துக்கொண்டு மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.
-இதுபோல் வடமாநிலத்தவரால் அதிகமாக இங்கே பகீர் க்ரைம்கள் அதிகரித்துவருவது தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாண்டியனிடம் கேட்டபோது, "இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் பகலில் வியாபாரிகள் போல் தெருவில் நடமாடு கிறார்கள். பகலில் நோட்டம் பார்த்துவிட்டு, இரவு நேரங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் கூட அரியலூர் மாவட்ட ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டுக் கதவு களை உடைத்து 80 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்களில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள னர். பிடிபட்ட அனைவரும் மத்தியப்பிரதேசம் தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழகத் தில் மட்டுமல்ல கர்நாடகா, ஆந்திரா, போபால், குஜராத், புனே உட்பட பல மாநிலங்களிலும் கொள்ளையடித்தது தெரியவந்திருக்கிறது. மேலும் அங்கிருந்து விமானத்தில் இங்கே வந்து அவர்கள் கொள்ளையடித்த தகவலும் கிடைத்திருக்கிறது.
மன்னர்கள் காலத்தில் வடநாட்டிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் இங்குள்ள கோயில் களையும் அரண்மனைகளையும் சூறையாடியது போல், தற்போது நவீன காலத்தில் விமானத்தில், ரயிலில், பஸ்ஸில் வந்து கொள்ளையடிக்கிறார்கள். எனவே, வெளி மாநிலத்தவர்கள் இங்கே வேலை கேட்டு வந்தால் அவர்களின் பெயர், புகைப்படம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட முழு தகவலையும் முதலில் வாங்கிக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் வெளி மாநிலத்தவர்கள் குறைந்த சம்பளத்தில் கடுமையான வேலைகளைச் செய்கிறார்கள். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் இளைஞர்கள் கடுமையாக உழைக்கத் தயாரானால் வட மாநிலத்தவர்களுக்கு இங்கே எந்த வேலையும் இருக்காது''’ என்கிறார் அழுத்தமாக.
ஓய்வுபெற்ற காவல் துறைக் கண்காணிப்பாளர் வெங்கடாச்சலபதியோ, "வட மாநிலங் களில்
வறுமை அதிகம். போதிய வேலைவாய்ப்பு அங்கே இல்லை. அதனால் தான் அவர்கள் தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வருகிறார்கள். அப்படி வருபவர்கள் இங்குள்ள மக்கள் வசதியாக வாழ்வதைப் பார்க்கிறார்கள். அதைப் போல வாழ ஆசைப்பட்டு, சமூக விரோதச் செயல்களில் இறங்கிவிடுகிறார்கள். எனவே, வட மாநிலத்தவர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்ப வரவு, செலவு, பணம், நகை போன்ற பரிமாற்றங்களை அவர்களுக்கு தெரியும் அளவிற்குச் செய்யக்கூடாது. அவர்களிடம் நிச்சயமாக குறிப்பிட்ட இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் நல்லது. அதேபோல் பெரிய வீடுகள், தெருக்கள் போன்ற முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்த வேண்டும்''” என்கிறார் அக்கறையாய்.
தற்போது, தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர் கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மேற் கொண்டிருக்கிறது. யாரும் விடுபடாத வகையில் அவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. இதன்மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் காவல்துறையினர்.
கவனமும் தெளிவும் இருந்தாலே, நம்மை முற்றுகையிடும் பெரும்பாலான குற்றச் செயல்களில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள்.