ஒரே நாளில் இடி மின்னலுக்கு மட்டும் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 74 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரின் பழமைவாய்ந்த கோட்டைகளில் ஒன்று அமேர். இந்த கோட்டை முன்பும் கண்காணிப்பு கோபுரத்தில் நின்றபடியும் மின்னலுடன் செல்ஃபி எடுக்க முயன்ற 11 பேர், மின்னல் தாக்கி இறந்துள்ளனர். கண்காணிப்புக் கோபுரத்தில் இருந்து மின்னலுடன் செல்பி எடுக்க முயன்றவர்களில் சிலர் நெருக்கமாக வெட்டிய மின்னலுக்குப் பயந்து கோபுரத்திலிருந்து குதித்ததில் பலியாகியுள்ளதாகவும் தெரிகிறது.
உத்தரப்பிரதேசத்தில் இடி மின்னலுக்குப் பலியான 41 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகளாவர். மழைக்
ஒரே நாளில் இடி மின்னலுக்கு மட்டும் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 74 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரின் பழமைவாய்ந்த கோட்டைகளில் ஒன்று அமேர். இந்த கோட்டை முன்பும் கண்காணிப்பு கோபுரத்தில் நின்றபடியும் மின்னலுடன் செல்ஃபி எடுக்க முயன்ற 11 பேர், மின்னல் தாக்கி இறந்துள்ளனர். கண்காணிப்புக் கோபுரத்தில் இருந்து மின்னலுடன் செல்பி எடுக்க முயன்றவர்களில் சிலர் நெருக்கமாக வெட்டிய மின்னலுக்குப் பயந்து கோபுரத்திலிருந்து குதித்ததில் பலியாகியுள்ளதாகவும் தெரிகிறது.
உத்தரப்பிரதேசத்தில் இடி மின்னலுக்குப் பலியான 41 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகளாவர். மழைக்குத் தயங்கி மரங்களின் கீழ் ஒதுங்கியவர்கள் சிலரும் மரத்தின்மேல் மின்னல் இறங்கியதில் பலியாகியுள்ளனர். இதையடுத்து மத்திய அரசு இந்த விபத்தில் இறந்தவர் களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்த வர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கியுள்ளது.
இடி மின்னலின்போது இந்தியாவில் பெரிய அளவில் உயிரிழப்புகள் இருப்பது வழக்க மானதுதான். எனினும் சமீபகாலமாக இத்தகைய இடி மின்னல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. சராசரியாக இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டாயிரம் பேர் வரை பலியாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய இடி-மின்னல் பலிகள், மேற்குறிப்பிட்ட உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களோடு, ஒடிசா, பீகார் மாநிலங்களிலேயே அதிகளவில் ஏற்படு கின்றன. 2019-ல் இந்தியாவில் இயற்கை சார்ந்த விபத்துகளில் 8,145 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் 35.3 சதவிகித விபத்துகள் மின்னலாலும், 15.6 சதவிகித விபத்துகள் சூரிய வெப்பத் தாக்குதலாலும், 11.6 சதவிகித விபத்துகள் வெள்ளச் சேதங்களாலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குளோபல் வார்மிங் எனப்படும் வெப்ப நிலை அதிகரித்தலுக்கும், மின்னல், மழை வெள்ளம், கோடை போன்றவற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்தலுக்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள் சுற்றுச்சூழல் அறிஞர்கள். புனேயிலுள்ள, இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையம் கடந்த ஐம்பதாண்டுகளில் மின்னல் காரணமாக ஏற்படும் மரணங்கள் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, "இது ஏதோ எப்போதோ நடப்பது அல்லது மற்ற மாநிலங்களில் நடப்பது என்று அலட்சியப்படுத்தாமல், ‘"வருமுன் காக்கும்' முன்யோசனை முயற்சிகளில் ஈடுபடவேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர கடமையாகும் என்று கூறி தமிழக அரசுக்குச் சில ஆலோ சனைகளையும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சகமும், முதலமைச்சரும் இந்த ஆபத்தான போக்குக்குரிய தடுப்பணை முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
கடல் வெப்பமாவதால், ‘Heat Dome’ உருவாகி, அமெரிக்கா, கனடா வடமேற்குப் பகுதியை அனலாய்த் தகிக்கவைக்கிறது. 120 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வரலாறுகாணா வெப்பம் தாக்கி அமெரிக்கா, கனடாவில் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டுள்ளன. கடல் மட்டமும், கடல் வெப்பமும் உயருவதால் உலகளாவிய கடற்கரைகளில் புயல் காற்றின் தீவிரமும், உயர் அலைகளின்போது பல அடிகள் கடலலைகள் உயர்ந்து மக்கள் வாழும் பகுதிகளை அழிப்பதும் உலகின் பல பகுதிகளில் நடந்துகொண்டுள்ளன. தமிழ்நாடு நீளமான கடற்கரைப் பகுதியை உடைய மாநிலம்.
20 ஆண்டுகளில் இதன் தீவிரம் அதிகரிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்த காலகட்டம் மிக அருகில் உள்ளது என்பதால், தமிழ்நாடு சூழியல் பேரிடர் பற்றிய கல்வியையும், கருத்தாக்கத்தையும் முன்னின்று பரப்ப ஏற்பாடு செய்யவேண்டும். முக்கியமாக, தமிழ்நாடு அரசு, இந்தியாவிற்கே வழி காட்டும் வகையில், ‘‘தமிழ்நாடு சூழியல் ஆணை யம்‘’ போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
வெப்பச் சலனம் பல வகையில் மக்களின் தொடர் தொல்லையாகவும், பலி பீடமாகவும் ஆகும் பேரபாயம் உண்டு. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதனைப் பாடத் திட்டங்களிலும் அறிவுறுத்ட அத்துணை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்