எல்லாப் பக்கத்திலும் தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்களுக்கு தாரைவார்க்கும் போக்கு அதிகரித்து வரும் நிலை யில், சமீபத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையத் திலும் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறி போயிருக்கின்றன.
சென்னை அருகே கல்பாக்கம் இந்திராகாந்தி அணுமின்நிலையம் 1983ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இரண்டு அலகு களில் புளூட்டோனியத்தை பயன்படுத்தி 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 7 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையிலும், தேவைக்கேற்ப தேர்வுசெய்யப்படும் பயிற்சிப் பணியாளர்கள் என்ற வகையிலும் 5 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். பயிற்சிப் பணியாளர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே இதுவரை முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் ஐ.டி.ஐ. முடித்த பயிற்சிப் பணியாளர்கள் 180 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 170 பேர் வெளிமாநிலங் களைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளி யாகியது. தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் மட்டுமே தேர்வாகி இருக்கிறார்கள். இதில் மிக முக்கியமான விஷயம் பணியாளர்களின் சீருடையும் காவி வண் ணத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத அணுமின்நிலைய பணியாளர்…""சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் எவ்வளவோ ஐ.டி.ஐ. படித்த மாணவர்கள் இருக்கிறார்கள். வெளிமாநில ஆட்களைச் சேர்ப்ப தில் திட்டமிட்ட சதி இருப்பதாக தெரிகிறது. நிரந்தரப் பணிக்கு ஆட்கள் எடுக்கும்போது பயிற்சிப் பணியாற்றியவர்களுக்கே முன்னுரிமை தருவார் கள். தமிழர்களை பயிற்சி பணியில் புறக்கணித்தால், நிரந்தரப்பணிக்கும் அவர்களை எளிதில் தவிர்க்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு என்ற சந்தேகம் எழுகிறது. தோட்ட வேலைக்குக் கூடவா வட மாநிலத்தவர்களை பணியமர்த்துவார்கள்?'' என்றார்.
தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய-மாநில நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன்,…""தமிழ்நாட்டிலே தமிழர்களை புறக் கணிக்கிறது மோடி அரசு. திட்டமிட்டு தமிழர்களின் வேலைவாய்ப்பையும், கல்வியையும் பறிக்கிறது. சொந்த மண்ணிலே தமிழன் அகதியாக்கப்படு கிறான். தமிழகம் காவிமயம் ஆக்கப்படுகிறது. அதன் முன்னோட்டம்தான் இந்த காவிச் சீருடை. சில ஆண்டுகளிலே மிகப்பெரிய ஆபத்துகளை நாம் சந்திக்கப்போகிறோம். அதற்கு முன்பாக தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்''’என்றார்.
இது தொடர்பாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இயக்குநர் அருண்குமார் பாதூரியை பலமுறை தொடர்புகொண்டும் பதில்பெற முடியவில்லை.
-அரவிந்த்