தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப் பாட்டில் வடசென்னையில் புதிதாக தொடங்கப்பட விருக்கும் அனல் மின்நிலை யங்களில் உற்பத்தியைத் துவக்குவதற்கு முன்பாக சாம்பல் கிணறுகளை கட்டமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எரிசக்தித் துறையினரிடம் எதிரொலிக் கிறது.
நம்மிடம் பேசிய தமிழக எரிசக்தி துறையினர், "தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமாக வடசென்னையில் 2 அனல்மின் நிலையங்கள் இருக்கின்றன. இதி லிருந்து தினசரி 5,479 டன் நிலக் கரிகள் எரிக்கப்பட்டு 660 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படு கிறது. இதன்மூலம் 1,972 டன் சாம்பல் கழிவுகள் வெளியேறுகிறது.
இப்படி வெளியேற்றப்படும் சாம்பல்கள், சாம்பல் கிணறுகளில் சேமிக்கப்படுகிறது. ஆனால், இந்த சாம்பல்களின் குவியல் களைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அந்த கிணறுகள் போதுமானதாக இருக்கவில்லை. இந்த நிலையில், வடசென்னை அனல் மின
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப் பாட்டில் வடசென்னையில் புதிதாக தொடங்கப்பட விருக்கும் அனல் மின்நிலை யங்களில் உற்பத்தியைத் துவக்குவதற்கு முன்பாக சாம்பல் கிணறுகளை கட்டமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எரிசக்தித் துறையினரிடம் எதிரொலிக் கிறது.
நம்மிடம் பேசிய தமிழக எரிசக்தி துறையினர், "தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமாக வடசென்னையில் 2 அனல்மின் நிலையங்கள் இருக்கின்றன. இதி லிருந்து தினசரி 5,479 டன் நிலக் கரிகள் எரிக்கப்பட்டு 660 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படு கிறது. இதன்மூலம் 1,972 டன் சாம்பல் கழிவுகள் வெளியேறுகிறது.
இப்படி வெளியேற்றப்படும் சாம்பல்கள், சாம்பல் கிணறுகளில் சேமிக்கப்படுகிறது. ஆனால், இந்த சாம்பல்களின் குவியல் களைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அந்த கிணறுகள் போதுமானதாக இருக்கவில்லை. இந்த நிலையில், வடசென்னை அனல் மின் நிலையம் ஸ்டேஜ்-3 மற்றும் எண்ணூர் நஊழ நபடட ஆகிய 2 அனல் மின்நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன.
இதன்மூலம் வெளியேற்றப்படும் சாம்பல்களை சேமிக்கவோ, பரா மரிக்கவோ, பாதுகாக்கவோ இயலாத சூழல் இருக்கிறது. அப்படியானால், இங்கு வெளியேற்றப்படும் சாம்பல் களை வடசென்னை அனல்மின் நிலையங்களில் இருக்கும் சாம்பல் கிணறுகளில்தான் சேமிக்க முடியும். ஆனால், இங்குள்ள கிணறுகள் ஏற்கனவே நிரம்பி வழிகிறது. அப்படியிருக்கையில், புதிய அனல் மின் நிலையங்களில் வெளியேற்றப்படும் சாம்பல்களை எப்படி சேமிக்க முடியும்? முடியாது.
அதனால் புதிதாக உற்பத்தியை விரைவில் தொடங்கவிருக்கும் அனல் மின் நிலையங்களில் சாம்பல் கிணறுகளை கட்டமைக்கும் பணிகளை மின்சார வாரியம் உடனடியாகத் தொடங்க வேண்டும். இல்லையெனில், சாம்பல் கழிவு களை சேமித்து வைக்க கிணறுகள் இல்லாமல் அவை பொதுவெளி யில் அல்லது கடல் கழிமுகப் பகுதிகளில் வெளியேற்றப்படும் சூழல் உருவாகும்.
அந்தநிலை உருவானால் சாம்பல் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும். கழிமுகப் பகுதிகளில் கடல்நீரில் கலந்து மீன்வளமும் பாதிக்கப்படும். மேலும், மீன்களின் இனப்பெருக்கம் குறையும்; மீன்கள் உயிரிழப்பதும் ஏற்படும். அதனால், பொதுமக்களின் நலன் கருதி சாம்பல் கிணறுகளைக் கட்டமைக்கும் பணிகளைத் துவக்குவதும், ஏற்கனவே இருக்கும் சாம்பல் கிணறுகளை வலிமைப் படுத்துவதும் அவசியம். இந்த விசயத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து கவனம் செலுத்த வேண்டும். இல்லை யேல், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அரசுக்குத்தான் கெட்டபெயர் உருவாகும்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் விசாரித்தபோது, "தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளின் படி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வட சென்னை பகுதிகளில் காற்று மாசுபடுவதற்கு அனல் மின் நிலையங்கள் ஒரு காரணமாக இருக்கின்றன. இதற்கு காரணம் சாம்பல் கிணறுகள் சரி செய்யப்படாமல் இருப்பதுதான். இப்படி சரி செய்யப்படாததால், சாம்பல் துகள்களில் இருந்து பறக்கும் நுண் துகள்கள் காற்றில் கலப்பதால், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/vadachennai1-2025-11-13-17-11-22.jpg)
இதனைக் கருத்தில் கொண்டுதான் சாம்பல் கிணறுகள் கட்டப்பட்டன. தற்போதுள்ள அந்த கிணறுகள் 1996-ல் கட்டப்பட்டது. இதன் தடுப்பணையின் உயரத்தை 1 மீட்டர் அதிகரித்தனர். தற்போது சாம்பல் கழிவுகள் வெளியேற்றப்படுவது எதிர் காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்பதால், இதன் உயரத்தை மேலும் உயர்த்துவதற்கான அவசர நிலையும் உருவானது.
இதனையடுத்து தடுப்பணையை உயர்த்தவும் வலிமைப்படுத்தவும் ஆலோசனை வழங்க கடந்த 2019 பிப்ரவரியில் ஐ.ஐ.டி. நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தது மின்சார வாரியம். இதனை பரிசீலித்த ஐ.ஐ.டி. நிறுவனம், சாம்பல் தடுப்பணையை தற்போதைய உயரத்திலிருந்து மேலும் 6 மீட்டருக்கு உயர்த்த வேண்டும் என 2021, அக்டோபரில் ரிப்போர்ட் தந்தது. ஆனால், அதிகாரிகளின் கூட்டு விவாதத்தில், தடுப்பணையை மேலும் 6 மீட்டர் உயர்த்தும் பணிகளில் ஏற்படும் சில சிக்கல்களை தெளிவுபடுத்துவதற்காக ஐ.ஐ.டி. நிறுவனத்திடம் இறுதி அறிக்கை கேட்கப் பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான், புதிதாக உற்பத்தியை தொடங்கவிருக்கும் வட சென்னை அனல் மின் நிலையம் ஸ்டேஜ்-3 மற்றும் எண்ணூர் நஊழ நபடட -மின் நிலையங்களில் சாம்பல் கிணறுகளை கட்டமைக்கும் தேவையும் அவசியமும் அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை. அதனால் மக்களின் நலன் கருதியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் சாம்பல் கிணறுகளை கட்டமைக்கும் பணிகளை மின்சார வாரியம் விரைந்து துவக்க வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்கள் தமிழ்நாடு எரிசக்தித் துறை அதிகாரிகள்.
-இளையர்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us