பூர்வீக சென்னை யின் அடையாள மாக இருப்பது வட சென்னை பாராளுமன்றத் தொகுதி. இத்தொகுதியில், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத் தூர், திரு.வி.க. நகர், இராயபுரம் என 6 சட்டமன்றத்தொகுதிகள் அடங்கியுள்ளன. இப்பகுதியில், கழிவுநீர்க் கால்வாயை செம்மைப் படுத்தி, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காதபடி சுகாதாரமாக மாற்றவேண்டும் என்பதும், குடிநீர்ப் பிரச்சனை இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுமே பிரதான கோரிக்கைகளாக உள்ளன.
தி.மு.க.வை பொறுத்தவரை, சென்ற முறை வெற்றிபெற்ற டாக்டர் கலாநிதி வீராசாமிக்கே மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படலாம் என் கிறார்கள். வடசென்னை பகுதியில் அரசு நிறுவனங் கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்று வடசென்னை தொகுதி மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பேருந்து நிழற் குடை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடைகள், பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைக்கு தேவை யான மருத்துவ உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்துகொடுத்துள்ளதால், வட சென்னை தொகுதி மக்கள் மத்தியில் இவரது பெயர் பரிட்சயமாக உள்ளதாம். அதேபோல, தி.மு.க. செய்தித் தொடர் பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஏற்கெனவே 2009-ல் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தினால் மீண்டும் இந்த முறை வாய்ப்பு கேட்டுள்ளாராம். ஆனால் இவருக்கென கட்சி ஆதரவாளர்கள் இல்லாத காரணத்தாலும், அது அவருடைய தொகுதியாக இல்லாத காரணத்தாலும், அவருக்கு வாய்ப்புக் கொடுக்க கட்சித்தலைமை யோசிக்கிறதாம். அதேபோல மருதுகணேஷ் ஏற்கனவே ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் அப்பகுதி மக்களிடையே தற்போது பரிட்சயமான வராக வலம்வருகிறார். அவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிட வாய்ப்பை எதிர் பார்த்தபடி இருக்கிறார். தி.மு.க. சார்பில் நடைபெற்ற நேர்காணலுக் குப்பின் கட்சித்தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. கட்சித்தலைமை மீண்டும் கலாநிதி வீராச் சாமிக்கே வாய்ப் பை வழங்கு மென்று எதிர் பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. சார்பில் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக ராயபுரம் மனோ விற்கே அதிகப் படியான வாய்ப்பு உள்ள தாம். தலைமை அறிவிப்பதற்கு முன்பே இந்த பகுதியிலுள்ள ஆறு தொகுதி களிலும் ஆட் டோ டிரைவர் கள், கூலித் தொழிலாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சீருடை, நலத்திட்ட உதவி என வழங்கி வருகிறார். ராயபுரம் மனோ ஏற்கனவே காங்கிரஸில் இருந்தபோதிலிருந்தே இப்பகுதியி லுள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரியும் என்பதால் இம்முறை அ.தி.மு.க.வில் நிச்சயம் இவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள். அதேபோல, வழக் கறிஞர் இணை செயலாளர் பாலமுருகன், தன்னுடைய சொந்த மண்ணில் தொடர்ந்து இந்த மக்களுக்காகப் பணிபுரிந்து வருபவராகவும், முன்னாள் மாஜி அமைச்சரின் ஆதரவாள ராகவும் உள்ள இவருக்கு வாய்ப்பு கிட்டினால் சந்தோசம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாராம்.
தி.மு.க. முன்னாள் துணை பொதுச்செய லாளரும், மறைந்த முன்னாள் அமைச்சரு மான சற்குண பாண்டியனின் மருமகளும், 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் தற்போது தி.மு.க.விலிருந்து விலகி அ.தி. மு.க.வில் இணைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். அந்த வகையில், இவர் திருநெல்வேலி தொகுதியைக் கேட்டிருந்தாலும், தலைமை, வடசென்னை யைத்தான் தருவோமென்றாலும், தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன் என்ற மனப்பக்குவத்தில் உள்ளாராம்.
பா.ஜ.க. சார்பில் பால் கனகராஜ் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்க றிஞரான இவரை, வடசென்னை பகுதியில் அதிக அளவு வக்கீல்களுக்கும் நன்றாகத் தெரியும். பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள். பா.ஜ.க.வின் தமிழக மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் வடசென்னை தேர்தல் இணைப்பொறுப்பாளராக உள்ள பிரசாந்த் போட்டியிடுவதற்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இவருக்கும் வட சென்னை மிகுந்த பரிட்சயமான தொகுதியாக உள்ளதால் தனக்கு வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறார்.
அதேபோல கூட்டணிக் கட்சியாக அமையும் பட்சத்தில் அ.ம.மு.க.வாக இருந்தால் முன்னாள் சட்ட அமைச்சர் செந்தமிழனுக்கும், ஓ.பி.எஸ். அணியாக இருந்தால் ஜே.சி.டி.பிரபாகருக்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தனித்து களம் காணும் பகுஜன் சமாஜ் கட்சியின் இளைஞர் அணி பொறுப்பாளர் இக்பால் நிற்பதாகவும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் முன்பு நின்ற காளியம்மாளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள்.
என்னதான் பல கட்சிகள் போட்டி யிட்டாலும் இங்கு அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தான் போட்டி நிலவும் என்கிறார்கள்.