சமீபத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம் பகுதியில் ஹெலிகாப்டர் சகோதரர் கள் மீதான பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகள். இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து விரிவாக நக்கீரனில் எழுதியிருந்தோம்.
"ஹெலிகாப்டர் சகோதரர்களை கைது செய்யக்கூடாது என்பதற்காக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய தேஷ்முக் சேகர் சஞ்சய் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றார்' என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரடியாக விசாரணை செய்ததில், மாவட்ட கண்காணிப்பாளரின் தனி ஆய்வாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட தனிப்பட்ட லாபம் பெறப்பட்ட தகவல் களின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப் பேட்டை மாவட்ட காவல் கண்காணிப் பாளராக நியமிக்கப் பட்டார். இதற் கான உத்தரவை உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகரன் பிறப்பித்திருந்தார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தேஷ்முக் சேகர், தஞ்சைக்கு வரவேண்டும் என்று விருப்பப்பட, அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் துண்டுச்சீட்டில் தேஷ்முக் பெயரை எழுதிக் கொடுத்து அவரை தஞ்சைக்கு மாற்றினார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆதரவோடு அவர் தொடர்ந்து தஞ்சை மாவட் டத்தில் எஸ்.பி.யாக நீடித்துவந் தார். இதனிடையே கும்ப கோணம் ஹெலிகாப்டர் சகோ தரர்களிடம் லஞ்சம் பெறப்பட்ட தாக எழுந்த குற்றச்சாட்டில், அவர் ராணிப்பேட்டைக்கு பணி யிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அவர் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மதுரை காவலர்கள் பயிற்சி முகாமில் பட்டாலியன் கமாண்டண்ட்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.