கடந்த ஜன.29-பிப்.01 இதழில் "கொரோனா ஊரடங்கிலும் கோலாகலம்! நெடுஞ்சாலைத்துறை நெரு டல்!'’என்னும் தலைப்பில், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி, திருநெல்வேலியில் நடந்த கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியனின் மகள் திருமணத்தில் தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகர் கலந்துகொண்டது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
அத்திரு மணத்தில், ஒவ்வொரு டிவிஷனிலும் ரூ.5 லட்சம் வீதம் மொய் அளிக்கப்பட்டது குறித்து விசாரிப்பதாக தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் நம்மிடம் தெரிவித்திருந்த நிலையில், அவரே
கடந்த ஜன.29-பிப்.01 இதழில் "கொரோனா ஊரடங்கிலும் கோலாகலம்! நெடுஞ்சாலைத்துறை நெரு டல்!'’என்னும் தலைப்பில், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி, திருநெல்வேலியில் நடந்த கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியனின் மகள் திருமணத்தில் தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகர் கலந்துகொண்டது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
அத்திரு மணத்தில், ஒவ்வொரு டிவிஷனிலும் ரூ.5 லட்சம் வீதம் மொய் அளிக்கப்பட்டது குறித்து விசாரிப்பதாக தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் நம்மிடம் தெரிவித்திருந்த நிலையில், அவரே ரூ.1 கோடி வரை, தனக்கான பெர்சன்டேஜ் தொகையை வசூலித்துவிட்டே கிளம்பினார் என அடுத்த தகவல் அத்துறையினரிடமிருந்து கிடைத்தது. ஏதோ பெரிய விவகாரமாக இருக்கும்போல என்று விசாரணையில் இறங்கினோம்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கான சாலைகள் மற்றும் பாலங்களுக்கு, 2021-22 ஆம் ஆண்டுக்கான விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய மாவட்ட சாலைகள், பிற மாவட்ட சாலைகள், மதகுகள், பாலங்கள் விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துத லுக்காக மொத்தம் ரூ.7500 கோடி செலவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், சுமார் ரூ.4100 கோடி வரை செலவிடுவது, தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகரின் கீழ் வருகிறது.
‘நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து மட்டங்களிலும் 46 பெர்சன்டேஜ் வரை சுரண்டப் பட, ஒதுக்கீட்டில் 54 சதவீத தொகை மட்டுமே சாலைகள் மற்றும் பாலங்களுக்காக செலவிடப்படு கிறது. ஒதுக்கீட்டில் பாதிக்குப்பாதி ஊழலில் கரைந்துவிடும்போது, சாலைகளோ, பாலங் களோ எப்படி தரமான தாக இருக்கும்?’ என தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திர சேகரை தொடர்பு கொண்டு கேட்டோம். "டிவிஷனுக்கு ரூ.5 லட் சம் மொய் தந்தார்களா என்று விசாரித்தேன். அப்படி எதுவும் நடக்க வில்லை. அந்த கல்யாணத்துக்கு வந்ததே 100 பேர்தான். கூட்டம் கம்மியாகவே இருந்தது. நான் அரை மணி நேரம் மட்டுமே அந்த ஃபங்ஷனில் கலந்துகொண்டேன். திருநெல்வேலியில் ரூ.1 கோடி பெர்சன்டேஜ் தொகை வசூலித் தேன் என்று குற்றம்சாட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு எந்த பெர்சன்டேஜும் கிடையாது. இப்படிச் சொல்வது முரண்பாடா இருக்கு. இதுகுறித்து போனில் பேசாதீங்க சார்..''’என்று லைனைத் துண்டித்தார். இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்-ஆப் மூலம் நாம் அனுப்பிய கேள்விகளுக்கும், அவரிடமிருந்து பதிலில்லை.
குற்றச்சாட்டுகள் எழுந்ததாலேயே, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் இரவுநேர ஆய்வு மேற்கொண்டதோடு, அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக, பழைய சாலைகளைப் பெயர்த்தெடுத்த பிறகே புதிய சாலை போடவேண்டும்.” என்று எச்சரித்துள்ளார். அமைச்சர் எ.வ.வேலுவும், அளவீட்டு கருவி களைக்கொண்டு சாலைப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
ஆட்சி மாறியதால், நெடுஞ்சாலைத்துறையில் காட்சிகள் மாறவேண்டும் என்பதே, பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.