மதிக்காத மா.செ.க்கள்! கொதிக்கும் இளைஞரணி! உதயநிதி புது வியூகம்!

ss

தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன் பாடுகளை இறுதி செய்ய முடியாமல் இழு பறியில் இருந்தாலும், தேர்தலையொட்டிய அரசியல் பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது தி.மு.க. குறிப்பாக, இளைஞரணி நிர்வாகிகளிடம் உதயநிதி நடத்திய ஆலோசனைகள், "பாசிசம் வீழட்டும்; இந்தியா வெல்லட்டும்' என்கிற முழக் கத்துடன் தமிழகம் முழுவதும் நடத்தும் பொதுக்கூட் டங்கள் என பிரச்சாரத்தை தி.மு.க. துவக்கியிருக்கிறது. தி.மு.க.வின் இந்த வேகம் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை பதற வைத்துக்கொண்டிருக்கிறது.

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திமுடித்த அமைச்சர் உதயநிதி, மாவட்டவாரியாக இளைஞரணி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு நேரமும் சூழலும் ஒத்துழைக்க வில்லை.

xx

இந்த நிலையில், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப் பாளர்களை தனது சென்னை இல்லத் துக்கு அழைத்து கடந்த 14-ந் தேதி முதல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் உதயநிதி. இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஓரிரு வரைத் தவிர பெரும்பாலானோர் மீது குற்றச்சாட் டுகளை பதிவு செய்திருக்கிறார்கள் இளைஞரணியினர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரணியினர் பலரிடம் நாம் விசாரித்தபோது, ‘’நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை உதயநிதியின் பொறுப்பில் கொடுத்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின். அதனால், 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற வைக்கவேண்டிய

சுமை உதயநிதியின் தோளில் ஏறியிருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள், தி.மு.க. வுக்கும் கூட்டணி கட்சிகளுக்குமிடையே ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட மிக முக்கிய பிரச்சினைகளை மட்டுமே கட்சி யின் தலைமை கவனித்துக் கொள்ளும். அதேசமயம், தேர்தல் பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, வெற்றிபெற வைக்

தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன் பாடுகளை இறுதி செய்ய முடியாமல் இழு பறியில் இருந்தாலும், தேர்தலையொட்டிய அரசியல் பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது தி.மு.க. குறிப்பாக, இளைஞரணி நிர்வாகிகளிடம் உதயநிதி நடத்திய ஆலோசனைகள், "பாசிசம் வீழட்டும்; இந்தியா வெல்லட்டும்' என்கிற முழக் கத்துடன் தமிழகம் முழுவதும் நடத்தும் பொதுக்கூட் டங்கள் என பிரச்சாரத்தை தி.மு.க. துவக்கியிருக்கிறது. தி.மு.க.வின் இந்த வேகம் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை பதற வைத்துக்கொண்டிருக்கிறது.

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திமுடித்த அமைச்சர் உதயநிதி, மாவட்டவாரியாக இளைஞரணி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு நேரமும் சூழலும் ஒத்துழைக்க வில்லை.

xx

இந்த நிலையில், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப் பாளர்களை தனது சென்னை இல்லத் துக்கு அழைத்து கடந்த 14-ந் தேதி முதல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் உதயநிதி. இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஓரிரு வரைத் தவிர பெரும்பாலானோர் மீது குற்றச்சாட் டுகளை பதிவு செய்திருக்கிறார்கள் இளைஞரணியினர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரணியினர் பலரிடம் நாம் விசாரித்தபோது, ‘’நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை உதயநிதியின் பொறுப்பில் கொடுத்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின். அதனால், 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற வைக்கவேண்டிய

சுமை உதயநிதியின் தோளில் ஏறியிருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள், தி.மு.க. வுக்கும் கூட்டணி கட்சிகளுக்குமிடையே ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட மிக முக்கிய பிரச்சினைகளை மட்டுமே கட்சி யின் தலைமை கவனித்துக் கொள்ளும். அதேசமயம், தேர்தல் பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, வெற்றிபெற வைக்கும் வியூகம், பிரச்சார யுக்தி என மற்ற பணிகளை கவனித்துக் கொள்ளவிருக்கிறார் உதயநிதி.

அதேபோல, இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வில் 50 சதவீத இடஒதுக்கீடு இளைஞரணிக்கு வேண்டும் என உதயநிதி விரும்பினார். அதாவது, தி.மு.க. போட்டியிடும் எண்ணிக்கையில் 50 சதவீதம் வேண்டும் என திட்டமிட்டு தலைவரிடம் (ஸ்டாலின்) ஏற்கனவே பேசியிருக்கிறார். மேலும், சீனியர்கள் சிலரின் வாரிசுகளுக்கு இந்த முறை சீட் ஒதுக்கக் கூடாது எனவும் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கக்கூடாது என்பதே உதயநிதியின் ஸ்டேண்ட்.

ஆனால், இளைஞரணிக்கு மட்டுமே அதிக இடங்களை ஒதுக்கிட முடியாது, மற்ற அணியில் இருப்பவர்களையும் பரிசீலிக்க வேண்டும், சீனியர் களை புறக்கணிக்கக்கூடாது, சீனியர்களின் சிபாரிசு களுக்கும் முன்னுரிமைத் தரவேண்டும் என்றெல்லாம் உதயநிதியிடம் சொல்லிய தலைவர், இளைஞர் அணிக்கு 5 சீட்டுகள் தரலாம் என தெளிவு படுத்தியிருக்கிறார்.

அதனால் இளைஞரணிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மக்களுக்கு அறிமுகமான, மக்களிடம் நெருக்கமாக இருக்கிற, கட்சிக்காக உழைத்த, நல்ல பேச்சாளராக இருக்கிற நபர்களை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் உதயநிதி. அதற்கேற்ப, இளைஞரணியின் செயல் பாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் எப்படி இருந்துள்ளது என்பதை தனியாக ஆய்வு செய்து ஒரு ரிப்போர்ட் வைத்திருக்கிறார். இந்த ரிப்போர்ட்டோடு ஒத்துப்போகிற இளைஞரணி நிர்வாகிகளை அடையாளம் காண்பதற்காகத்தான் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் மாவட்டம் வாரியாக தற்போது ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்''’என்று விவரித்தனர்.

மேலும் நம்மிடம் பேசிய அவர்கள், "இளைஞரணியின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை அறிய, அவர்கள் பராமரிக்கும் மினிட் புத்தகங்களையும் ஆலோசனைக் கூட்டத்துக்கு எடுத்துவர கட்டளையிட்டிருந்தார் உதயநிதி. ஆலோசனையின்போது, அந்த மினிட் புத்தகங்களை ஆய்வு செய்த அவர், பலருக்கும் பாராட்டு தெரிவித்த துடன் அதனை சம்பந்தப்பட்ட மினிட் புத்தகத்தில் பதிவும் செய்திருக்கிறார். கட்சி தலைமையின் உத்தரவின்படி, வருடத்துக்கு இத்தனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில மாவட் டங்களில் அத்தனைக் கூட்டங்கள் நடத்தப்படாததை மினிட் புத்தகங்களில் கண்டு அதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

uu

இதனையடுத்து, மா.செ.க்கள் ஒத்துழைப்பு எப்படி என்கிற பேச்சு வந்த போது, மா.செ.க்களுக்கு எதிராகப் புகார் சொல்லலாமா என பலரும் தயங்கிய நிலையில், எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசலாம்; யாரையும் தண்டிக்கப்போவதில்லை என உதயநிதி சொன்னதும்தான் மளமளவெனப் புகார்கள் விழுந்தன. பெரும்பாலான மா.செ.க்கள் ஒத்துழைப்ப தில்லை என சொன்னார்கள். இளைஞரணியின் வளர்ச்சி தங்களது அரசியலுக்கு செக் வைக்கும் என மா.செ.க்கள் நினைப்பதாகவும் சிலர் வெளிப்படுத்தினர். அதே சமயம், ஒத்துழைக்கக்கூடிய மா.செ.க்களை பற்றியும் பாரபட்சமின்றி தெரிவித்தார்கள். இதையெல் லாம் கேட்டுக்கொண்ட உதயநிதி, தலைவரிடம் இதைப்பற்றி விவாதிப்பதாகச் சொன்னார். தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பணிகளையும் ஆய்வு செய்தார் உதயநிதி''’என்று சுட்டிக்காட்டினார்கள். இந்த நிலையில், "பாசிசம் வீழட்டும்; இந்தியா வெல்லட்டும்!' எனும் முழக்கத் துடன், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்கிற தலைப்புடன் 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க.

கனிமொழி மற்றும் உதயநிதி தொடங்கி அமைச் சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள் ஆகியோர் இந்த பொதுக்கூட்டங்களில் சிறப்புரையாற் றியிருக்கின்றனர். ஒரு வாக்குச் சாவடிக்கு 10,000 என்ற அளவில் 6 லட்சத்து 80,000 பூத் கமிட்டி உறுப் பினர்களை நியமித்து தேர்தல் களப்பணிகளை முன் னெடுத்துவருகின்றனர். இந்த பூத் கமிட்டி உறுப் பினர்களுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும் ஒரு களமாக இந்த பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளன. திமுக வினரும் பொதுமக்களும் ஏராளமாகத் திரண்டிருந்தனர்.

தி.மு.க.வின் சாதனைகள், மத்திய மோடி அரசின் நயவஞ்சகம், தமிழகத்துக்கு நிதி குறைப்பு, தொகுதி மறுவரையறை எனும் பெயரில் தமிழக எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தல், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் நடக்கும் சதி ஆகியவைகள் பிரதானமாக பொதுக் கூட்டங்களில் எதிரொலித்தன. நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி.,”"மாநில அரசின் உரிமைகளையும் அடை யாளங்களையும் அழிக்கும் வகையில் திட்டங்களையும் மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறது மத்திய அரசு. அந்த திட்டங்களுக்கு புரியாத மொழியில் அதாவது ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளில் பெயர் வைக்கின்றனர். ஹிந்தி மொழியின் வளர்ச்சிக்கு நிதியை அள்ளித்தருகிற மோடி, தமிழுக்கு கிள்ளிக்கூடத் தருவது இல்லை. நம்முடைய தமிழகத்திலிருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியில் 1 ரூபாய்க்கு 29 காசுகள் மட்டுமே நமக்குத் தரு கிறார்கள். ஆனால், குஜராத் துக்கு மட்டும் 2 மடங்கு நிதி தருகிறார்கள். சென்னை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல், மழை, வெள்ளம் சூறையாடியது. மக்களின் வாழ்வாதாராம் 100 சதவீதம் முடங்கியது; அழிந்தது. நிர்மலா சீதாராமன் உள்பட மத்திய அமைச்சர்கள் பாதிக் கப்பட்ட பகுதிகளைப் பார்த்தார்கள். ஆனால், ஒரு பைசா கூட நிவாரண உதவியாக மோடி அரசு செய்யவில்லை. பா.ஜ.க. ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். பா.ஜ.க. வின் தோல்விதான் இந்தியாவின் வெற்றி. இதை உணர்ந்து பாசிசத்தை வீழ்த்த 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றிப்பெறச் செய்வது ஒவ் வொருவரின் கடமை''‘’ என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.

ராமநாதபுரத்தில் பேசிய உதயநிதி, "இந்த பொதுக் கூட்டத்தில் எழுந்துள்ள எழுச்சி, 40 தொகுதிகளிலும் நமக்கு கிடைக்கப்போகும் வெற்றியை உறுதி செய்தி ருக்கிறது. இது பொதுக்கூட்டம் அல்ல ; மாநாடு. நமது பிரச்சாரப் பொதுக்கூட்டங்களின் பெயர், உரிமைகளை மீட்க தலைவரின் குரல் என்பதுதான். இளைஞரணி மாநாட்டை நடத்தினோம். 100 சதவீத வெற்றின்னு சொன் னாங்க. என்னைப் பொறுத்தவரை 50 சதவீத வெற்றி தான். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயிச்சாதான் அது 100 சதவீத வெற்றி. 2019 தேர்தலின் போது நாம் எதிர்க்கட்சி. 39 தொகுதிகளில் ஜெயிச் சோம். இப்போ நாம் ஆளும்கட்சி. ஒரு ஓட்டு குறைஞ் சாக்கூட நமக்கு மக்கள் செல்வாக்கு இல்லைன்னு சொல்லுவாங்க. இதையெல்லாம் நீங்க மனசுல வெச்சுக்கணும். மதத்தை வெச்சு அரசியல் பண்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் கனவு ஒருநாளும் பலிக்காது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமை களையும் பா.ஜ.க. பறித்துக்கொண்டது. அதையெல்லாம் மீட்கத்தான் இந்த தேர்தல். எந்தளவிற்கு பா.ஜ.க.வின் அழிவு வேலைகளை மக்களிடம் கொண்டுசெல் கிறோமோ, அதேவேளையில் கடந்த 33 மாதங்களில் திராவிட மாடல் ஆட்சியில் நடந்துள்ள சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதும் நமது கடமை. அ.தி.மு.க. அரசால் அடகு வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை நாம் மீட்டாக வேண்டும். அதை தி.மு.க. நிச்சயம் மீட்கும்''” என்றார் ஆவேசமாக.

"மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதே முக்கியம்' என்று ஸ்டாலின் அடிக்கடி கூறிவருவதை நிரூபிக்கும் வகையில் உரிமை மீட்பு பொதுக்கூட்டங்களை ஆக்ரோசமாக நடத்தி முடித்துள்ளது தி.மு.க.

nkn210224
இதையும் படியுங்கள்
Subscribe