Advertisment

நியமன எம்.எல்.ஏ.க் கள்! ரங்கசாமிக்கு பா.ஜ.க. அதிர்ச்சி வைத்தியம்

ra

புதுச்சேரியின் 15-வது சட்டப் பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்துமுடிந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டு, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 07-ஆம் தேதி முதல்வராகப் பொறுப் பேற்றார். இதற்கிடையில் தமக்கு வேண்டிய 3 நபர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து, கொரோனா சிகிச்சையிலிருக்கும் ரங்கசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது பா.ஜ.க.

Advertisment

ra

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மாநில அரசின் பரிந்துரையின்றி பா.ஜ.க.வே அக்கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களை அதிரடியாக நியமித்தது. அவர்களுக்கு அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணசாமி தலைமையிலான அரசு, பா.ஜ.க.வின் இந்த சர்வாதிகார போக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம்வரை போனது. ஆனால் உச்சநீதிமன்றம் , 'மத்திய உள்துறையின் இந்த முடிவு செல்லும்' என தீர்ப்பளித்தது. அதையடுத்து

புதுச்சேரியின் 15-வது சட்டப் பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்துமுடிந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டு, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 07-ஆம் தேதி முதல்வராகப் பொறுப் பேற்றார். இதற்கிடையில் தமக்கு வேண்டிய 3 நபர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து, கொரோனா சிகிச்சையிலிருக்கும் ரங்கசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது பா.ஜ.க.

Advertisment

ra

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மாநில அரசின் பரிந்துரையின்றி பா.ஜ.க.வே அக்கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களை அதிரடியாக நியமித்தது. அவர்களுக்கு அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணசாமி தலைமையிலான அரசு, பா.ஜ.க.வின் இந்த சர்வாதிகார போக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம்வரை போனது. ஆனால் உச்சநீதிமன்றம் , 'மத்திய உள்துறையின் இந்த முடிவு செல்லும்' என தீர்ப்பளித்தது. அதையடுத்து 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் நுழைந்தனர்.

ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்ற நிலையில், துணை முதல்வர் பதவி, 2 அமைச்சர்கள் பதவி மற்றும் வாரியங்கள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரங்கசாமிக்கு பா.ஜ.க. குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், திடீரென 10-ஆம் தேதி, மாலை முன்னாள் காங்கிரஸ் அரசின் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் தம்பியும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான ராமலிங்கம், தி.மு.க.வில் இருந்து பா.ஜ.கவுக்கு தாவிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பா.ஜ.க நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு ஆகியோர் நியமன எம்.எல்.ஏக் களாக நியமிக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

rara

முதலமைச்சர் ரங்கசாமிக்குத் தெரிவிக் காமல், அமைச்சரவை இன்னும் அமைக்கப்படாத நிலையில் இந்த நியமனங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதாக புதுச்சேரியில் புகைச்சல் எழுந்துள்ளது. சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத அ.தி.மு.க.வுக்கு 1 உறுப்பினர், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் 1 என கூட்டணிக் கட்சிகளுக்கு தலா 2 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை தடாலடியாக நியமித்தது கூட் டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் கோ.ஜெகன்னாதன் கூறும்போது, “"புதிய அரசில் முதலமைச்சராக ரங்கசாமி மட்டுமே பொறுப்பேற்றிருக்கிறார். மற்ற துறை அமைச்சர்கள், தற்காலிக சபாநாயகர்கூட அறிவிக்கப்படவில்லை. துணைநிலை ஆளுநர் முன்னிலையில் அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவேண்டும். ஆளும் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட ஏதுவாக 3 பேரை அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரைத்து, அவர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, அதன்பிறகு நியமன உறுப்பினர் அறிவிப்பதுதான் மரபு.

இவை எவற்றையும் கடைப்பிடிக்காமல், முதலமைச்சர் ரங்கசாமி உடல்நலம் குன்றி சிகிச்சையிலிருக்கும் நிலையில் இப்படி ஒரு அவசர நடவடிக்கை எதற்காக? பா.ஜ.க. உறுப்பினர்கள் 6 பேருடன், கட்சியில் இணைந்த சுயேட்சை ஒருவர் என 7 ஆக உள்ள நிலையில் 3 நியமன உறுப்பினர்களை நியமித்து என்.ஆர். காங்கிரஸுக்கு இணையாக 10 உறுப்பினர்கள் உள்ளனர் என ரங்கசாமியை மிரட்டுவதற்கா?. இது கூட்டணி தர்மத்துக்கும், அரசியலமைப் புக்கும் எதிரானது. இந்த ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளேன்''’என்றார்.

புதுச்சேரி மாநில தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், “"புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சட்டமன்ற விதிகளின்படி ஆட்சியாளர்களுக்கு சிறப்பான ஆலோசனை களை வழங்கும் வண்ணம் புதுச்சேரியைச் சேர்ந்த சிறந்த கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொருளாதார நிபுணர்கள், கலை இலக்கிய மொழிப் பற்றாளர்கள் ஆகியோரை தேர்வுசெய்து நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவியை வழங்கவேண்டும். ஆனால் அண்மைக் காலமாக ஆட்சியாளர்களும், துணைநிலை ஆளுநர் அவர்களும் விருப்பப் படியான நபர்களை நியமித்து வருகின்றனர். மத்திய ஆட்சியில் இருப்பதை வைத்து சர்வாதிகாரமாக கட்சியினரை நியமிப்பதை நிறுத்தவேண்டும். இல்லையென்றால் ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டி மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும்''’என தெரிவித்தார்.

பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறுகையில், "பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும், முதல்வரும், துணைமுதல்வரும் ஒரே சமயத்தில் பதவியேற்க வேண்டும் என கூறப்பட்டது. இதுதொடர்பாக ரங்கசாமியின் வீட்டுக்குச் சென்று பேசுவதற்காக மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஒப்புதல் கேட்டதற்கும் சம்மதிக்க வில்லை. பதவியேற்றவுடன் மருத்துவமனைக்குப் போய் படுத்துக்கொண்டார். நாங்கள் கூட்டணி தர்மத்தின்படிதான் நடந்துகொள்கிறோம். ரங்கசாமி முரண்டுபிடிப்பதால்தான் மத்திய பா.ஜ.க. அரசு சில அதிரடிகளை அரங்கேற்றுகிறது. இது தொடராமல் பார்த்துக்கொள்வது ரங்கசாமியின் கையில்தான் இருக்கிறது''’என்கிறார்.

ஆட்சி அமைவதற்குள்ளாகவே அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது பா.ஜ.க. ஐந்தாண்டை ரங்கசாமி எப்படி ஓட்டப்போகிறாரோ!?

nkn150521
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe