சினிமாவில் ஆபாச படங்களை தயாரிப்பதற்கென்றே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழு இருக்கும். அப்படி ஆபாச படங்களை தயாரிப்பவர்களை விஷயமறிந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பதும் வழக்கம். ஆனால் வெளிநாடுகளில் வயதுவந்தோருக்கான படங்களை முறைப்படியான அனுமதிபெற்று தயாரிப்பது வழக்கம். நம்மாளுக மாதிரி பிட்டை “எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக சென்ஸாருக்கு தெரியாமல் சேர்க்கமாட்டார்கள். சென்ஸார் அனுமதியுடனேயே சலக காரியங்களும் படம் பிடிக்கப்படும். அந்தவகை வயது வந்தோருக்கான திரைப்படங்களை தயாரித்து, நடித்து வந்தவர்தான்... இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கனடா நாட்டு நடிகையும், இப்போது பாலிவுட் நடிகையுமாக இருக்கும் சன்னிலியோன். (பாலிவுட் படங்களில் நடிக்கத்தொடங்கிய பிறகு அந்தமாதிரி படங்களில் நடிப்பதில்லை.... என சன்னிலியோன் சொல்லியிருக்கிறார்)
ஆனால் கடந்த சில வருடங்களாக "வெப் சீரிஸ்' என்ற பெயரில் உருவாக்கப்படும் படங்கள் ஓ.டி.டி. எனப்படும் இணையதளங்களில் வெளியாகி வசூலைக்குவிக்கிறது.
இந்தமாதிரி வெப் சீரிஸ் படங்களுக்கு சென்ஸார் குழு அனுமதி தேவையில்லை. சுய கட்டுப்பாட்டுடன் படைப்பாளியே தன் விருப்பப்படி படத்தை உருவாக்குவார். ஆனால்... கதைக்கு அவசியம் என்ற பெயரில் கசாமுசா காட்சிகளை கன்னாபின்னா வென திணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் படைப்பாளிகள். இதனால் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் வெப் சீரிஸ் மோகம் அதிகரித்தபடி இருக்கிறது. (வெப் சீரிஸ்களில் சில நல்ல தொடர் படங்களும் வருவதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.)
முன்பெல்லாம் முகம் பிரபல மாகாதவர்கள் மற்றும், புதுமுகமாக வருகிறவர்கள் மற்றும் ஏமாற்றி நடிக்கவைக்கப்படுபவர்கள் ஆகியோர்கள்தான் பெரும்பாலும் கசமுசா காட்சிகளில் நடிப்பார்கள். அதை தயாரிப்பவர்களும், இயக்குபவர்களும்கூட பிரபலமில்லாதவர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் சமீபகாலமாக... மிகவும் பிரபலமடைந்தவர்களே "வெப் சீரிஸ்' என்ற பெயரில் ஆபாச வசனம், உடலுறவு காட்சிகள் நிறைந்த... அதாவது ஒரு எபிஸோட்டுக்கு ஒரு பாலியல் காட்சி... என்ற பெயரில் சேர்த்து படமாக்கி... ஓ.டி.டி. தளங்களில் விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்கள்.
இந்த வெப் சீரிஸ் பாலியல் காட்சிகளுக்கு துணிந்து துணி துறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் "கபாலி'’ நாயகி ராதிகா ஆப்தே. பாலிவுட் டைரக்டர் அனுராக் கஷ்யப்பின் வெப் சீரிஸில் தான் அணிந்திருக்கும் ஆடையை முழுவதுமாக மேல்நோக்கி தூக்கி... அந்தரங்கத்தை காட்டி நடித்தார். அதன்பின்... கியாரா அத்வானி ஒரு வெப் சீரிஸில்... கணவனால் திருப்திகிடைக்காத நிலையில்... ஒரு தோழியின் பேச்சைக்கேட்டு... பேட்டரியில் இயங்கும் ஆணுறுப்பு பொம்மையை பயன்படுத்தி... விபரீதமாவதுபோல நடித்தார். ( இந்தியில் வந்த இந்த கதை அடங்கிய தொகுப்பு படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒரு கதையில்தான் அமலாபால் நடித்திருக்கிறார். ஆனால் இன்னும் இது வெளியாகவில்லை)
இந்த நிலை இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
உலகப்புகழ்பெற்ற கிரிக்கெட்டர் விராட்கோலியின் மனைவியும், பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா தயாரித்து... வெளியாகிவரும் "பாதாள் லோக்'’ சீரியலில் ஆபாச வசனங்களும், உடலுறவு காட்சிகளும், மதம் மற்றும் கடவுளரை விமர்சிக்கும் காட்சிகளும் அதிகமிருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
"காலா'’படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹூமா குரோஸி நடித்த "லெய்லா'’வெப் படைப்பும் வெப்பத்தை உண்டாக்கியிருக்கிறது.
தமிழில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்த "காட் மேன்' படத்தில் சாதி, கடவுள் துவேஷங்களுடன், பாலியல் சர்ச்சையும் இருப்பதாக... டிரெய்லர் வந்ததுமே புகார் கிளப்பி... சென்னை மாநகர போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பதால்... "காட் மேன்'’ரிலீஸ் இப்போதைக்கு இல்லை... என தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்திவரும் வெப் சீரிஸ் படைப்பாளிகள்... இப்போது நாட்டுக்காக உழைக்கும் ராணுவத்தினரையும் அவமானப்படுத்துவதாக பலத்த குற்றச்சாட்டு எழுந்திருப்பதுடன்... போலீஸிலும் புகார் செய்யப் பட்டிருக்கிற்து.
இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் சின்னத்திரை தொடர் தயாரிப்பில் புகழ்பெற்ற பெண்மணி ஏக்தா கபூர். அவரின் சில்மிஷ வெப் சீரிஸ் ஒன்றில்... இறந்துபோன ராணுவ வீரனின் உடையை அவனின் மனைவி தன் கள்ளக்காதலனுக்கு அணிவித்துவிட்டு... அப்படியே வெறியோடு... அந்த உடையைக் கிழித்து... உடலுறவு கொள்வதுபோல காட்சிகளும், இன்னொரு சீரியலில்... ராணுவ அதிகாரிகள் ஓரின சேர்க்கையாளர்களாகவும் காட்டப்பட்டுள்ளார்களாம். ரஜினியின் "பேட்ட' பட வில்லனான நவாசுதீன் சித்திக் ஓரின சேர்க்கைக்கு உடன்படுபவராக ஒரு வெப் சீரிஸில் நடித்திருப்பதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒருபுறம்... இந்த வெப் சீரிஸ்களுக்கு வசூல் கூடினாலும்... இன்னொருபுறம்... மிக மோசமான காட்சி சித்தரிப்புகளுக்காக கண்டனங்களையும், எதிர்ப்புகளையும், வம்பு- வழக்குகளையும் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.
படைப்பாளிகள் தங்கள் சுயகட்டுப்பாட்டை மீறுவதால்... “வெப் சீரிஸ்களுக்கும் சென்ஸார் அவசியம்’என்கிற குரல்களும் வெகு வேகமாக வேகமெடுத்திருக்கிறது.
-ஆர்.டி.எ(க்)ஸ்