அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்'’என்ற முழக்கத்தோடு பிரச்சார பயணத்தை மேற்கொண்டுவருகிறார். 4-வது கட்ட பயணமாக செப் 1-ஆம் தேதி மதுரை வந்தவர், விமான நிலையத்தின் அருகிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பிரச் சாரம் செய்தார். இதுவரை தமிழகத்தின் வடமாவட்டங் களில் நடந்த கூட்டங்களில் அந்தந்த ஊர்களில் முக்கிய கூட்டணிக் கட்சியினரை தன்னுடன் நிற்கவைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த எடப்பாடி, மதுரையில் மட்டும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களை மட்டுமே அருகே நிற்க வைத்துக்கொண்டார்.
முதல்நாள் திருப்பரங்குன்றத் தில் நடந்த கூட்டத்தில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பாவை நிற்க வைத்திருந்தார். பா.ஜ.வைச் சேர்ந்த மாநில நிர்வாகிகளான மாநில பொதுச்செயலாளர் இராம.சீனி வாசன், மாவட்ட தலைவர் சிவலிங்கம் ஆகியோர் எடப்பாடியின் பிரச்சார வாகனத் தில் ஏற முயன்றபோது, ராஜன்செல்லப்பா வின் மகன் ராஜ்சத்தியன் தகவ
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்'’என்ற முழக்கத்தோடு பிரச்சார பயணத்தை மேற்கொண்டுவருகிறார். 4-வது கட்ட பயணமாக செப் 1-ஆம் தேதி மதுரை வந்தவர், விமான நிலையத்தின் அருகிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பிரச் சாரம் செய்தார். இதுவரை தமிழகத்தின் வடமாவட்டங் களில் நடந்த கூட்டங்களில் அந்தந்த ஊர்களில் முக்கிய கூட்டணிக் கட்சியினரை தன்னுடன் நிற்கவைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த எடப்பாடி, மதுரையில் மட்டும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களை மட்டுமே அருகே நிற்க வைத்துக்கொண்டார்.
முதல்நாள் திருப்பரங்குன்றத் தில் நடந்த கூட்டத்தில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பாவை நிற்க வைத்திருந்தார். பா.ஜ.வைச் சேர்ந்த மாநில நிர்வாகிகளான மாநில பொதுச்செயலாளர் இராம.சீனி வாசன், மாவட்ட தலைவர் சிவலிங்கம் ஆகியோர் எடப்பாடியின் பிரச்சார வாகனத் தில் ஏற முயன்றபோது, ராஜன்செல்லப்பா வின் மகன் ராஜ்சத்தியன் தகவல் கொடுக்க, "பா.ஜ.க.வா வேண்டாம் வேண்டாம்' என்று எடப்பாடி கையைக் காட்ட, அதிர்ச்சி யடைந்த பா.ஜ.வினர் கடும் அதிருப்தி யடைந்து, எடப்பாடி பேசி முடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக 10 தொகுதிகளி லும் பா.ஜ.க.வின் தலைவர்கள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. முதல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, "அ.தி.மு.க., -பா.ஜ. கூட்டணியால், அ.தி.மு.க.வை பா.ஜ. விழுங்கிவிடும், அடிமைப்பட்டுவிட்டோம் என்றெல்லாம் சொல்கின்றனர். எங்களை யாராலும், ஒருபோதும் விழுங்க முடியாது. அந்தந்த சூழ்நிலைக்காக கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி வேறு, கொள்கை வேறு. அ.தி.மு.க. கொள்கையிலிருந்து ஒருபோதும் மாறாது''’என்றார்.
அதனைத் தொடர்ந்து ஒத்தக்கடையில் பேசியபோது, தி.மு.க. பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தியைத் தாக்கி, "இந்த தொகுதியின் அமைச்சர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும். பத்திரப் பதிவுத்துறையில் கொள்ளையோ கொள்ளை நடைபெறுவதாக மக்கள் பேசுகிறார்கள். செந்தில்பாலாஜி பத்து ரூபாய் அமைச்சர். இவர் பத்து பர்சென்ட் அமைச்சர். கஷ்டத்தில் சொத்துகளை விற்பவர்களை கமிஷன் என்ற பெயரில் மேலும் கஷ்டப்படுத்துகின்றனர்.. தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரு சார்பதிவாளரை ஓர் ஆண்டுக்கு மேல் பணிபுரியவிடுவதில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் தோண்டியெடுக் கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.
மூன்றாம் நாள் மதுரை வடக்கு தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார் எடப்பாடி.. மதுரை கோ.புதூர் பகுதியில் எடப்பாடி வருகையை முன்னிட்டு வரவேற்க செல்லூர் ராஜு 5,000 பேரை திரட்டி ஆடல் பாடல், பிளக்ஸ் பேனர்கள், செண்டைமேளம், ட்ரம்செட், வாணவேடிக்கை எல்லாம் தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருக்க, அதற்குப் போட்டியாக டாக்டர் சரவணன் 10,000 பேருக்கு தலைக்கு 300 ரூபாய், சாப்பாடு, குவார்ட்டர் எல்லாம் கொடுத்து தனிஆவர்த்தனம் செய்தார். இதைப் பார்த்த செல்லூர் ராஜு, சரவணனிடம் நேரில்சென்று, "தம்பி ஏன் தனியா வரவேற்பு? எல்லாரையும் ஒரே இடத்துக்குப் போகச் சொல் லுங்க'' என்று சத்தம் போட்டுவிட்டு, எடப்பாடியை அழைத்துவர ஹோட்டலுக்குச் சென்றார்.
டாக்டர் சரவணன் புதிய ஏற்பாடாக மதுரை கள்ளழகர் தங்கக் குதிரையில் வருவது போன்று ஏற்பாடு செய்து, "வர்றாரு வர்றாரு அழகர் வர்றாரு' பாட்டை போட்டு வரவேற்க... அதைப் பார்த்த எடப்பாடி உற்சாகமாகி டாக்டரை பிரச்சார வேனில் ஏறச் சொன்னார். எடப்பாடி பேசிமுடித்து ஹோட்டலுக்குச் சென்றதும், “"டாக்டர் தனிஆவர்த்தனம் செய்வது நம் கட்சியையே அவமதிக்கும் செயல். மாவட்டச் செயலாளர் நான் இருக்கேன். என்னைக் கலந்துபேசுவதே இல்லை. இதை உங்களிடம் பலமுறை சொல்லிவிட்டேன். வேண்டுமானால் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்து விடுகிறேன்''’என்று எடப்பாடியிடம் சொல்ல... எரிச்சலடைந்த எடப்பாடி "விடுங்க' என்று சொல்லும்போதே டாக்டர் அங்கு வர... “"சர்வ கட்சிக்கும் போயிட்டு வந்தவருக்குதான் எல்லோரும் சப்போர்ட் செய்றாங்க''’என்றதும் கோபமாகத் திரும்பிய எடப்பாடி, “"யோவ் அதெல்லாம் பேசக்கூடாது. அவர் ஆர்வமா செய்றார். மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றிருக்கிறார்''’என்றதும் செல்லூர் ராஜு, “"அப்ப ஏன் வெற்றி பெறலை'’என்றதும், "காரணம் நீங்கதான்'’என்று சிரிக்க, அந்த இடமே சிரிப்பலை பரவியது. எடப்பாடி, சரவணனை அருகிலழைத்து “"கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க. உங்களுக்கு எதிர்காலம் இருக்கு''’என்றுவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்.
நான்கு நாள் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு 4-ஆம் தேதி இரவு மதுரையின் முக்கிய நிர்வாகிகளான ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, உசிலம்பட்டி மகேந்திரன் முன்னாள் எம்.எல்.ஏ. தெற்குத்தொகுதி சரவணன் மற்றும் டாக்டர் சரவணன் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி அறையில் 45 நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து நாம் விசாரிக்கையில் செல்லூர் ராஜுவை, "ஏன்யா உன்கிட்ட பணமே இல்லை என்றாயாமே… வேலுமணி ரொம்ப வருத்தப் பட்டார். 10 வருசம் அமைச்சரா இருந்த நீ எப்படியெல்லாம் சம்பாரிச்சங்கிற விபரம் என்கிட்ட இருக்கு. எனக்கே தண்ணி காட்டுறியா… நீ முழுமனசோட இல்லைங்கிறது எனக்குத் தெரியும். யாரை நம்பியும் கட்சி இல்லை. நான் நல்லவனுக்கு நல்லவன் பார்த்துக்கோ''’என்று எச்சரிக்க ஆடிப்போனாராம் செல்லூரார்