Advertisment

ராங்கால் புதுக்கட்சி வேண்டாம்! அர்ஜுன் ரெட்டிக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்! அதிமுகவில் சசிகலா? திரைமறைவில் நடக்கும் மூவ்கள்!

ss

"ஹலோ தலைவரே, தமிழக அரசியல் செய்திகளில் பரபரப்பாக அடிபட்ட அர்ஜுன் ரெட்டி, இனி எந்தப்பக்கம் போவது என்கிற திண்டாட்டத்திலிருக்கிறார்.''’

"ஆமாம்பா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டி, நடிகர் விஜய்யிடம் அதுபற்றி ஆலோசனை கேட்டாராமே?''”

"அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க.வைச் சீண்டியதால், அர்ஜுன் ரெட்டியை தங்கள் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கிவைப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை நீக்கும் அறிவிப்பு வந்த நேரத்தில் அவர் டெல்லியில் இருந்தாராம். உடனே, தனது ரியாக்ஷனை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துவிட்டு, த.வெ.க. கட்சித் தலைவரான நடிகர் விஜய்யைத் தொடர்புகொண்டு, அடுத்து நான் என்ன செய்வது என்று அர்ஜுன் ரெட்டி கேட்டிருக் கிறார். அதோடு, தனது "வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பை அர சியல் கட்சியாகப் பதிவு செய்வது குறித்து, தான் ஆலோசிப்பதாக வும் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட விஜய், ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டம் உங்களுக்கே தெரியும். அதனால், கொஞ் சம் அமைதியாக இருங்கள். 6 மாதங்களுக்குப் பிறகு உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதனால், புதுக்கட்சி ஐடியாவை எல் லாம் ஒத்திவையுங்கள் என்று சொல்லியிருக்கிறாராம்.’''’

Advertisment

rr

"அர்ஜுன் ரெட்டியை நடிகர் விஜய்யின் த.வெ.க.வினரும் எதிர்க்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அர்ஜுன் ரெட்டி நீக்கப்பட்ட நிலையில், அவர் த.வெ.க.வில் ஐக்கியமாகிவிடுவார் என்கிற கருத்தே பரவலாக நிலவியது. அர்ஜுன் ரெட்டிக்கும் விஜய் தன் கட்சிக்கு அழைப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததாம். அதேசமயம், அர்ஜுன் ரெட்டி, தன் கடந்தகால பயணம்போல் வெளியிட்டிருக்கும் வீடியோவில், தி.மு.க.வின் தேர்தல் வியூக அமைப்புக்காக செயல்பட்ட ஓ.எம்.ஜி.யில், தனது பங்கு குறித்தும், ஐபேக் பிரசாந்த் கிஷோரை தி.மு.க.வுக்கு, தான் அழைத்து வந்தது குறித்தும் மார்தட்டிக் கொண்டதோடு, விடுதலைச் சிறுத

"ஹலோ தலைவரே, தமிழக அரசியல் செய்திகளில் பரபரப்பாக அடிபட்ட அர்ஜுன் ரெட்டி, இனி எந்தப்பக்கம் போவது என்கிற திண்டாட்டத்திலிருக்கிறார்.''’

"ஆமாம்பா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டி, நடிகர் விஜய்யிடம் அதுபற்றி ஆலோசனை கேட்டாராமே?''”

"அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க.வைச் சீண்டியதால், அர்ஜுன் ரெட்டியை தங்கள் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கிவைப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை நீக்கும் அறிவிப்பு வந்த நேரத்தில் அவர் டெல்லியில் இருந்தாராம். உடனே, தனது ரியாக்ஷனை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துவிட்டு, த.வெ.க. கட்சித் தலைவரான நடிகர் விஜய்யைத் தொடர்புகொண்டு, அடுத்து நான் என்ன செய்வது என்று அர்ஜுன் ரெட்டி கேட்டிருக் கிறார். அதோடு, தனது "வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பை அர சியல் கட்சியாகப் பதிவு செய்வது குறித்து, தான் ஆலோசிப்பதாக வும் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட விஜய், ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டம் உங்களுக்கே தெரியும். அதனால், கொஞ் சம் அமைதியாக இருங்கள். 6 மாதங்களுக்குப் பிறகு உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதனால், புதுக்கட்சி ஐடியாவை எல் லாம் ஒத்திவையுங்கள் என்று சொல்லியிருக்கிறாராம்.’''’

Advertisment

rr

"அர்ஜுன் ரெட்டியை நடிகர் விஜய்யின் த.வெ.க.வினரும் எதிர்க்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அர்ஜுன் ரெட்டி நீக்கப்பட்ட நிலையில், அவர் த.வெ.க.வில் ஐக்கியமாகிவிடுவார் என்கிற கருத்தே பரவலாக நிலவியது. அர்ஜுன் ரெட்டிக்கும் விஜய் தன் கட்சிக்கு அழைப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததாம். அதேசமயம், அர்ஜுன் ரெட்டி, தன் கடந்தகால பயணம்போல் வெளியிட்டிருக்கும் வீடியோவில், தி.மு.க.வின் தேர்தல் வியூக அமைப்புக்காக செயல்பட்ட ஓ.எம்.ஜி.யில், தனது பங்கு குறித்தும், ஐபேக் பிரசாந்த் கிஷோரை தி.மு.க.வுக்கு, தான் அழைத்து வந்தது குறித்தும் மார்தட்டிக் கொண்டதோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, தான் செய்தவைகள் குறித்தும் விலாவாரியாகச் சொல்லிக் காட்டியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்த த.வெ.க. மாநில நிர்வாகிகளான புஸ்ஸிஆனந்த் உள்ளிட்டவர்கள், உறவில் முறிவு வந்தவுடன், கூட இருந்தவர்கள் குறித்த ரகசியத் தகவல்களை பகிரங்கமாக சிதறு தேங்காய்போல் உடைக்கிற அர்ஜுன் ரெட்டியை எந்த நம்பிக்கையில் நம் கட்சியில் சேர்ப்பது. அது எப்போது இருந்தாலும் நமக்கு ஆபத்தானது என்று எதிர்ப்புக்கொடி பிடித்தார்களாம். அதனால், விஜய், அவரைத் தன் கட்சிக்கு அழைப்பது குறித்து யோசிப் பதையே விட்டுவிட்டாராம். சொந்தக் கட்சி யான சிறுத்தைகள் கட்சியிலும், த.வெ.க.விலும் தனக்கு சாதகமான சூழல் இல்லாததால் அ.தி.மு.க.வுக்கு போகலாமா? என இப்போது அர்ஜுன் ரெட்டி யோசிக்கிறாராம்.''”

"அது இருக்கட்டும். தமிழக சட்டசபைக் கூட்டம் விறுவிறுப்பா நடந்திருக்கே?''”

Advertisment

"தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 2 நாள் நடந்து முடிந்திருக்கிறது. இதில் 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கு. அவை அப்ரூவலுக்காக ஆளுநருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கு. இவற்றில் எத்தனை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவார்ன்னு தெரியவில்லை என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். ஆனால், நீதிமன்றம் கண்டித்திருப்பதால், முன்பு மாதிரி மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் கவர்னர் காலதாமதம் செய்ய வாய்ப் பில்லை என்றும் கூறுகிறார்கள். இந்த பேரவைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். கலந்து கொள்ளவில்லை. ஆனால் பேரவைக்கு வந்திருந்த அவர், பேரவையின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த லெட்ஜரில் கையெழுத்துப் போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதற்கு முன்பு நடந்த சட்டமன்றக் கூட்டம் வரையில், சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத்தலைவராக அவர் இருந்தார். தற்போது, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் நியமிக்கப் பட்டு, அவருக்கு வேறு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால், தான் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டதை ஜீரணிக்க முடியாததால், ஓ.பி.எஸ். இந்தமுறை பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்கின்றனர்.''”

"தி.மு.க.வுக்கு எதிரான புகார்களை மீண்டும் வெளியிடப் போவதாக அந்த பா.ஜ.க. நிர்வாகி அறிவித்திருக்கிறாரே?''’

"லண்டன் செல்வதற்கு முன்பு, ஏற்கனவே தி.மு.க. அரசுக்கு எதிராக ஃபைல்-1, ஃபைல்-2 என ஊழல் புகார்களை வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகி, இப்போது ஃபைல்-3ஐ வெளியிடப்போவதாக அறிவித்தார். அவரது முந்தைய புகார்களையே யாரும் கண்டு கொள்ளாத நிலையில், இது எதற்கு? என்று அவரது கட்சியினரே சலித்துக்கொண்டனர். அதேபோல் தி.மு.க. ஐ.டி. விங் தரப்பு, இவர் இப்போது காட்டநினைக்கும் பூச்சாண்டியும் புஸ்வாணமாகத்தான் ஆகும் என்று அழுத்தமாகச் சொன்னது. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லிக்கு அவசரமாகச் சென்ற அந்த பா.ஜ.க. பிரமுகர், அமித்ஷா உள்ளிட்ட தங்கள் கட்சியின் தேசியத் தலைவர் களிடம், தான் வெளியிட இருக்கும் ஃபைல்-3 பற்றி விவரித்தாராம். அதைக் காது குடைந்துகொண்டே கேட்ட டெல்லி நிர் வாகிகள், "நீங்க முன்பு வைத்த குற்றச் சாட்டுகளுக்கே ஆதாரத்தைக் காட்டவில்லை. இப்ப இது வேறா?' என்று கேட்டார்களாம். இதையெல்லாம் சொல்லிச் சிரிக்கும் கமலா லயத் தரப்பு, ’"நான் ஆதாரத்தோடு ஃபைலை தயாரிச்சிட்டு வர்றேன்'’என்றபடி அவர் வீராவேசமாகச் சொல்லிட்டு, அங்கிருந்து ஓடிவந்திருக்கார் என்று புன்னகைக்கிறது.’''

"என்னப்பா திருச்சி மாநகரமே திமிலோகப்பட்டிருக்கே?''”

rr

"தமிழகத்தில் மன்னராட்சி நடப்பதாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அர்ஜுன் ரெட்டி குற்றச்சாட்டை வைத்திருந்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு எங்கள் மலைக்கோட்டை மாநகருக்கு ஏகத்துக்கும் பொருந்தும் என்கிறார்கள் அங்குள்ளவர்கள். காரணம், திருச்சியில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாள் அண்மையில் மிகக் கோலா கலமாக அவர்களின் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதற்காக நகரெங்கும் 200-க்கும் மேற்பட்ட கட்அவுட்டுகளும், பேனர்களும் பெரிது, பெரிதாய் வைக்கப்பட்டிருக்கின்றன. உதயநிதியை தி.மு.க.வினர் செல்லமாக அழைப்பது போல், அருணையும் ’"எங்கள் இளையவரே!'’ என்று விளித்தும், அங்கே விளம்பரங்களை வைத்திருக்கிறார்களாம். இதைக்கண்டு பொதுமக்கள் எரிச்சலடைய, ‘"இங்கே மன்னர் பரம்பரை என்றால் அது அமைச்சரும் அவரது மகனும்தான்'’ என்ற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் வீடியோக்களுடன் விமர்சனங்களைப் பதிவிட்டு, திகைப்பை ஏற்படுத்திவருகிறார்கள்.''”

"சசிகலா தரப்பு பரபரப்பாகயிருக்கிறதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, விரைவில் சசிகலா அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிடுவார் என்றும் அவரை எடப்பாடியே மனப்பூர்வமாக வரவேற்பார் என்றும், இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஃபைனல் செட்டில்மெண்ட்டுகளும் விரைவில் நடந்து முடிந்துவிடும் என்றும், சசிகலா தரப்பிலிருந்தே தகவல் பரவிவருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளை பா.ஜ.க. கண்காணித்து வருகிறது என்றும் சொல்கிறார்கள்.இந்த நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் இருவரும் வந்து ஆஜராகுங்கள் என்று எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்.ஸுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. எனவே சசிகலா விவகாரமும், தேர்தல் ஆணைய நடவடிக்கைகளும் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரிடமும் ஏற்பட்டிருக்கிறதாம்.''”

rr

"சென்னை மாநகராட்சி தரப்பில் அதிக சலசலப்பு தெரிகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜேந்திரனின் ஊழல் கள் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏகத்துக்கும் புகார்கள் போயிருக்கின்றன. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இவர், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பொறியாளராக இருந்து அதிகாரம் செலுத்தினார் என்றும். அப்போது, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியைக் கைக்குள் வைத்துக்கொண்டு, காண்ட்ராக்டர்களின் காட்ஃபாதராகவே அவர் கோலோச்சினார் என்றும் கூறுகிறார்கள். அதேபோல் "தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தனக்கு எதிரானவர்களை மேலிடத்தில் போட்டுக் கொடுத்து, தலைமைப் பொறியாளராக இவர் அமர்ந்துவிட்டார். அவர் இந்தப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே ஊழல்கள் பெருத்துவிட்டன. மேயர் ப்ரியா மற்றும் கமிஷனர் குமரகுருபரன் ஆகியோருக்கு தெரியாமல் காண்ட்ராக்டர்களை மாலை நேரத்தில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து ரகசிய டீலிங் பேசுகிறார்' என்றெல்லாம் இவரைப் பற்றிய ஏடாகூடத் தகவல்களை விபரமறிந்தவர்கள் அடுக்குகிறார்கள். மேலும், எந்த டெண்டராக இருந்தாலும் 8 சதவீதம் தனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என அவர் மிரட்டுவதாகவும் சொல்கிறார்கள்.''”

"அப்படிப்பட்டவருக்கு பணி நீட்டிப்பு கொடுக்கும் முயற்சிகளும் நடக்கிறதே?''”ss

"உண்மைதாங்க தலைவரே, சில மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் ராஜேந்திரன், 2 ஆண்டுகாலத்துக்கு பணி நீட்டிப்பு பெற முயற்சித்து வருகிறாராம். இதற்காக கனமான சூட்கேஸ்களுடன் அவர் தரப்பு காய் நகர்த்தி வருகிறதாம். இவரைப் பற்றி இன்னொரு தகவலும் தற்போது கிளம்பி, ஆளுங் கட்சியினரை டென்சன் படுத்திவருகிறது. அதாவது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போது, மேம்பாலத்தில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா அரசு வழக்குப் போட்டது. அந்த வழக்கில் ஸ்டாலினுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சாட்சியம் அளித்தவராம் இந்த ராஜேந்திரன். அதேபோல, மாநகராட்சியில் நடக்கும் விசயங்களை எஸ்.பி.வேலுமணிக்கு சீக்ரெட்டாக பாஸ் செய்து தனது விசுவாசத்தை காட்டி வரு கிறார் என்றும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட ராஜேந்திரன், ‘நான் ஒரு தி.மு.க. விசுவாசி’ என்று பொய் சொல்லி தி.மு.க. மேலிடத்தில் பணி நீட்டிப்பு கேட்டு வருகிறாராம். மற்றவர்களின் வாய்ப்பைப் பறிக்கும் வகையில் இவருக்குப் பணி நீட்டிப்பு கொடுத்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்ல கார்ப்பரேசன் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.''”

"என் காதுக்கு வந்த ஒரு அதிமுக்கியமான செய்தியை இங்கே பகிர்ந்துக்கறேன். "வாய்ஸ் ஆஃப் கோவை' என்ற அமைப்பின் சார்பில் "விழித்திடு, எழுந்திடு, உறுதியாக இரு!' என்பதைக் குறிக்கும் வகையில் "ஏ3' என்னும் பெயரில், அண்மையில் இந்துத்துவா மாநாடு, கொங்குத் தலைநகரில் நடத்தப்பட்டிருக்கிறது. இதை நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் தானாம். சனாதன தர்மத்தைத் தூக்கிநிறுத்தும் நோக்கத்தோடு பலரும் இதில் உரை நிகழ்த்தியிருக் கிறார்கள். இந்த மாநாடு குறித்து மேலிடத்திற்கு ரிப்போர்ட் போட்டிருக்கும் உளவுத்துறையோ, ’"கோவையில் பா.ஜ.க. வளரவேண்டுமானால், மீண்டும் அங்கே ஒரு கலவரம் ஏற்படவேண்டும் என்று சிலர் கூடிப் பேசினார்கள்'’ என்று அதில் பகிரூட்டியிருக்கிறதாம்.''’

rr

nkn141224
இதையும் படியுங்கள்
Subscribe