ரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து விட்டதாக, அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சந்திரமோகன். தன் குடும்பத்தை சாலியர் சமுதாயத்தைவிட்டு விலக்கிவைத்துவிட்டதாக அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சிய ரிடம் முறையிட்டிருக்கிறார் சண்முகசுந்தரம். அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன பரிபாலன சபை நிர்வாகிகள் மீது சந்திரமோகனும் சண்முகசுந்தரமும் குற்றம்சாட்டுகின்றனர்.

என்ன விவகாரம் இது?

kk

அருப்புக்கோட்டையில் புளியம்பட்டி - திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபை உள்ளது. இச்சபைக்குப் பாத்தியப்பட்ட அருள் மிகு மாகாளியம்மன் வகையறா திருக்கோவில் களில் ஒன்றான ஆயிரங்கண் மாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, இக்கோவிலில் பங்குனித் திருவிழா நடந்த போது, ஸ்தல ஆய்வு நடத்தச் சென்றார் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சந்திர மோகன். அப்போது அம்மன் சன்னதி எதிரிலுள்ள இலாகா முத்திரையிடப்பட்ட நிரந்தர உண்டியலில் பக்தர்கள் காணிக்கைகளைச் செலுத்தவிடாமல் துணியால் சுற்றி மூடியிருந்தனர். அதனருகில் இலாகா அனுமதியின்றி பனைஓலை பெட்டி உண்டியல் வைத்திருந்தனர்.

திருவிழா நேரங்களில் தங்க நகைகள், வெள்ளியிலான பொருட்கள், பணம் போன்ற வற்றை பக்தர்கள் அதிகமாக உண்டியலில் போடு வது வழக்கம். முத்திரையிடப்பட்ட நிரந்தர உண்டியலில் இவை போடப்பட்டால், சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பில் முறையாக எண்ணப்பட்டு, பத்திரமாக கோவில் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும். அனுமதியின்றி வைக்கப்படும் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் நகைகளுக்கோ, பணத்துக்கோ இந்த உத்தரவாதம் இல்லை. அதனால், இலாகா உண்டியலை மூடியிருந்த சேலைகளை அகற்றவும், பனைஓலை பெட்டி உண்டியலை அங்கிருந்து kkஅப்புறப்படுத்தவும் சொன்னார் ஆய்வாளர் சந்திரமோகன். அதனால் ஆத்திரமான கோவில் நிர் வாகிகள் சுந்தரமகாலிங்கம், செந்தில்சங்கரநாரா யணன் போன்றோர், அறநிலையத்துறையை இழிவாகப் பேசியும், சந்திரமோகனை ஒருமையில் திட்டியும், அரசுப் பணியைச் செய்யவிடாமல் பிரச் சனை செய்து, கோவிலிலிருந்து வெளியேற்றினர்.

இதனைத் தொடர்ந்து, நிரந்தர உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தவிடாமல் கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி வருவதையும், பனைஓலைப் பெட்டி உண்டியல் வைத்து வசூல் செய்த பணத் தைக் கையாடல் செய்து வருவதையும் குறிப்பிட்டு அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் சந்திரமோகன்.

கோவில் நிர்வாகிகள் காவல்துறை அதிகாரி யை நல்லபடியாக கவனித்து குஷிப்படுத்திவிட்ட தால், அந்தக் கையாடல் புகார் கண்டுகொள்ளப்பட வில்லை’என்று சாலியர் சமுதாயத்திலிருந்தே குமுறல் வெளிப்பட, அருப்புக்கோட்டை டவுண் காவல் ஆய்வாளர் பாலமுருகனை தொடர்பு கொண்டோம்.

"நிர்வாகிகள் அசிங்கமா பேசினாங்கன்னு அறநிலையத்துறை ஆய்வாளர் சந்திரமோகன் சொன்னாருல்ல. அப்படி எதுவும் பேசலைன்னு நிர்வாகிகள் கோயில்ல சத்தியமே பண்ணுறாங்க. அன்னதான உண்டியல் வைக்கக்கூடாதுன்னு சொன்னாங்கள்ல. அதை எடுத்துட்டாங்க. அன்னைக்கே முடிச்சுவிட்டாச்சு. கூப்பிட்டு எழுதி வாங்கிட் டோம்''’என்றார் கூலாக.

இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சந்திரமோகன் நமது லைனுக்கு வருவதைத் தொடர்ந்து தவிர்த்த நிலையில், சாலியர் மகாஜன பரிபாலன சபையின் செயலாளர் சோம சுந்த ரத்தை தொடர்புகொண்டோம்.

"கோயில்ல டெய்லி அன்ன தானம் பண்ணிட்டு இருக்கோம். அன்னதானச் செலவுக்காக பரிபாலன சபை சார்பா பனை ஓலை பெட்டி உண்டியல் வச்சோம்.. பனைஓலை பெட்டில வசூல் பண்ணுறது தனியா கணக் குல வந்திரும். பங்குனி திருவிழா வுக்கு தனியா அக்கவுண்ட் ஓபன் பண்ணிருவோம். இந்தக் கணக்கு வழக்கை பரிபாலன சபைதான் மெயின்டெய்ன் பண்ணுது. நன்கொடைல போது மான தொகை வரலைன்னா பரிபாலன சபைல இருந்து போட்டு நாங்க விழாவ நடத்துவோம். அறநிலையத்துறை ஆய்வாளரை பணி செய்ய விடாம தடுத்தோம்னு சொல்லுறாங்கல்ல. நான் கேட்கிறேன், இந்து சமய அறநிலையத்துறைன்னால எங்களுக்கு என்ன பிரயோஜனம் இருக்கு? இப்படி ஒரு துறையே தேவையில்ல. கோயிலுக்கு வெள்ளை யடிக்கவாச்சும் ஒரு ரூபாய் கொடுத்திருப்பாங்களா? அன்னதானம் பண்ணுறதுக்கு ஒரு உண்டியல் வச்சதுக்கு கேள்வி கேட்க வர்றாங்க. திருவிழா நடத்த நோட்டீஸ் கொடுத்தோம். அப்புறம் எப்படி திருவிழா நடத்துறீங்க? இதுக்கெல்லாம் எப்படி செலவு பண்ணுறீங்கன்னு அறநிலையத்துறை கேட்க வேணாமா? கையாடல் பண்ணிட்டோம்னு சொல்றது தவறு''” என்று சீற்றமாகப் பேசினார்.

Advertisment

சாலியர் சமுதாயத்திலிருந்து விலக்கிவைக்கப் பட்ட சண்முகசுந்தரம் நம்மிடம் “"அருப்புக் கோட்டை டவுண் போலீஸ் ஸ்டேஷன்ல என்ன நடக்குதுன்னே தெரியல. இப்ப வரைக்கும் எப்.ஐ.ஆர். போடல. அறநிலையத்துறை ஆபீசர் சமாதானமா போயிட்டாருன்னு பேசிக்கிறாங்க. அப்படியா சார்னு ஆபீசர்கிட்ட கேட்டா, "அதெப் படி சமாதானமா போவோம்? கையாடல் பண்ணுன நகை, பணத்தை போலீஸ்காரங்க ரெகவரி பண்ணிக் கொடுக்கணும்'ல. அறநிலையத்துறைங்கிறது அரசுத்துறை. கையாடல் பண்ணுனவங்கள சும்மா விடமாட்டோம்னு கொதிப்பா பேசுறாரு. ஆபீஸர் பேச்சுல எனக்கு நம்பிக்கையில்ல. அதான், நானே முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு, கோயில்ல தனி உண்டியல் வச்சு கையாடல் பண்ணுனத புகாரா அனுப்பினேன். இது தெரிஞ்சுதான், என்னைய, என் மகன் குடும்பத்த சமுதாயத்த விட்டு விலக்கி வச்சிருக்காங்க. பனைஓலை பெட்டி உண்டியல் வைக்கிறதுக்கு முன்னாலயே கோயில்ல மாட்டி யிருந்த சி.சி.டி.வி. கேமராவ ஆஃப் பண்ணிட்டாங்க. அன்னதான உண்டியல்னு சொல்லுறதே ஒரு மோசடியான வேலைதான். திருவிழா நடந்த 12 நாள்ல ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பான்சர் அன்ன தானச் செலவை ஏத்துக்கிறாங்க. அப்புறம் எதுக்கு தனி உண்டியல்? எல்லாம் சுருட்டுறதுக்குத்தான். இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த ஆபீசர் சந்திரமோகனை அடிக்கப் பாய்ஞ்சிருக்காங்க. அன்னைக்கு அவரு தப்பிச்சதே பெரிய விஷயம். கோயில் நிர்வாகிகளுக்கு மடியில கனம் இருக்கு. அதான், பயந்துபோய் தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்கிறாங்க''’என்று வேதனைப்பட்டார்.

கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்பதில் இந்து சமய அறநிலையத் துறை மிக உறுதியாக இருக்கவேண்டும்.

Advertisment