Advertisment

குழந்தைப் பசிக்கு பால் வாங்க காசு இல்ல! -கண்ணீரில் பொம்மை விற்பனையாளர்கள்

n

ட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகம் வந்த பிரதமர் மோடி, தாராபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், "தமிழகத்தில் தரமான பொம்மைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைக்கப்படும்' என்றார். ஆனால் இங்கே வாங்கி வைத்த பொம்மைகளை விற்கக்கூட வழியின்றி பொம்மை வியாபாரிகளையும் நரிக் குறவர்களையும் கொரோனா ஊரடங்கு நெருக்கிக் கொண்டிருக்கிறது.

Advertisment

சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழையநிலைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

Advertisment

bar

தம

ட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகம் வந்த பிரதமர் மோடி, தாராபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், "தமிழகத்தில் தரமான பொம்மைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைக்கப்படும்' என்றார். ஆனால் இங்கே வாங்கி வைத்த பொம்மைகளை விற்கக்கூட வழியின்றி பொம்மை வியாபாரிகளையும் நரிக் குறவர்களையும் கொரோனா ஊரடங்கு நெருக்கிக் கொண்டிருக்கிறது.

Advertisment

சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழையநிலைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

Advertisment

bar

தமிழகம் முழுவதும் திருவிழாக்களில் பாசி மணி, ஊசி, விளையாட்டுப் பொருள், பொம்மைகள் விற்பனை செய்யும் நரிக்குறவர்களின் நிலை ரொம்பவே பரிதாபமாக உள்ளது. தமிழகம் முழுவதும் பாசி மணி விற்கும் பழங்குடியின (நரிக்குறவர்) மக்கள் சுமார் 50 ஆயிரம் பேர் வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்டமுடியாமல் தவியாய்த் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அறிவொளி நகரில் வசிக்கும் உமா, கனகா, பாண்டியன் போன்ற பலரும் நம்மிடம்... "எங்கள் வாழ்வாதாரம் பலூன், பாசி மணி, ஊசி, விளையாட்டுப் பொருள் விற்கிறதுதான். நாங்கள் கட்டும் மாலையைத்தான் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் பக்தர்களும் மாலையா போடுவாங்க. நாங்க யாரையும் ஏமாற்றிப் பிழைக்கமாட்டோம். திருவிழா நேரங்கள்ல வட்டிக்கு கடன் வாங்கி, பொருள் வாங்கி கோயில்ல வித்துட்டு உடனே கடனையும் வட்டியும் திருப்பிக் கொடுப்போம். அதனால எங்கள் நாணயத்தைப் பார்த்து அடுத்த முறையும் பணம் கேட்டால் கொடுப்பாங்க.

போனவருசம் கொரோனா வந்து அழிச்சது. எங்க ஊர்ல மட்டும் 100 பேர் வியாபாரம் செய்றோம். ஒவ்வொருத்தரும் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடன் வாங்கி பொருள் வாங்கி வந்து திருவிழா இல்லாம வீட்டுக்குள்ளேயே கிடந்தது. இந்த வருசமாவது திருவிழா இருக்கும்னு மறுபடி கடன் வாங்கி பொருள் வாங்கி முடிச்சு, இரண்டு திருவிழா வியாபாரம்b முடியும்போது திருவிழாவை நிறுத்திட்டாங்க. பொருள் எல்லாம் மூட்டையா கட்டி வீட்டுக்குள்ள கிடக்குது. வாங்கின கடனைக் கேட்டு கடன் கொடுத்தவங்க வரும்போது பதில் சொல்ல முடியாம ஓடி ஒளியுறோம். ஒருவேளை சோத்துக்கு தொட்டுக்க காய்கறி வாங்க காசு இல்லாமப் போச்சு.

வாங்கின கடனை அடைக்க முடியல. நாங்க ரேசன் அரிசியால பசியாறினாலும், எங்க குழந்தைங்க பசியால அழும்போது பால் வாங்கிக் கொடுக்க காசு இல்லாம நாங்களும் சேர்ந்து அழுறோம். கொரோனாவுல சாகுறதைவிட பசியால செத்துடுவோம் போலிருக்கு. இதையெலலாம் பார்க்கும்போது கொரோனா வந்து எங்கள ஒரேயடியா கொன்னுட் டாலும் சரினு தோணுதுய்யா.

ஊரடங்கின்போது, அடித்தட்டு மக்களுக்காவது ரேஷன் கடை அரிசியும் மளிகைப் பொருட்களும் இருக்கிறது. எங்களைப் போன்ற நரிக்குறவர்களுக்கு எதுவும் கிடையாது. முதல் ஊரடங்கில் நாங்கள் பிழைத்துவந்ததே பெரிய கொடுப்பினைதான். இன்னொரு ஊரடங்கைத் தாங்க எங்களுக்குத் தெம்பு கிடையாது.

எங்களைப்போல அன்றாடம் பிழைப்புக்காக பலூன் விக்கிற நரிக்குறவர் கூட்டம் மேல இந்த அரசாங்கம் கொஞ்சம் கருணை காட்டி நிவாரணம் கொடுத்தால் எங்க குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுப்போம். இல்லன்னா பசியிலேயே நோயாலயே செத்துடுவோம்''’என்றனர்.

ஊரடங்கு பயம் அடித்தட்டு மக்களையும், அமைப்புசார் தொழிலின் பாதுகாப்பின்கீழ் இல்லாதவர்களையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம். அரசுகள் கண் திறந்து பார்க்காவிட்டால், கொரோனாவுக்குச் சமமாக பட்டினிப் பேரழிவுகளும் பழிவாங்கத் தொடங்கிவிடும்.

nkn010521
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe