தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஜன. 21ஆம் தேதி, அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், 10,000 பேருடன் தி.மு.க.வில் இணைந் தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓ.பி.எ.ஸ்.ஸின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கிய பின்னரே தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அ.தி.மு.க.விலிருந்த கால கட்டங்களில் தஞ்சாவூரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வைத்திலிங்கம், அமைச்சராகவும் வலம் வந்தவர். இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்த நிலையில், கடந்த திங்களன்று, தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில், டெல்டா மண்டல தி.மு.க. மகளிரணி மாநாடு நடை பெற்றது. சுமார் 200 ஏக்கரில் பிரமாண்டமாக மேடை, விழா பந்தல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் மேடையேறிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் நேரு உள்ளிட் டோர் வீரவாள் பரிசாகக் கொடுத்தனர். தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., "தடியூன்றி நடக்கின்ற பெரியாரும் இல்லை, தமிழூன்றி நடக்கின்ற கலைஞரும் இல்லை, கொடியேற்றி கழகத்தைத் தொடங்கிவைத்த பேரறிஞர் அண்ணாவும் இல்லை. இப்படி இந்தப் படிக்கட்டுகளை அமைத்திட்ட எந்தத் தலைவர்களும் பக்கத்தில் இல்லை என்றாலும், இந்த மூன்று வெடிமருந்தையும் தன் மூளைக்குள் தாங்கிக்கொண்டு தமிழகத்தை வென்றெடுத்தார் நம் முதல்வர்.
அதுமட்டுமல்லாமல், "அன்பு உடன் பிறப்புக்களே' என்ற ஒற்றைக் காவியத்தை கலைஞர் வைத்தாரென்றால், "அப்பா' என்ற ஒற்றை வார்த்தையிலேயே வரலாற்றைப் படைத்தவர் நம் முதல்வர். விதவைக்கு கைம் பெண், ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத் திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை என்று பெயரிட்ட தாயுமானவர் கலைஞரின் வழியில், பெண்களுக்கு "இலவசப் பேருந்து' என்று இல்லாமல் "கட்டணமில்லா விடியல் பயணம்' பெண்களுக்கு உதவித்தொகை என்று இல்லாமல் "உரிமைத் தொகை', "புதுமைப்பெண் திட்டம்', "நான் முதல்வன் திட்டம்' என்று திட்டங்களின் பெயர்களில் கூட பெண்களுக்கு சுயமரியாதையைத் தருவது நம் திராவிட மாடல் ஆட்சிதானே! ஒரு பெண் இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் வெற்றிப் புன்னகையோடும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் முதல்வர் இந்த நாட்டை ஆள்கிறார் என்பது மட்டுமல்ல, நம் அப்பா, இந்தப் பெண் சமூகத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள் கிறார் என்பதே எங்கள் நம்பிக்கை.
விளையாட்டுத் துறையில், முக்கியமாகப் பெண்கள், கபடியில் கண்ணகி, நாகரத்தினம், கார்த்திகா, கிரிக்கெட்டில் ஜெமிமா என முன் வருவதற்கு காரணமே நம்முடைய திராவிட மாடல் அரசு தானே! கொள்கையில்லாத தலை வர்கள் நல்ல ரசிகர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், ஒருபோதும் நல்ல தலைவர் களை உருவாக்க முடியாது. திராவிடத்திற்கு என்றும் இல்லை வறட்சி, என்றும் இருப்பது வளர்ச்சி, எழுச்சி, அதற்கு சாட்சி நம் முதல்வருடைய ஆட்சி! நாடு போற்றும் இந்த ஐந்தாண்டு, தொடரட்டும் பல்லாண்டு... மீண்டும் நீங்களே முதல்வர், மீண்டும் மீண்டும் நீங்களே முதல்வர்!'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/dmkwomenconference1-2026-01-29-16-30-52.jpg)
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆதர வாளர்கள் 10,000 பேர் தி.மு.க.வில் இணைந் துள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "வைத்திலிங்கம், நான் எதிர்பார்த்ததைவிட தன்னை அதிகமான அளவிற்கு இந்த இயக்கத்திற்கு ஒப்படைத்து, இந்த இயக்கத்திற்கு சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக் கும் வந்திருக்கிறது. வைத்திலிங்கத்தை பல நேரங் களில் பார்த்ததுண்டு. மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றியபோது அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, சிறப்பாக, சுறுசுறுப்பாக எல்லாரையும் கவரும் வகையில் அவர் பணியாற்றிய அந்த காட்சியையும் நான் பார்த்ததுண்டு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. கட்சி என்பது, உடைந்து சின்னாபின்னமாகி இருந்த நிலையில், அப்பொழுது அவர் சட்டப்பேரவையில் அமர்ந்த காட்சியை யும் பார்த்தது உண்டு. அவர் முகத்தில் ஒரு சோர்வு இருந்துகொண்டே இருக்கும். எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருப்பார். ஏதோ வேண்டாவெறுப்பாக சில கேள்விகளைக் கேட்பார்.
இதைப் பல நேரங்களில் பார்த்த துண்டு. ஆக, அது என்ன என்பது இப்போது புரிந்துள்ளது. சுயமரியாதையோடு நாம் இருக்க முடியவில்லை, சுயமரியாதையோடு பணியாற்ற முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளத் தில் இருந்துள்ளது. என்ன, அவர் லேட்டாக வந்துள்ளார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ் டாக பணியாற்றவுள்ளார்'' என்று கூறினார்.
மேலும், "ஏற்கெனவே இதே பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி, 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று தோற்றுப் போனார்கள். 2024 தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. என்கிற வேஸ்ட் லக்கேஜை கழற்றிவிட்டு, "அப்புறமா சேர்த்துக்கலாம்' என்று மறைமுகக் கூட்டணியாக வந்தார்கள். ஆனால் எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு கெட் அவுட்தான் என்று தமிழக மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிட்டாங்க.
இப்போ திரும்ப வும் பழையபடியே உடைந்துபோனதை யெல்லாம் ஒட்டி எடுத்துக்கொண்டு, புதுசா என்.டி.ஏ. கூட்டணி என்று வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி கட்டாயத்தால் உருவாகியிருக்கிற கூட்டணி என்று. மிரட்ட லால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. முழுக்க முழுக்க தனது சுய லாபத்திற்காக வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள பழனிசாமி உருவாக்கிய சுயநலக் கூட்டணி.
டெல்லிக்கு ரகசியமாக பல கார்களில் மாறி மாறிச் சென்று, அங்கே வழக்குகளைக் காட்டி மிரட்டியதும், ஏ.சி. காரிலிருந்தும் ஒருவருக்கு முகம் எல்லாம் வியர்த்து விறுவிறுக்க, எப்படி கர்சிஃப் வைத்து துடைத்துக்கொண்டு வந்தார் என்பதை நாடே பார்த்தது'' என்று பேசினார்.
தன்னோடு 10,000 பேரை தி.மு.க.வில் இணைத்ததன் மூலம், அ.தி.மு.க.வுக்கு டெல்டா மாவட்டத்தில் கலக் கத்தையும், தி.மு.க.வுக்கு பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார் வைத்தி-ங்கம்.
_______________________
இந்த மாநாட்டில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் எனப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்..
மாநாட்டுத் திடலில் போடப்பட்டிருக்கும் நாற்கா-களில் பை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பையில் சிக்கன் பிரியாணி வைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ், மேரி கோல்டு, குட் டே பிஸ்கட், பாதுஷா, மிக்சர், தண்ணீர், மாஸா கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை இருந்தன.
தஞ்சாவூர் -திருச்சி சாலையிலுள்ள செங்கிப்பட்டியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்' தி.மு.க. டெல்டா மகளிர் அணி மாநாட்டுக்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் மகளிர் அழைத்து வரப்பட்டனர். இதற்காக அந்தச் சாலையின் போக்குவரத்து மாற்றப்பட்டது. மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு வரை போக்குவரத்து நெரிசலால் பேருந்துகள் அணி வகுத்து நின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/dmkwomenconference-2026-01-29-16-30-39.jpg)