மூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டு மண், மொழி, மானம் காக்கும் தமிழின உணர்வில் 75 ஆண்டு காலத்தை நிறைவு செய்திருக்கிறது தி.மு.க. இதனைக் கொண்டாடும் வகையில் "தி.மு.க. 75' அறிவுத் திருவிழாவாக முன்னெடுத்திருக்கிறார் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின். 

Advertisment

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த அறிவுத் திருவிழாவை சனிக்கிழமை (8-ந் தேதி) தொடங்கி வைத்தார் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். மேலும், "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' எனும் புத்தகத்தை வெளியிட்டும், "இரு வண்ணக் கொடிக்கு வயது 75' எனும் தலைப்பிலான கருத்தரங்கத்தையும், முற்போக்கு புத்தகக் காட்சியையும் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

Advertisment

வள்ளுவர் கோட்டம் வந்த மு.க.ஸ்டாலினை, உதயநிதி, கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அரசியல் நூல்களின் அணிவகுப்பாக நடத்தப்பட்ட முற்போக்கு புத்தகக் காட்சியை துவக்கிவைத்து 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட புத்தக ஸ்டால்களையும் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அவருடன் இணைந்து  புத்தகக் கண்காட்சியை "இந்து' ராம் மற்றும் நக்கீரன் ஆசிரியரும் பார்வையிட்டனர். 

இந்த அறிவுத் திருவிழாவில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திராவிட சிந்தனையாளர்கள், ஆளுமைகள், அறிஞர்கள் உள்பட தி.மு.க.வின் இரு வண்ணக் கொடியை ஏந்தி உணர்வுடன் உழைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் இளைஞரணி உடன்பிறப்புகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, சாமிநாதன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் முன்னிலை வகித்த இந்த வரலாற்று நிகழ்வில், திணை நிலவாசிகள் குழுவினரின் "தன்மானம் காக்கும் கழகம்' எனும் மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டது. 

Advertisment

"தி.மு.க.வின் 75 ஆண்டு கால வரலாற்றைக் பதிவு செய்திருக்கும்... "காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு' எனும் கனமான நூலை ஸ்டாலின் வெளியிட, அதனைப் பெற்றுக்கொண்டார் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன். 

அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் தி.மு.க. ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர் கள், சமூக சிந்தனையாளர்கள், தி.மு.க. வின் தலைமைக்கழக நிர்வாகிகள் என பலரும் எழுதிய கட்டுரைகள் அடங்கிய 1,120 பக்கங்களைக் கொண்ட அறிவுப் பெட்டகமாக இருக்கிறது காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு எனும் நூல்.                 

dmk

விழாவில் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப்பேசிய நூல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ப.திருமாவேலன், அறிஞர் அண்ணா, கலைஞர், திராவிட மாடல் நாயகர் ஸ்டாலின் ஆகிய மூவரையும் ஒப்பிட்டுப் பேசினார். 

நூலை பெற்றுக்கொண்டு உரையாற்றிய துரைமுருகன்,‘’"ஒரு கட்சி ஆரம்பித்தால் பல கொள் கைகளைச் சொல்வார்கள். அந்த கொள்கைகளை நிறைவேற்ற கட்சி வேலை செய்யும். தி.மு.க.வை பொறுத்தவரையில், அர சியலில் சமரசங்கள் ஏற் பட்டாலும், உயிர்க் கொள்கை களான இந்தி எதிர்ப்பு, சுய மரியாதை, சமூகநீதி உள் ளிட்டவைகளை விட்டுக் கொடுத்த தில்லை. தி.மு.க. எனும் இந்த இயக்கத்தை ஆரம்பித்து 67-ல் ஆட்சியைப் பிடித்து, அதை கலைஞர் கையில் ஒப்படைத்துவிட்டு போனார் அண்ணா. கலைஞர் மிகவேகமாக, அற்புதமாக இந்த நாட்டை ஆண்டார், இயக்கத்தை கட்டிக் காத்தார். கலைஞரும் மறைகிறபோது, ஸ்டாலினை அழைத்து என் பாதையில் நட என்று அறிவுறுத்தி இந்த இயக்கத்தை ஒப்படைத்திருக்கிறார். கலைஞருடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவன். ஸ்டாலினை இளம் பிராயத்திலிருந்து அறிந்தவன். இன்றைக்கு நானே வியக்கிற அளவுக்கு, போற்றுகிற அளவுக்கு, சல்யூட் அடிக்கிற அளவுக்கு ஸ்டாலின் ஆற்றும் பணிகளைப் பார்த்து மெத்த பெருமைப்படுகிறேன்.

அதேபோல, இந்த இடத்திற்கு (தலைவர் பதவி) நிச்சயமாக, சத்தியமாக வருவார் உதயநிதி. அப்போது, கலைஞர், ஸ்டாலின் அடைந்த புகழைவிட அதிகமாக பேரும், புகழும் பெறக்கூடியவர் தம்பி உதயநிதி.  வரலாற்றில் ராஜராஜனுக்கு பிறகு ராஜேந்திர சோழன். ராஜராஜன் மன்னனாக இருந்தபோதே, அந்த பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக்கொண்டான். தாய்லாந்துவரை சென்று தனது ஆட்சியை நிறுவியவன். உதயநிதியும் ஒருநாள் அத்தகைய ராஜேந்திர சோழனாக மாறுவார். எதைச் செய்தாலும் சரியாக செய்கிறார் உதயநிதி. இனி இந்த இயக்கத்துக்கு அழிவில்லை. கலைஞர் குடும்பத்திலிருந்து வந்திருக்கிற உதயநிதி, இனிமேல் கட்சியை பார்த்துக் கொள்வார்''’என்றார். 

விழாவில் தலைமையுரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "இந்த விழாவிற்கு அறிவுத் திருவிழா என பெயரிட்டிருக்கிறார் உதயநிதி. இதைவிடப் பொருத்தமான பெயர் வேறு எதுவும் இருக்க முடியாது. கழகத்தை தொடங்கியவர் அண்ணா; அதை கட்டிக் காத்தவர் கலைஞர். இந்த அறிவுத் திருவிழாவை நடத்தும் பணி களில் கடந்த ஒருமாத காலமாக மும்முரமாக ஈடுபட்டு வந்தார் உதயநிதி. என்னதான் செய்கிறார்; பார்ப்போம் என நானும் காத்திருந்தேன். இந்த விழாவை பார்க்கிற போது, என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. உதயநிதியின் கொள்கைப் பிடிப்புமிக்க செயல்பாடுகளைப் பார்க்கிறபோது, அய்யன் வள்ளுவர் சொன்ன, மகன் தந்தைக்காற்றும் உதவி எனும் குறளுக்கேற்ப பெருமை யோடு இருக்கிறார். இந்த அறிவுத் திருவிழாவை இத் தோடு நிறுத்திவிடாமல் ஆண்டுதோறும் நடத்த வேண்டும். 

தி.மு.க.வின் வரலாறு தெரியாதவர்கள் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். சில அறிவிலிகள், தி.மு.க.வைப் போல வெற்றிபெறுவோம் என பகல் கனவு காண் கிறார்கள். தி.மு.க.வைப் போல வெற்றிபெற தி.மு.க.வைப் போல அறிவும், உழைப்பும் தேவை. ஒரு சூரியன்; ஒரு சந்திரன்; ஒரு தி.மு.க.தான்! இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. இந்த வரலாற்றையும் கொள்கைகளையும் தம்பி உதயநிதி ஏற்றதால்தான் லட்சக்கணக்கான இளைஞர்களை தி.மு.க.வுக்கு கொண்டுவந்திருக்கிறார். 

முரசொலியின் கடைசிப்பக்கத் தை பாசறைப் பக்கமாக மாற்றினார். கொள்கைகளைப் பரப்ப முத்தமிழறி ஞர் பதிப்பகத்தை தொடங்கினார். தொகுதிதோறும் கலைஞர் நூலகத் தைத் திறந்திருக்கிறார். இளம் பேச்சாளர்களை உருவாக்குகிறார். இந்த அறிவுத் திருவிழா மூலமாக இளம் எழுத்தாளர்கள், ஆராய்ச்சி யாளர்களை உருவாக்கி வருகிறார். இதுதான் பெரியார், அண்ணா, கலை ஞர் செய்த பணி. நான் விரும்பும் பணி. இதை உதயநிதி செய்வதால், தி.மு.க.வின் முதன்மைத் தொண்ட னாக எனக்கு பெருமகிழ்ச்சி. 

இன்றைக்கு நாம் வெளியிட்டி ருக்கும் "காலத்தின் நிறம் கருப்பு- சிவப்பு' எனும் புத்தகத்தின் தலைப்பி லேயே, நம்முடைய இயக்கம் எத்தகைய மாபெரும் அறிவுக் கருவூலமாக, கொள்கைத் தீரர்களின் கோட்டமாக இருக்கிறது என்பதை பறைசாற்றியிருக் கிறார்கள். திராவிட இயக்கத்திற்கு சார்பானவர்கள் மட்டுமல்ல; திராவிட இயக்கத்திற்கு வெளியிலிருந்து செயல்படுகிறவர்களும், விமர்சிப்பவர்களும் கூட இந்த நூலில் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். 

இந்தியாவே போற்றும் இயக்கமாக நிற்கும் தி.மு.க.வின் வளர்ச்சியும் சாதனைகளும் பலரின் கண்களை உறுத்துகிறது. நாம் பேசும் சமூகநீதி, சுய மரியாதை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆகியவை இந்தியா முழுவதும் பரவிவிட்டது. இந்த அறிவுத் திருவிழா, திராவிடம் வெல்லும்; அதனை காலம் சொல்லும் என முழங்கும் திருவிழா. இங்குள்ள இளைஞரணி யினரை பார்க்கிறபோது, எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும், எத்தனை பெரிய தந்திரங்களைச் செய்தாலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை உணர்த்துகிறது. முற்போக்கு விழாவாக கருப்பு -சிவப்பு -நீலம் சேர்ந்திருக்கும் போது எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்திட முடியாது. இந்திய ஜன நாயகத்தையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க 2019-ல் தொடங்கிய நம் பயணம் 2026-லும் வெற்றிபெறும்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். இந்த ஸ்டாலினின் கொள்கை வாரிசுகள் இருக்கும்வரை தமிழ்நாடு தலைகுனியாது'' என்று உணர்ச்சிப்பூர்வமாக முழங்கினார் ஸ்டாலின். 

dmk2

"இரு வண்ணக்கொடிக்கு வயது 75' எனும் கருத்தரங்கம் 10 அமர்வுகளுடன் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடந்தன. இந்த கருத்தரங்கங்களுக்கு கனிமொழி கருணாநிதி, ஆர்.எஸ்.பாரதி, பேராசிரியர் நாகநாதன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் சிவசங்கர், கொ.ப.செ. எழிலரசன், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, சென்னை இதழியல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பன்னீர்செல்வன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின், கல்வியாளர் அணி தலைவர் செந்தலை கவுதமன் ஆகியோர் தலைமை வகிக்க... இதில் பங்கேற்று எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, கொ.ப.செ. சபாபதிமோகன் உள்ளிட்ட பலர் பேசினர். பல்வேறு தலைப்புகளில் ஆளுமை களும் சிந்தனையாளர்களும் கருத்தரங்கத்தில் உணர்ச்சியுரையாற்றினர். 

ஆறாவது அமர்விற்கு தலைமையேற்றுப் பேசிய கனிமொழி  கருணாநிதி, "தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, பல்வேறு கணைகள் நம்மை நோக்கி வீசப்பட்டு வருகின்றன. தி.மு.க.வை நோக்கி பல்முனை தாக்குதல்கள் நடக்கின்றன.  ஏனெனில்,  அவர்களின் ஒரே இலக்கு  நாம்தான். அதனால்தான், எல்லாவிதத்திலும் நம்மை நோக்கி கணைகளை எய்து கொண்டிருக்கிறார்கள். நமது பாரம்பரிய எதிரிகளுக்கும், பரம்பரை எதிரிகளுக்கும், எதிரியாக இருக்கும் ஒரே கட்சி என்றால், அது தி.மு.க.தான். கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக அறத்தின் வழியில் நின்று அவர்களை எதிர்க்கக்கூடியவர்கள் நாம் மட்டும்தான். 

நாங்கள் மட்டுமே அறிவாளிகள் எனும் மிதப்பில் திரியும் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, சாதாரண சாமானிய, ஒடுக்கப்பட்ட மக்களான தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எடுத்ததுதான் அறிவும் மொழியும் என்கிற ஆயுதம். அந்த மொழியைத்தான் இன்று அமைச்சர் உதயநிதி, இந்த அறிவுத் திருவிழாவின் மையமாக வைத்து முன்னெடுத்துள்ளார். 

திரைப்படங்களில் அவர்களுடைய மொழி, இலக்கியங்களில் அவர்களுடைய வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், மதிப்பீடுகள் ஆகியவையே அந்தக் காலத்தில் இலக்கியமாக இருந்தது. சில பேர்தான் பத்திரிகை நடத்தலாம் என்றிருந்த அந்த காலகட்டம் தாண்டி 200 பேருக்கு மேல் சாதாரண, சாமானிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வந்த மனிதர்         களும் பத்திரிகை ஆசிரியர்களாக, பத்திரிகை நடத்தக்கூடியவர்களாக உயர்ந்தார்கள். அந்த மாற்றத்தை உருவாக்கியது,  திராவிட இயக்கம்தான். 

அதேபோல், நாங்கள்தான் படிக்க முடியும், எங்கள் கைகளில்தான் கல்வி இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், தெருவுக்குத் தெரு நூலகங்களை திறந்து வைத்து, எல்லாரும் வந்து படியுங்கள்... உங்களாலும் படிக்க முடியும் என்று சொல்லி, உள்ளே வந்து படிக்க ஆரம்பித்தவுடன் -யாரையும் வென்று காட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டியது திராவிட இயக்கம்'' என்றார் ஆவேசமாக. 

ஒன்பதாவது அமர்விற்கு தலைமையேற்றிருந்த கோவி.லெனின் பேசும்போது, "கம்யூனிச கட்சியின் அறிக்கையை வெளியிடுகிறபோது காரல் மார்க்ஸும், பிரடெரிக் ஏங்கல்ஸும் "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்றார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, "வெள்ளையனே வெளியேறு' என்றார் மகாத்மா காந்தி. அமெரிக்காவின் கருப்பின மக்களுக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங், "என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்றார். அதேபோல பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு இந்த இயக்கத்திற்கு தலைமையேற்ற கலைஞர், "அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி எனும் ஐம்பெரும் முழக்கங்களை தந்தார்''’என்றார் . 

இறுதிநாளில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ’"இந்த அறிவுத் திருவிழாவை இரண்டு நாட்கள் நடத்திக் காட்டி யிருக்கிறோம். இப்படி ஒரு விழாவை அ.தி.மு.க.வால் நடத்திக் காட்ட முடியுமா? அ.தி.மு.க. நடத்தினால் அது அடிமைத் திருவிழா. பாசிச பா.ஜ.க.வால் நேரடியாக தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடியவில்லை. அதனால் வேறு, வேறு வேடமிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே நினைவிற்கு வருகிறது. ஒன்று கால், இன்னொன்று கார். ஒரு கட்சியின் தலைவர் மற்றொரு கட்சிக்காரரைப் பார்க்க எதற்கு நாலு கார் மாறி, முகத்தை மூடிச் செல்லவேண்டும்? 

ஜெயலலிதா இருந்தபோது அவரது கால், அவர் மறைந்ததும் சசிகலாவின் கால், அவர் ஊழல் வழக்கில் சிறை சென்றவுடன், டி.டி.வி. தினகரன் கால், கொஞ்சம் நாள் புரமோஷன் வாங்கி மோடி மற்றும் அமித்ஷாவின் கால், இதுவரை விழுந்த கால்கள் பத்தவில்லை என்று புதிய கால் தேடிக்கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. தொண்டர்களைப் பார்க்கும்போது நமக்கு பாவமாகத்தான் உள்ளது. நமது இயக்கத்தை யார் வீழ்த்த நினைத்தாலும், அவர்களின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை உணத்தும் இடம்தான் வள்ளுவர் கோட்டம். இது வெறும் வள்ளுவர் கூட்டம் அல்ல; கழகத்தின் வெற்றிக் கூட்டம்! கொள்கையற்ற ஒரு கூட்டமும் பாசிச கட்சியும் தமிழகத்தை குறி வைக்கின்றன.  கொள்கைதான் நம்மை வழிநடத்துகிறது. எடப்பாடி பழனிச்சாமியை பயம் வழி நடத்துகிறது.  திராவிடம் எனக் கேட்டாலே பாசிசம் பதறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் இன்றைக்கு நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. 

கொள்கைதான் தி.மு.க.வின் அடித்தளம். அதன் மீது கட்டப்படும் கோட்டைதான் வலுவாக இருக்கும். இப்போது அடித்தளமே இல்லாமல் அரசியலுக்கு வர சிலர் முயற்சிக்கிறார்கள். கண்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்... அங்கே தாஜ்மகால் மாதிரி, ஈபிள் டவர் மாதிரி செட் போட்டிருப்பார்கள். கண்காட்சிக்குப் போகிறவர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அவையெல்லாம் வெறும் அட்டைதான். எந்த அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டுனா கீழே விழுந்துவிடும். (நடிகர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கினார்) வரும் தேர்தலில் உங்களின் எழுச்சி மற்றும் உணர்ச்சி அடுத்த நாலு மாத காலம் இருக்க வேண்டும். நான் உங்களுடன் இருக்கிறேன். தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதை நீங்கள் உருவாக்க வேண்டும்''’என்றார் உதயநிதி ஸ்டாலின்.