Advertisment

கோஷ்டிப் பூசல் இல்லை... குடும்பப் பூசல்! -ஈரோடு பாலிடிக்ஸ்!

dd

"தி.மு.க. இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கக்கூடும்' என்று பல விமர்சகர்களால் வைக்கப்படும் தொகுதி ஈரோடு. அதற்குக் காரணம் அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இந்த தேர்தலை மையப்படுத்தி கடந்த மூன்று வருடமாக இந்த தொகுதியில் பல்வேறு ஊர்களில் கோயில் பணிகளுக்கும், பொதுப்பணிகளுக்கும் செலவழித்ததாகவும், தேர்தலிலும் கோடிக்கணக்கில் வாரியிறைப்பாரென்றும் சொல்லப்பட்டது.

Advertisment

உண்மையில் அந்த அசோக்குமார், வேட்பாளராகக் களமிறங்கிய பிறகு, பணத்தையே வெள

"தி.மு.க. இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கக்கூடும்' என்று பல விமர்சகர்களால் வைக்கப்படும் தொகுதி ஈரோடு. அதற்குக் காரணம் அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இந்த தேர்தலை மையப்படுத்தி கடந்த மூன்று வருடமாக இந்த தொகுதியில் பல்வேறு ஊர்களில் கோயில் பணிகளுக்கும், பொதுப்பணிகளுக்கும் செலவழித்ததாகவும், தேர்தலிலும் கோடிக்கணக்கில் வாரியிறைப்பாரென்றும் சொல்லப்பட்டது.

Advertisment

உண்மையில் அந்த அசோக்குமார், வேட்பாளராகக் களமிறங்கிய பிறகு, பணத்தையே வெளியே எடுக்கமுடியாதென்றும், தேர்தல் முடிந்ததும் தருகிறேனென்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கூறி ஏமாற்றினார்.

er

முன்னாள் அமைச்சர்கள் பஞ்சாயத்து நடத்தி யும் அசோக்குமாரிடமிருந்து பணத்தைப் பெற முடியவில்லை. ஒருகட்டத்தில் வெறுத்துப்போன செங்கோட்டையன், "இந்த பையன கட்சியில் வச்சிருந்தால் பழனிச்சாமி பதவிக்கே ஆபத்து வந்துடும். ரிசல்ட் வந்ததும் உடனே கட்சியை விட்டு நீக்கச் சொல்லு'' எனத் தங்கமணியிடம் கூறியிருக் கிறார். அதேபோல், அமைச்சர் முத்துசாமிக்கும், ஈரோடு தி.மு.க. வேட்பாளர் பிரகாஷுக்கும் இடையே மோதலென்று செய்தி பரப்பப்பட்டது. அதிலும் உண்மையில்லை. இந்த தேர்தலில் ஈரோடு மட்டுமின்றி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி தொகுதி பணிகளையும் முத்துசாமி ஏற்றுக் கொண்டு முன்னின்று சுறுசுறுப்பாக செய்து முடித் தார். ஒட்டுமொத்த செலவுகளையும் முத்துசாமி ஏற்றுக்கொண்டு இயங்கினார். நான்கு தொகுதி களையும் கவனித்ததால் ஈரோடு வேட்பாள ருடன் அதிகமாக பய ணிக்க முடியாததையே பூதாகரமாக்கினார்கள்.

Advertisment

இந்நிலையில், கடந்த இரண்டாம் தேதி ஈரோடு தொகுதி தி.மு.க. செயல்வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் வேட்பாளர் பிரகாஷ், "எனக்கும் அமைச்சருக் கும் சண்டை என்று ஊடகத்தினர் கூறுகிறார்கள். ஆமாம், எனக்கும் அமைச்சருக்கும் சண்டைதான். அமைச்சர் முத்துசாமிக்கும் எனக்கும், தந்தைக்கும், மகனுக்கான உறவு. அமைச்சரிடம் எனக்கு இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் எனக் கேட்பேன். அதில் இது சரி, அது தவறு என்று அமைச்சர் கூறியதுண்டு. எனது வெற்றிக்காக ஒரு தந்தை யைப் போல் உழைத்தவர் அண்ணன் முத்துசாமி. இந்த உறவை புரிந்து கொள்ளுங்கள்'' என்றார். அதேபோல் அமைச்சர் முத்துசாமியும், "எங்களுக் குள் எந்த சண்டையும் இல்லை. இந்த மேற்கு பகுதியிலுள்ள அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. அமோக வெற்றிபெறும். எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பதுதான் ஒரே நோக்கம்'' என்றார்.

"ஈரோடு தி.மு.க.வில் கோஷ்டி பூசல் இல் லை, இது குடும்ப பூசல்' என வேட்பாளர் பிரகாஷ் வெளிப்படையாக பேசி, முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

nkn080524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe