ர்.டி.ஓ. ஆபீஸ்னாலே திருப்பதி கோவில் உண்டியல் மாதிரி காசு புழங்கும். நாகப்பட்டினம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தரச்சான்று பெற வரும் வாகனங்களைக்கூட பரிசோதிக்காமல் லஞ்சம் வாங்கிக்கொண்டு வாகன ஓட்டிகளின் உயிருக்கு உலை வைக்கிறார்கள் என்ற பகீர்க் குற்றச்சாட்டு நம் காதுக்குவர…எஃப்சிக்கு வாகனத்தை எடுத்துச்செல்பவர் கெட்-அப்பில் ஸ்பாட்டுக்குச் சென்று நோட்டமிட்டபோதுதான் ஷாக் மேல் ஷாக்!

Advertisment

rtoநீட்’ எழுதப்போகும் ரேஞ்சுக்கு மனதை திடப்படுத்திக்கொண்டு கஷ்டப்பட்டு எட்டுபோடும் வாகன ஓட்டிகளை கண்டுகொள்ளவே இல்லை. சரி, இதுகூட பெரும்பாலான டிரைவிங் ஸ்கூல் ஓனர்களிடம் டை-அப் வைத்துக்கொண்டு வழக்கமாக நடப்பவைதான் என்று காத்திருந்த நமக்கு அதிர்ச்சி. காரணம், எஃப்.சி. எனப்படும் (எண்ற்ய்ங்ள்ள் ஈங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்) தரச்சான்றுகள் பெற ஆட்டோக்கள், கார்கள், குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்கள் என வாகனங்கள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தன. ஆனால், அந்த வாகனத்தின் எண் சரியாக இருக்கிறதா? தெள்ளத்தெளிவாக தெரிகிறதா? உரிமையாளர் டாக்குமெண்டில் காண்பிக்கும் வாகன எண்ணும்…ஃபிட்னெஸ் சர்டிஃபிகேட்டுக்காக கொண்டுவந்து காண்பிக்கப்படும் வாகன எண்ணும் ஒன்றாக உள்ளதா? இண்டிகேட்டர் எரிகிறதா? சைடு கண்ணாடிகள் உள்ளனவா? இப்படி பல்வேறு விஷயங்கள் எதையும் பரிசோதிக்காமல் வாகன உரிமையாளர்கள் கொடுக்கும் டாக்குமெண்டுகளில் கண்ணைமூடிக்கொண்டு கையெழுத்துப்போட்டு "இந்தியன்' பட மகன் கமல்ஹாசனை நினைவுபடுத்துகிறார்கள்.

முதலில், ஒரு ஷேர் ஆட்டோ வருகிறது. டிரைவர் அண்ட் பயணிகள் சீட் கண்டிஷன் தொடங்கி எதையுமே பரிசோதிக்காமல் அப்படியே ஆட்டோவுக்குள் எட்டிப்பார்த்துவிட்டு டாக்குமெண்டில் சைன் போடுகிறார். ""கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?'' என்ற டயலாக் மின்னல் வேகத்தில் மனதில் வந்துபோனது.

அடுத்தது, ஒரு ஆட்டோ வர… அதற்கும் அதே அதே பரிசோதனைதான். அடுத்து, வெள்ளைநிற அம்பாசிடர் வருகிறது. ஆனால், கண்காணிக்கவேண்டிய இன்ஸ்பெக்டரின் கண்ணோ வாகன உரிமையாளரை நோக்கித்தான் இருந்தது. அடுத்து வந்த காரை மட்டும் பரிசோதித்துவிடுவாரா என்ன? அதற்கடுத்து, ஒரு ட்ராக்டர் வர, அதன் அருகே செல்கிறார். பரவாயில்லையே… இதையாவது பரிசோதிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே என்று ஆவலோடு பார்த்து ஏமாந்துபோனோம்.

Advertisment

அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் சென்று தடவிப்பார்த்துவிட்டு டாக்குமெண்டில் சைன் பண்ணுகிறார்.

rtoகண்களால் மட்டுமா நாம் பார்த்துக்கொண்டிருந்தோம்? நோ,… நமது செல்போன் கேமரா மூலம் இந்த வேதனைக்காட்சிகளை அப்படியே பதிவு செய்துகொண்டோம்.

இதுகுறித்து, ஓட்டுநர் உரிம பரிசோதனைக்காக வந்திருந்த முத்துக்குமார் என்பவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, ""எட்டுப்போடுறதுக்கு நடுக்கமாகவே இருந்துச்சு. ஆனா, கொஞ்ச நேரத்துல எங்க டிரைவிங் ஸ்கூல் இன்சார்ஜ் வந்து ஒவ்வொருத்தர்கிட்டேயும் 200 ரூபாய் வாங்கிக்கொடுக்க.. நல்லவேளையா எட்டுபோடவே சொல்லல இன்ஸ்பெக்டர் கருப்பசாமி'' என்று நாம் பார்த்த காட்சிக்கு வலுக்கூட்டினார்.

இதுகுறித்து, நம்மிடம் பேசும் 23 வருட அனுபவம் வாய்ந்த டிரைவர் சசிக்குமார், ""வாகனங்கள் எஃப்.சிக்கு வருவதே விபத்துகள் ஏற்படுத்தாத அளவுக்கு தரமாக உள்ளனவா என்று பரிசோதிக்கத்தான். பணம் வாங்கிக்கொண்டு லைசென்ஸ் கொடுப்பதால்தான் முறையான டிரைவர்கள் இல்லாமல் எங்குபார்த்தாலும் விபத்துகள் நடக்கின்றன. ஏற்கனவே, இந்தியாவில் அதிக விபத்துகள் உயிரிழப்புகள் நடக்கும் மாநில பட்டியலில் தமிழகம் முன்னணியில இருக்கு. இப்படி, "கவனிப்பவர்'களின்’ வாகனங்களை கவனிக்காமல் விட்டால் இன்னும் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்'' என்று குற்றம்சாட்டுகிறார்.

குற்றச்சாட்டுகள் குறித்து, ஆர்.டி.ஓ. இன்ஸ்பெக்டர் கருப்பசாமியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, ""என்னை வேலை செய்யவிடாம தொந்தரவு பண்றீங்க'' என்றபடி போனை துண்டித்தார்.

வேலையை ஒழுங்கா செஞ்சிருந்தா நாங்க ஏன் தொந்தரவு செய்யப்போறோம்? துட்டே முக்கியம் என்கிற இதுபோன்ற அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பள்ளி வாகனம் மற்றும் வாகன விபத்துகளை தடுக்கமுடியாது.

-செந்தூர்பாண்டி