Advertisment

வேண்டாம் மாநகராட்சி! தேர்தலை புறக்கணிப்போம்! -புதுக்கோட்டை பரபரப்பு!

22

புதுக் கோட்டை நாடாளு மன்றத் தொகுதி என்ற அந்தஸ்து, பெருமையை இழந்து நிற்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொகுதிச் சீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை தொகுதியை சின்னா பின்னமாக உடைத்து, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் என 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் சேர்த்து வைத்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

Advertisment

ff

இந்தநிலையில், புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சியை மாநக

புதுக் கோட்டை நாடாளு மன்றத் தொகுதி என்ற அந்தஸ்து, பெருமையை இழந்து நிற்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொகுதிச் சீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை தொகுதியை சின்னா பின்னமாக உடைத்து, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் என 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் சேர்த்து வைத்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

Advertisment

ff

இந்தநிலையில், புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே 'வேண்டாம் மாநகராட்சி!' என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து மாநகராட்சிக்கு எதிரான போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம் கிராம மக்கள் திங்கட்கிழமை ஒன்று கூடி, 'வேண்டாம் மாநகராட்சி!' என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு வேலை உறுதித் திட்டத்தில் 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. மாநகராட்சியானால் அது கிடைக் காது. ஆனால் எங் களை சம் மதிக்க வைக்க வேலை தருவதாகச் சொல்வாங்க, அப்பறம் தர மாட்டாங்க. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும், மாநகராட்சியாக்கினால் சொத்துவரி, குடிநீர் வரி உட்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்டவேண் டும். குப்பை வரி வாங்குவாங்க, ஆனா குப்பை அள்ள மாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரி யெல்லாம் எப்படி கட்டமுடியும்? அதனால் வேண் டாம் மாநகராட்சி என்று கோஷமிடுகிறோம்'' என்கின்றனர் போராட்டத்திலிருந்த பெண்கள்.

இது முதல்கட்ட போராட்டம்தான். இன்னும் பல கட்டப் போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை யென்றால் தேர்தலை புறக்கணித்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். பாரம்பரியமிக்க தனித்துவமான புதுக்கோட்டைக்கு இருந்த மக்களவை அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது மாநகராட்சியாக மாற்றப்படுமென்ற அறிவிப்பு, மக்களை போராடத் தூண்டிவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட் டத்தை உள்ளடக்கிய 4 தொகுதிகளையும் கூட் டணிக் கட்சிகளுக்கே ஆளும் தி.மு.க. தாரைவார்த் துள்ளது. இனிவரும் காலத்தில் புதுக்கோட்டை என்ற மாவட்டமே பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் மக்களிடம் உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த "வேண்டாம் மாநகராட்சி' போர்க்குரல், ஆளும் கட்சிக்கு பெருத்த தலைவலியாக உருவெடுத்துள்ளது.

Advertisment

nkn270324
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe