தி.மு.க. அணியின் 17 கவுன்சிலர்கள் அ.தி.மு.க. அணியின் 13 கவுன்சிலர்கள் என மொத்தம் 30 கவுன்சிலர்களைக் கொண்ட தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராட்சியின் தி.மு.க. பெண் சேர்மன் உமாமகேஸ்வரிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க.வின் 24 கவுன்சிலர்கள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருப்பது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜூலை 2 அன்று கமிசனர் நாகராஜனால் கூட்டப்பட்ட மன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில், 28 கவுன் சிலர்கள் ஆதரவு தெரிவிக்க, தீர்மானம் நிறைவேற் றப்பட்டு சேர்மன் பதவியை இழந்தார் உமா மகேஸ்வரி.
தனக்கெதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற உமாமகேஸ் வரி "தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமே நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இது சட்டத்திற்குப் புறம் பானது. எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என்று முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை "தீர்மானத் தை ஜூலை 17 அன்று ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவேண்டும்' என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஜூலை 17 அன்று நகராட்சி யின் கவுன்சிலர்கள் மன்றத்தைக் கூட்டிய (பொறுப்பு கமிசனர் நாகராஜ்) தீர்மானத்தை ரகசிய வாக் கெடுப்பிற்கு விட்டிருக்கிறார். அதுசமயம் ஆத்திரத் தோடு வந்த உமாமகேஸ்வரி, கமிசனரின் முன்னே வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியை படாரென தள்ளிவிட்டவர், "நீங்கள் இதை நடத்தக்கூடாது. வேறு ஒரு கமிசனர்தான் நடத்தவேண்டும் என்று உத்தரவு. 11 மணிக்கு நடத்தவேண்டிய வாக்கெடுப் பை 11:27க்கு நடத்துகிறீர்கள். அதனால் உங்கள் மீது நம்பிக்கையில்லை' என்று வாதிட... அரங்கத்தில் அமளியாக. ஒருவழியாக அமளி முடிவுக்கு வந்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 28 கவுன்சிலர்களும் எதிராக இரண்டு கவுன்சிலர்களும் வாக்களிக்க மறுபடியும் பதவியிழந்திருக்கிறார் உமாமகேஸ்வரி.
இதுகுறித்து நகரின் சீனியர் தி.மு.க. புள்ளிகள், சில கவுன்சிலர்களிடம் பேசியபோது... "உமாமகேஸ் வரி சேர்மனாக தேர்வுசெய்யப்பட்ட நாளிலிருந்தே பினாமி பெயரில் டெண்டர், காண்ட்ராக்ட் எடுப் பதும் அதன்மூலம் தன்னை வளர்த்துக்கொள் வதிலுமே குறியாகச் செயல்பட்டுவந்தார். சேர்மன் பொறுப்பிலிருக்கும் அவர் கவுன்சிலர்களின் நலன் பற்றி கவனத்தில் கொண்டதில்லை. குறிப்பாக, தன் கட்சியின் கவுன்சிலர்களைக்கூட அவர் பொருட் படுத்தியதில்லை. இதனால் ஒட்டுமொத்த வார்டு பணிகளும் ஸ்தம்பிக்கத் தொடங்கின. சேர்மனின் அபார வளர்ச்சியால் ஆதங்கத்திலிருந்த கவுன்சிலர் கள் அனைத்து வகையிலும் தாங்கள் புறக்கணிக்கப் படுவது தெரிந்து மனம் புழுங்கியிருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரமான அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் 24 பேர் இணைந்து 2022லேயே சேர்மன் உமாமகேஸ்வரி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நகராட்சி நிர்வாகத்தை வலி யுறுத்தினர். இந்த விவரம் தி.மு.க.வின் தலைமைக் குத் தெரியவர, தொகுதியின் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர், உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு இருவரும் இரு தரப்பினரிடமும் பேசியிருக்கிறார்கள். அதுசமயம் கவுன்சிலர்களின் ஆதங்கங்கள், சேர்மனின் செயல்பாடுகள் இரண்டையும் தெளிவாக விசாரிக்காமல் பொதுவாக இரு தரப்பினையும் மேம்போக்கில் சமாதானப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். அப்போதே அமைச்சர்கள் முறையாகப் பிணக்குகளைத் தீர்த்திருந்தால் இந்தப் பிரச்சினை இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது.
அமைச்சர்களின் இந்த சமாதானத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட சேர்மன் உமாமகேஸ்வரி தன்னுடைய செயல்பாட்டை திருத்திக்கொள்ளவில்லை. மக்கள்நலப் பணிகளை தொடர்ந்து புறக்கணித்துவந்திருக்கிறார். மக்கள் பணிகள் ஸ்தம்பித்ததால் நகர மக்களின் மனதில் ஆளுங் கட்சிக்கு எதிரான மனநிலையை அது உருவாக்கிவிட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோதே, தி.மு.க.வின் மண்டலத் தலைவரான கனிமொழி எம்.பி., சேர்மன் உமாமகேஸ்வரியிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்டதாகத் தெரியவில்லை. சேர்மன் உமாமகேஸ்வரி உயர் நீதிமன்றம் சென்றது தி.மு.க. தலைமையை அதிரவைத்திருக்கிறது.
விவகாரத்தைப் பேசித் தீர்க்கவேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளரிடம் கட்சித் தலைமை அறிவுறுத்தியும், நம்பிக்கையில்லாத் தீர்மானம்வரை போய் தி.மு.க. சேர்மன் பதவி யிழந்ததில் கடுப்பான தி.மு.க.வின் தலைமை, தொகுதியின் தி.மு.க. எம்.எல். ஏ.வும் வடக்கு மா.செ.வுமான ராஜாவை வரவழைத்து, அடுத்த சேர்மனாக தி.மு.க. வைச் சேர்ந்தவரே வரவேண் டும் என்று உத்தரவிட்டி ருக்கிறது..
இதனால் பரபரப் பான எம்.எல்.ஏ. தரப்பு, அடுத்த ஆப்ஷனாக தி.மு.க.வைச் சேர்ந்த பெண் ஒருவரை சேர்மனாக்கும் தீவிர முயற்சியில் இறங்கி யிருக்கிறது. தி.மு.க. அணி யின் கவுன்சிலர்கள் 17 பேரில் சேர்மன் உமா மகேஸ்வரி, அவருக்கு ஆதரவாக வாக்களித்த 17-வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் ஆகிய இரு வரும் அடுத்த சேர்மன் தேர்வில் வாக்களிக்கும் போது கலந்துகொள்வ தில்லை என்ற முடிவிலிருக் கிறார்களாம். இதனால் தி.மு.க. அணியின் கவுன் சிலர்கள் 15ஆக சுருங்க நேரிடும். அதேசமயம் அ.தி. மு.க.வின் எண்ணிக்கையோ 13. சேர்மன் தேர்தல் இம் மாத இறுதிக்குள் நடை பெறும் என்று பேச்சு அடிபடுவதால் அ.தி.மு.க. வும் சேர்மன் பதவியை தன் வசம் கொண்டுவரும் தீவிரத்தில் இருக்கிறதாம். இதனால் நகரின் அரசியல் வட்டாரம் சூடும் பர பரப்புமாயிருக்கிறது.
பதவியிழந்த உமா மகேஷ்வரியோ, ரகசிய வாக்கெடுப்பு முறையாக நடத்தப்படவில்லை என்று மீண்டும் உயர்நீதிமன்றத் தை நாட உள்ளாராம். இதனால் இந்த விவ காரம் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரிய வில்லை.