தமிழகத் தின் பிரதான கட்சியான தி.மு.க. தனது வாக்குச்சாவடி முகவர்களின் சென்னை மற் றும் விழுப்புரம் மண்டல மாநாட்டை, சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் இ.சி.ஆர் சாலையிலுள்ள திருவிடந்தை கிராமத்தில் நடத்தியது. அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுமார் ஒன்றரை லட்சம் சதுர அடியில், 1,70,000 முகவர்கள் அமரும்படியான பிரம்மாண்ட ஏற்பாட்டால் மாநாடு, பிப்ரவரி 11ஆம் தேதி புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சென்னை மண்டலப் பொறுப்பாளர் ஆ.ராசா, விழுப்புரம் மண்டல பொறுப்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இவர்களோடு, இம்மண்டலங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், கட்சி பொறுப் பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றியை ஈட்ட முனைகிற, கழகத்தின் ஈட்டிகளே''’என பேச்சை துவக்கினார். "சகோதரர் தா.மோ.அன்பரசன் செயல்வீரர். கழகத்தில் கொடுக்கக்கூடிய பொறுப்பாக இருந் தாலும் சரி, ஆட்சி நிர்வாகத்தில் கொடுக்கக் கூடிய பொறுப்பாக இருந்தாலும் சரி சிறப்பாக செயல்படக்கூடியவர். அதேபோல இந்த மாநாட்டையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்தியாவில் வேற எந்த கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு நம்முடைய தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு. அதற்குக் காரணம் நீங்கள். தமிழகத்தில் 75,000 பூத்துகள் உள்ளன. ஒவ்வொரு பூத்துக்கும் 350 வாக்குகள் டார்கெட், ரெண்டு கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறவேண்டும். ஒவ்வொரு முகவர்களும் 40 முதல் 50 வாக்காளர்களை தேர்தலுக்குள் ஐந்து முறை சந்தித்து, கட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி அதை வாக்காக மாற்றி நம் வெற்றியை உறுதிசெய்ய பாடுபடவேண்டும்.
களத்தில், அமைச்சர்களோ, மாவட்டச் செயலாளர்களோ, மண்டலப் பொறுப்பாளர் களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளு மன்ற உறுப்பினர்களோ என்னதான் உழைத்தா லும், யுக்திகளை வகுத்தாலும் வெற்றியை உறுதி செய்யப்போவது நீங்கள்தான். ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடி யாக மாற்றப்போவது நீங்கள்தான்.
2026-ல் 200-க்கும் மேற்பட்ட தொகுதி களை நாம் வெற்றிபெற வேண்டும். நடக்கப் போகும் தேர்தல் ரெண்டு கூட்டணிக்குள் நடக்கப்போகும் தேர்தல் அல்ல, தமிழ்நாடு வெர்சஸ் என்.டி.ஏ.வுக்கு இடையேயான தேர்தல், பாமர மக்களுக்கு தெளிவாக புரியவேண்டும் என்றால் வெல்லப்போவது டெல்லி அணியா? தமிழக அணியா? என்பதை நீங்கள் உறுதி செய்யப்போகிறீர்கள். எங்கு யார் நின்றாலும் அது நான் தலைவர் ஸ்டாலின்தான் 234 தொகுதியிலும் நிற்கிறேன் என்று வேலை பாருங்கள்''’என்றார்.
அதேபோல தனியார் தொலைக்காட்சி சார்பாக நடைபெற்ற தமிழ்நாடு வட்டமேஜை நிகழ்வில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "எத்தனை கூட்டணி அமை ந்தாலும் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிதான் வெல்லும். ஆட்சியில் பங்கு என்பது தமிழ் நாட்டுக்கு ஒத்துவராது. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியிடையே குழப்பம் இல்லை. சிலர் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். அது எடுபடாது.
ஆட்சியில் பங்கு என்பது தமிழ் நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸுக் கும் நன்றாகத் தெரியும். அரசியலைத் தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராகப் பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். உறவுக்குக் கைகொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று கலைஞர் சொல்லியிருக்கிறார்'' என கூட்டணி குறித்த தம் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t112415809z-arv-2026-02-07-16-54-11.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/12/stalin-2026-02-12-16-05-33.jpg)