நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தேர் தலில், மொத்த நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 51 சதவீதம் வாக்குகளைப் பெறும் தொழிற்சங்கமே, என்.எல்.சி. தொழி லாளர்கள் தொடர்பான பிரச்சனையில், நிர்வா கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகாரம் பெறுவார்கள். இந்தத் தேர்தல், கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம், கடந்த பத்தாம் தேதி, மத்திய மண்டல தொழிலாளர் முதன்மை ஆணையர் சவுத்ரி முன்னிலையில் நடைபெற்றது. இதில் என்.எல்.சி. மனிதவளத் துறை முதன்மை மேலாளர் சிவராஜ், துணைப் பொதுமேலாளர் உமா மகேஸ்வரன், மற்றும் தொ.மு.ச. (தி.மு.க.), அண்ணா தொழிலாளர் ஊழி யர் சங்கம். (அ.தி.மு.க.), பாட்டாளி தொழிற்சங்கம் (பா.ம.க.), சி.ஐ.டி.யு.சி. (சி.பி.எம்.) உட்பட 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ரகசிய ஓட்டெடுப்பு முறை கடைப் பிடிக்கப்படும். அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் தொழிற்சங்கங்களுக்கு சின்னங்கள் எதுவும் ஒதுக்க மாட்டார்கள், எண்கள் மட்டுமே ஒதுக்கப்படும். ரகசிய ஓட்டெடுப்பு முடிந்ததும் அன்றிரவு 10 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

yy

என்.எல்.சி. நிர்வாகத்திலுள்ள 6,578 நிரந்தரத் தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமைகளை வென்றெடுக்கவே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் தொ.மு.ச., அ.தொ.ஊ.ச., பா.தொ.ச, பி.எம்.எஸ்., சி.ஐ.டி.யு.சி., தி.தொ.ஊ.ச. ஆகிய ஆறு சங்கங்கள் மட்டுமே களமிறங்கியுள்ளன. இதில் வி.சி.க., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழி லாளர் சங்கங்கள் தொ.மு.ச.விற்கு ஆதரவு தெரி விக்குமாறு கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ள தாகத் தெரிகிறது.

இந்த தேர்தல் குறித்து பல்வேறு தொழிற்சங்க பிரமுகர்களிடம் பேசினோம். என்.எல்.சி. நிர்வாகத் தில் 11,000 நிரந்தரத் தொழிலாளர்கள், 10,000 தற் காலிகத் தொழிலாளர்கள் இருந்த நிலையில், ஒவ் வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் ஓய்வு பெற்று வெளியேறிய நிலையில், தற்போது நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 6,578 எனக் குறைந்து விட்டது. இதில் தொ.மு.ச.வில் மட்டும் சுமார் 3500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆக, அவர்கள் ஒருமித்து வாக்களித்தாலே 51 சதவீதத்தைப்பெற்று என்.எல்.சி. நிர்வாகத்தின் அங்கீகாரத்தை சுலபமாகப் பெற முடியும். ஆனால் தொ.மு.ச.வில் பல முட்டல், மோதல்கள், உள்குத்து இருப்பதாக அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

Advertisment

2011, 2012-ம் ஆண்டுகளில் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தம் செய்தபடி பல்வேறு சலுகை களை, கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்தது என்றும், 2012ல் நடந்த ரகசிய வாக்கெடுப்பின்போது அப்போதையே ஆளுங்கட்சி யான அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் நெய்வேலியில் முகாமிட்டு, திருமங்கலம் பார்முலாவை கையாண்ட னர். அதன் விளைவாக அத்தேர்தலில் இரண்டா மிடத்தைப் பிடித்தது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 33 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடந்தன. 11 தொழிலாளர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இச்சூழலில், 2016-ல் நடந்த ரகசிய வாக்கெடுப்புத் தேர்தலில் சி.ஐ.டி.யு.சி., தொ.மு.ச.வை புறந்தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்தது.

tt

தொடக்க காலத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடி பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தந்த தொ.மு.க., காலப்போக்கில், தொ.மு.க. நிர்வாகிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லாத தால், என்.எல்.சி. நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட சலுகைகள் பலவும் பறிபோயின. குறிப்பாக, 45% போனஸ், 35 சதவீதமாகக் குறைத்தது. இப்படி சலுகைகள் பறிபோனதால் தொ.மு.ச. நிர்வாகிகள்மீது அதிருப்தி இருக்கிறது. எனவே தொ.மு.ச. மீண்டும் முதலிடத்தைப் பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், நெய்வேலி எம்.எல்.ஏ. சபாராஜேந்திரன் உள்ளிட் டோர், தொ.மு.ச.வை வெற்றிபெறச் செய்ய தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisment

அதேபோல் அ.தி.மு.க. தொழிற்சங்க வெற்றிக் காக கட்சியின் மா.செ.க்கள் அருள்மொழித்தேவன், பாண்டியன், சொரத்தூர் ராஜேந்திரன் உள்ளிட் டோர் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். அதே போல் பா.ம.க. சார்பிலும் அதன் தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர ஓட்டுவேட்டையில் உள்ளனர். சி.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பிரமுகர்களும் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர்.

இத்தேர்தலில், சி.பி.எம். கட்சியின் சி.ஐ.டி.யு.சி. தனித்துக் களம் காணும் சூழலில், தொ.மு.ச. நிர்வாகிகள் மீது அதிருப்தியில் இருக்கும் அதே சங்கத்தை சேர்ந்தவர்களும் எதிர்த்து வாக்களிக்கக்கூடும் எனத் தெரிகிறது. எனவே, தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், நெய்வேலிக்கு நேரடியாக வந்து முகாமிட்டு சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அப்போது, சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்தலை உடனே நடத்தவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். சங்கத் தலைமையோ என்.எல்.சி. அங்கீகாரத் தேர்தல் முடிந்த பிறகு பொறுப்பாளர்கள் தேர்தலை நடத்துவோமென்று சமாதானம் செய்வதை, பல உறுப்பினர்கள் பகிரங்கமாக எதிர்க்கிறார்கள். எனவே சங்க உறுப்பினர்களை சரிக்கட்ட, பிரியாணி, குவாட்டர் என்று இறங்கியடிப்பதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க. சார்பிலும் நோட்டுக்கள் அள்ளியிறைக்கப்படுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் பசையை இறக்குவதற்காக மருத்துவர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் அச்சங்கத்தினர் சந்தித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நடைபெறும் தேர்தலில் எப்படியும் தொ.மு.ச. முதலிடத்தை பிடிக்குமென் றும், அதேவேளை, 51 சதவீதத்துக்கு குறைவாகப் பெறும் சூழலில், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் சங்கமும் அங்கீகாரம் பெற்றதாக அறிவிக்கப்படும் என்பதால், இரண்டாமிடத்துக்கு அ.தி.மு.க., பா.ம.க., சி.ஐ.டி.யு.சி. இடையே கடும்போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.

எனவே இத்தேர்தலிலும் திருமங்கலம் பார்முலாவே வெற்றியைத் தீர்மானிக்கக்கூடும்!

-எஸ்.பி.எஸ்.