அ.தி.மு.க.வில் நீயா-நானா பொம்மலாட்டம்! மோடி கையில் கயிறு!

dd

அ.தி.மு.க.வின் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனுக்குப் பதில் ஓ.பி.எஸ்., தலைமை நிலையச் செயலாளராக எடப்பாடிக்குப் பதில் ஜெயக்குமார், பொருளாளராக எஸ்.பி.வேலுமணி என புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்துகொண்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அவருக்கு நெருக்க மானவர்கள்.

"23-ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு தனியாக ஒரு அடையாள அட்டை தயார் செய்யவேண்டும், அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக்கூடாது' என எடப்பாடி சொன்ன போது, ஓ.பி.எஸ். ஏற்றுக்கொண்டார். "இதற்காக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என எடப் பாடி சொன்னதும், மறுப்பேதும் சொல்லாமல் ஓ.பி.எஸ். சம்மதித்தார்.

ss

ஆனால் கூட் டம் நடப்பதற்கு முன்னால் கடந்த 13-ந் தேதி எடப்பாடிக்கு மிக நெருக்கமான மா.செ.வான ஆதி ராஜாராம் சென்னை யில் உள்ள மா.செ.க்களை தொடர்புகொண்டு "இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோரிக்கை எழுப்ப வேண்டும்' என கேட்டுக்கொண்டார். இந்த விஷயம் எடப்பாடிக்கு பகிரப்பட்டது. எடப்பாடி தொடர்ச்சியாக... "ஒற்றைத் தலைமை வேண்டும், ஓ.பி.எஸ். ஒதுக்கப்படவேண்டும்' என நீண்ட நாட்களாக நிர்வாகிகளிடம் பேசிவருபவர்.

ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், "எடப்பாடி பேரவை' என ஒரு அமைப்பை ஆரம்பிக்க முயற்சி செய் தார். அதற்காக அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்க எடப்பாடி முயற்சி செய்தார். இந்த கூட்டத்திற்கு சில நாட்கள் முன்பு ஓ.பி.எஸ்.ஸின் தேனி மாவட்ட வீட்

அ.தி.மு.க.வின் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனுக்குப் பதில் ஓ.பி.எஸ்., தலைமை நிலையச் செயலாளராக எடப்பாடிக்குப் பதில் ஜெயக்குமார், பொருளாளராக எஸ்.பி.வேலுமணி என புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்துகொண்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அவருக்கு நெருக்க மானவர்கள்.

"23-ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு தனியாக ஒரு அடையாள அட்டை தயார் செய்யவேண்டும், அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக்கூடாது' என எடப்பாடி சொன்ன போது, ஓ.பி.எஸ். ஏற்றுக்கொண்டார். "இதற்காக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என எடப் பாடி சொன்னதும், மறுப்பேதும் சொல்லாமல் ஓ.பி.எஸ். சம்மதித்தார்.

ss

ஆனால் கூட் டம் நடப்பதற்கு முன்னால் கடந்த 13-ந் தேதி எடப்பாடிக்கு மிக நெருக்கமான மா.செ.வான ஆதி ராஜாராம் சென்னை யில் உள்ள மா.செ.க்களை தொடர்புகொண்டு "இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோரிக்கை எழுப்ப வேண்டும்' என கேட்டுக்கொண்டார். இந்த விஷயம் எடப்பாடிக்கு பகிரப்பட்டது. எடப்பாடி தொடர்ச்சியாக... "ஒற்றைத் தலைமை வேண்டும், ஓ.பி.எஸ். ஒதுக்கப்படவேண்டும்' என நீண்ட நாட்களாக நிர்வாகிகளிடம் பேசிவருபவர்.

ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், "எடப்பாடி பேரவை' என ஒரு அமைப்பை ஆரம்பிக்க முயற்சி செய் தார். அதற்காக அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்க எடப்பாடி முயற்சி செய்தார். இந்த கூட்டத்திற்கு சில நாட்கள் முன்பு ஓ.பி.எஸ்.ஸின் தேனி மாவட்ட வீட்டிற்கு எதிரே, "பொதுச் செயலாளர் எடப் பாடி' என போஸ் டர் ஒட்டப்பட்டது.

இவையெல் லாம் எடப்பாடியின் ஏற்பாடுகள்தான். ஆனால் "ஒற்றைத் தலைமை என்ப தெல்லாம் இல்லை, இரட்டைத் தலைமை தான் அ.தி.மு.க.வில்' என எடப்பாடி தொ டர்ந்து பேசிவந்தார்.

இந்நிலையில்... "ஒற்றைத் தலைமை வேண்டும் என ஆதிராஜாராம் திட்டமிட்டு கூட்டத்தில் பிரச்சினை எழுப்பலாம்' என சொன்னதை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை.

அந்தக் கூட்டத்தில், மாதவரம் மூர்த்தி "ஒற்றைத் தலைமைதான் வேண்டும்' என வெளிப்படையாகப் பேச... தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மூர்த்தி சொன்னதை ஆமோதித்ததோடு, அத்துடன் "எடப் பாடிதான் அந்த ஒற்றைத் தலைமை' என பேசினார்கள்.

pp

ஜெ.சி.டி.பிரபாகரன் இந்த ஒற்றைத் தலைமை பேச்சை எதிர்த்தார். ஆனால் அவர் "பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடர வேண்டாம்' என பேசியபோது, அதுவரை ஒற்றைத் தலைமை விஷயத்தில் எந்த பதிலும் சொல்லாமல் இருந்த எடப்பாடி எழுந்து, "பா.ஜ.க. கூட்டணி தொடரும், அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது'' என கண்டித்தார்.

செம்மலை, சம்பத், செல்லூர் ராஜு போன்றவர்கள் எடப்பாடியை ஆதரித்துப் பேசிய பேச்சுக்களுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல், மௌனம் கடைப்பிடித்தார்கள். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் இதை எதிர்த்தனர். வளர்மதி, சசிகலாவை குறிப்பிட்டு பேசினார். கோகுலஇந்திரா, தனக்கு எம்.பி. சீட் தரவில்லை என புலம்பினார்.

"அ.தி.மு.க. ஆட்சி யில் அமைச்சர்கள் கொள் ளையடித்தார்கள்' என ஒருவர் பேச... அவரை ஒருமையில் ஆர்.பி. உதயகுமார் திட்டி னார். இப்படி பலவித விஷயங் களோடு நடந்த அந்தக் கூட்டத்தில், பொதுக்குழு பற்றி எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. கூட்டத்தில் ஒலித்த எடப்பாடி ஆதரவு நிலை பற்றி ஓ.பி.எஸ். எதுவும் சொல்லவில்லை. மறுநாள் அவரது க்ரீன்வேஸ் சாலை வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வாசலில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திரண்டிருந்ததுடன், அந்த ஏரியா முழுக்க ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். "அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையே', "தற்கால பரதனே', "கழகத்தின் பாதுகாவலரே!' என்றெல்லாம் அதில் வாசகங்கள் இருந்தன. ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்ததால் மீடியாக்களின் கவனம் குவிந்தது. "ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டவர் ஓ.பி.எஸ். என்றும், ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் ஆனவர் இ.பி.எஸ்.' என் றும் சென்னை பாஷையில் கடுமையாகப் பேசினர். "ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தமும், அதன்பிறகு கட்சி நலன்கருதி ஒன்றிணைந்ததும்தான் இன்று அ.தி.மு.க. வைக் காப்பாற்றி, இரட்டை இலையைத் தக்க வைத்திருக் கிறது' என்று அவரது ஆதரவாளர்கள் பேட்டியளித்தனர்.

ஆலோசனை முடித்து திரும்பிய திண்டுக்கல் சீனிவாசனிடம், "ஒற்றைத் தலைமைன்னா அது ஓ.பி.எஸ்.தான்''’என்று குரல் எழுப்பினர். இத்தனை விவகாரமும் இ.பி.எஸ். தரப்புக்குச் சென்றபோதும் அவர் அசைந்து கொடுத்தபாடில்லை. வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் என முன்னாள் அமைச்சர்கள் பலரும் இ.பி.எஸ். பக்கமே இருப்பதால் தெம்பாக இருந்தார்.

இந்நிலையில் ஓ.பி.எஸ்., சசிகலாவை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்தார். "என் மகனை மத்திய மந்திரி ஆக்க எடப்பாடி விடவில்லை. எனது பதவிக்கும் குறி வைக்கிறார். இப்படியே போனால் அ.தி.மு.க.வின் தலைவராக எடப்பாடி மாறிவிடுவார்'' என சசியிடம் ஓ.பி.எஸ். வருத்தப்பட்டார். அத்துடன் டெல்லி பா.ஜ.க.வை தொடர்புகொண்டு தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்தார். அவரைச் சந்தித்தவர்களிடம், "என்னை எடப்பாடி அவமானப்படுத்திவிட்டார். இதை நான் சும்மா விடமாட் டேன்... என்ன ஆனாலும் சரி'' என சவால் விட்டார்.

எடப்பாடியும் தன் பங்கிற்கு டெல்லி பா.ஜ.க.வை தொடர்புகொண்டு கூட்டத்தில் நடந்த நிலவரங்களை விளக்கினார்.

பா.ஜ.க. இந்தப் பிரச்சினையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதேநேரத்தில் பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தி ஓ.பி.எஸ்.ஸை ஓரங்கட்ட எடப்பாடி வேகமாக காய் நகர்த்திவருகிறார். ஆனால், இந்த மூவ் தேர்தல் கமிஷனின் ஒப்புதலைப் பெறவேண்டும். அதற்கு பா.ஜ.க. தயவு தேவை என்பதால் இருதரப்பும் தற்பொழுது அமைதியாக இருக்கிறது.

"அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க பெரிய கட்சி என்பதுபோல அண்ணாமலையும் மற்றவர்களும் காட்ட நினைப்பதை அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர் களும் விரும்பவில்லை. தி.மு.க.வுக்குப் போட்டி அ.தி.மு.க.தான் என்ற கள நிலவரத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இரட்டைத் தலைமையில் உள்ள இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் பா.ஜ.க. தயவில்தான் அரசியலைத் தொடர்ந்துவருகிறார்கள். அதில் கட்சி நிர்வாகிகள் மத்தியல் இ.பி.எஸ். தன் செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார். சசிகலாவின் முடிவால், முதல்வர் பதவியை இழந்த ஓ.பி.எஸ்., அந்தளவுக்கு கட்சிக்குள் செல்வாக்கை நிலைநிறுத்த முடியவில்லை. மறுபடி யும், சசிகலாவின் தயவை நாடியிருக் கிறார்' என்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர்கள்.

"மறுபடியும் ஒரு மல்லுக்கட்டுக்குத் தயாராகி வருகிறது அ.தி.மு.க. இந்த பொம்மலாட்டத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது பிரதமர் மோடியின் கையில்தான் கயிறு இருக்கிறது' என்கிறார்கள் பா.ஜ.க.வின் மேலிடத் தலைவர்கள்.

________________

வளர்த்த கடா! மார்பில் பாய்ந்ததடா! -சைலண்டான தேனி மா.செ.

ddடந்த ஜூன் 14-ஆம் தேதி சென்னையில் நடந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தேனி மா.செ.வும் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் கலந்துகொண்டார். கூட்டத்தில் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக பல மாவட்டச் செயலாளர்கள் குரல் கொடுத்தும், சையதுகான் குரல் கொடுக்காமல் கூட்டத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டார். அதைக்கண்டு ஓ.பி.எஸ். டென்ஷனாகிவிட்டார். "இ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக, மாவட்டத்திலுள்ள கட்சி பொறுப்பாளர்கள் யாரும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர் அடிக்கக்கூடாது' என்றும் கூறியிருக்கிறார் சையதுகான்.

இந்த விஷயம் காதுக்கு எட்டவே டென்ஷனான ஓ.பி.எஸ். தனது மகன் ரவீந்திரநாத் மூலமாக மாவட்ட நிர்வாகிகளை செல் மூலமாகவும் நேரிலும் தொடர்புகொண்டு ஆதரவாக போஸ்ட் அடிக்கச் சொல்லியிருக்கிறார். பிறகுதான் மாவட்டம் முழுவதுமுள்ள கட்சிக்காரர்கள் விதவிதமாக போஸ்டர் அடித்து பெரும் எழுச்சி இருப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள்.

-சக்தி

nkn180622
இதையும் படியுங்கள்
Subscribe