Skip to main content

அறநிலையத்துறையிலும் அசத்திய நிர்மலாதேவி!

Published on 15/06/2018 | Edited on 16/06/2018
கடந்த ஏப்ரல் 20-22 நக்கீரன் இதழில், "பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்' என்னும் தலைப்பில் வெளிவந்த அட்டைப்படக் கட்டுரையில், ‘""சங்கரன் கோவில் இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது'' என்று சி.பி.சி.ஐ.டி. விசாரணையின்போது நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டிருந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நிர்மலாதேவிக்கு மீண்டும் பிடிவாரண்ட்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில், அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பரிமளா.
 

Warrant Again for Nirmaladevi

 

ஏற்கனவே ஒருதடவை, அதாவது கடந்த நவம்பர் 18-ஆம் தேதி நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் பெற்று வெளிவந்தார் என்பதும், அவர் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கிலிருந்து விலகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரான நிலையில், இவ்வழக்கு பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

Next Story

நிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும்! -விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் வழக்கின் சாட்சியான அக்கல்லூரியின் செயலாளர் ராமசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.

 

Nirmaladevi to be prosecuted in a different state! Petition to Supreme Court soon


கல்லூரியின் செயலாளர் ராமசாமி அரசு தரப்பினரால் மூடிய அறையில் விசாரிக்கப்பட்டார். நிர்மலாதேவியை அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனுவை விசாரித்த நீதிபதி 27-ஆம் தேதி வரை குறுக்கு விசாரணை செய்ய தடை விதித்தார். இவ்வழக்கில் வரும் 27-ஆம் தேதி மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது அந்நீதிமன்றம்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் –

 

Nirmaladevi to be prosecuted in a different state! Petition to Supreme Court soon

 

“இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்தால் பேராசிரியர் நிர்மலாதேவிக்கு தண்டனைதான் கிடைக்கும். நிர்மலாதேவி வழக்கு சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 1 முதல் 32 சாட்சிகளை படம் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், நிர்மலாதேவி குறித்து செய்தியாளர்கள் செய்தி வெளியிட தடையில்லை என்று தெரிவித்தார். நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநரும் அமைச்சர்களும் தொடர்பில் உள்ளதால், நிர்மலாதேவிக்கு நியாயம் கிடைக்காது என்பதாலும், தண்டனைதான் கிடைக்குமென்று கருதுவதாலும் வேறு மாநிலத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இன்னும் ஒருசில தினங்களில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்.” என்றார்.