டந்த ஏப்ரல் 20-22 நக்கீரன் இதழில், "பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்' என்னும் தலைப்பில் வெளிவந்த அட்டைப்படக் கட்டுரையில், ‘""சங்கரன் கோவில் இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது'' என்று சி.பி.சி.ஐ.டி. விசாரணையின்போது நிர்மலாதேவி அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டிருந்தோம்.

nirmaladevi

அந்த இதழை, நண்பர் ஒருவரின் வீட்டில் எதேச்சையாகப் புரட்டிய அறநிலையத் துறை அலுவலர் ஒருவர், அக்கட்டுரையைப் படித்துவிட்டு, நம்மைத் தொடர்பு கொண்டார். “""சார் நிர்மலாதேவியோடு பழக்கம் வைத்திருந்த அறநிலையத்துறை அதிகாரியின் பெயர் அன்புமணி. அவர் இப்போது குமரி மாவட்ட இந்து அறநிலை யத்துறையில் இணை ஆணையராகப் பணிபுரிகிறார். மட்டமான காரியங்களைச் செய்து வருகிறார். ஆதாரத் தோடுதான் சொல் கிறேன்'' என்றார் ஆதங்கத்துடன்.

பேராசிரியை களுக்கு வலை!

Advertisment

இந்து அற நிலையத்துறை வட்டாரத்தில் அன்புமணி குறித்து நாம் விசாரித்தறிந்த வில்லங்க விவகாரங்கள் இதோ :

நெல்லை அறநிலை யத்துறை இணை ஆணையராக இருந்தபோது, கூடுதல் பொறுப்பாக திருச்செந்தூர் கோவிலையும் கவனித்தார் அன்புமணி. இந்து அற நிலையத்துறையின்கீழ் இயங்கிவரும் குற்றாலம், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரிக்கு அடிக்கடி சென்றார். அங்கு பேராசிரியை ஒருவருடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். திருநெல்வேலியில் தனக்குக்கீழ் பணிபுரியும் ‘குமாரியான’ உதவி ஆணையரோடு அலுவலகத்திலேயே அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டார். இந்த விஷயத்தை சக ஊழியர்கள், அன்புமணியின் மனைவியிடம் தெரிவித்துவிட, அவர் அலுவலகத்துக்கே வந்து, பூட்டிய அறைக்குள் இருவரும் இருந்ததைப் பார்த்து கத்தி தீர்த்துவிட்டார்.

அன்புமணியின் மனைவி வழக்கறிஞரும்கூட. பெண்கள் பலருடன் கணவர் நெருக்கம் காட்டி வருவதை அறிந்து, விவாகரத்து பெற்றுவிட்டார். அன்புமணி திருந்தியபாடில்லை. குமரி மாவட்டத்திலும், குழித்துறையில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஸ்ரீதேவி குமாரி மகளிர் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை ஒருவரோடு நட்பு பாராட்டி வருகிறார். அவருடைய பட்டியலில் நிர்மலாதேவியும் இடம் பிடித்திருக்கிறார்.

Advertisment

கோவில்களையும் விட்டு வைக்கவில்லை!

அருப்புக்கோட்டை- சொக்கலிங்கபுரத்தில் உள்ள சொக்கநாதசுவாமி கோவிலுக்குச் செல்லும்போது, செயல் அலுவலர் ஜவஹருடன் பழக்கம் ஏற்பட்டது. அதனால், அந்தக் கோவிலில் ஊழியர்கள் நிர்மலாவுக்கு தனி மரியாதை தந்தனர். ஒருநாள் ஜவஹரிடம், ‘ஆடிதபசுக்கு சங்கரன் கோவில் போகிறேன்’ என்று நிர்மலா கூறியதும், அங்குள்ள செயல் அலுவலர் பொன் சுவாமிநாத னுக்கு கடிதம் கொடுத்து அனுப்புகிறார். அன்றைய தினம், சங்கரன்கோவிலில் செயல் அலுவலர் விடுப் பில் சென்றுவிட்டதால், சங்கரநாராயண சுவாமி கோவில் தக்காராக இருந்த அன்புமணியை சந்தித் தார் நிர்மலா. அன்றிலிருந்தே இருவரும் பழக ஆரம் பித்தார்கள். பாளையங்கோட்டை, மகாராஜா நகர், நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள வீட்டை, இவ்விரு வரும் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டனர்.

இத்தகைய நெருக்கத்தால், தமிழகத்தில் எந்தக் கோவிலுக்கு நிர்மலாதேவி சென்றாலும் அங்கே ராணி மரியாதை கிடைத்தது. விசேஷ பூஜை நடத்தவும், கோவில்களில் கருவறை வரை செல்ல வும் முடிந்தது. சில லட்சங்களை நிர்மலாவிடம் கொடுத்தால் போதும். மேலாளர்கள் விரும்பும் கோவிலுக்கு டிரான்ஸ்பர் கிடைத்துவிடும். இந்து அறநிலையத்துறையைத்தான் நிர்மலாதேவி முதலில் குறிவைத்தார். அது நடக்காமல் போனதால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பக்கம் பார்வையைத் திருப்பி, வழக்கில் மாட்டிக் கொண்டார் என்று அங்கலாய்க்கிறது இந்து அறநிலையத்துறை வட்டாரம்.

நம்பி ஏமாந்தேன்!

சுசீந்திரத்தில் உள்ள வீட்டில் அன்புமணியை சந்தித்தோம்.

""எல்லாமே பொய். என்னைப் பிடிக்காதவங்க இப்படித்தான் கதை கட்டி விடுவாங்க. இதை யெல்லாம் நம்பாதீங்க'' என்று மறுத்தபோது, "இல்லியே? நிர்மலாதேவியுடன் தொடர்பில் இருந்ததற்கு ஆதாரமெல்லாம் இருக்கிறதே?' என்று திருநெல்வேலி, ரெப்கோ வங்கி கிளையில், 24-10-2013 அன்று இருவர் பெயரிலும் கூட்டாக ரூ.3,88,000 டெபாசிட் செய்த ரசீதின் நகலைக் காட்டியவுடன், பதற்றம் அடைந்தார் அன்புமணி. பிறகு, நீண்டதாகப் பெரு மூச்சுவிட்டபடி ""ஆமாங்க. நிர்மலாதேவிக்கும் எனக் கும் பழக்கம் இருந்தது உண்மைதான். 2013-ல் சங்கரன்கோவில் ஆடித் தபசில் முதலில் சந்தித் தோம். பிறகு மாதத்துக்கு ஐந்தாறு தடவை என்று எங்களின் சந்திப்பு தொடர்ந்தது. நான் மனைவியைப் பிரிந்து இரண்டு பெண் குழந்தை களுடன் வாழ்ந்து வரு வதைத் தெரிந்துகொண்ட நிர்மலா, என் குழந்தை களைப் பார்த்துக்கொள் வதாகச் சொன்னார். அவரும் அவருடைய கணவரும் அருப்புக்கோட் டையில் ஹாஸ்டல் ஒன்றைக் கட்டுவதாகவும், அதில் என்னுடைய குழந்தைகளைச் சேர்த்து, நன்றாக கவனித்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். அதை நம்பி, ஜாய்ன்ட் அக்கவுண்டில் ரூ.3,88,000 கட்டினேன். காலப்போக்கில், அவருடைய நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்டேன்; விலகிவிட்டேன்.

என்னுடன் பழகியதையும் வாக்குமூலமாக நிர்மலாதேவி தந்ததால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் இரண்டு தடவை என்னை அழைத்து விசாரித்தார்கள். உங்களிடம் சொன்னதைத்தான் போலீசாரிடமும் கூறினேன்'' என்று ‘ரொம்ப நல்லவராக’ தன்னைக் காட்டிக்கொண்டார் அன்புமணி.

இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, வேறு எந்தெந்த துறையினர் நம்மிடம் புலம்பலைத் தொடரப் போகின்றனரோ? நிர்மலாதேவிக்கே வெளிச்சம்!

-சி.என்.இராமகிருஷ்ணன், மணிகண்டன்

படம் : ராம்குமார்