நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடை பெற உள்ளதால், நிலக்கோட்டை சுறுசுறுப்பாக இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி சட்டமன்றத் தொகுதியான நிலக்கோட் டையில், இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் களமிறக்கி யுள்ளன.

nilakottaiகாங்கிரஸ் கோட்டையாக நிலக் கோட்டை இருந்த சமயத்தில், ஆறுமுறை இத்தொகுதியில் வெற்றிபெற்ற பொன் னம்மாளின் உறவினர்தான் தி.மு.க. வேட்பாளரான சௌந்தரபாண்டியன். தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாகத் திகழும் இவரது சொந்த ஊர் நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட செம்பட்டி. கட்சித் தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்காரர்களுக்கு நெருக்க மாகத் திகழ்பவர். கட்சிக்காரர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினையென்றால் தானே முன்சென்று பிரச்சினைகளைத் தீர்க்க உதவுபவர் என நல்ல பெயரும் இருக்கிறது. தி.மு.க. துணைப்பொதுச் செயலாளரான ஐ.பெரியசாமி, அவரது மகனும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரின் விசுவாசி.

20-க்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சௌந்திர பாண்டியனுக்கு ஆதரவாக ஐ.பெரியசாமியும் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரும் கட்சிப் பொறுப்பாளர்களும் தீவிர ஆலோ சனையில் ஈடுபட்டு கட்சி பலம், கூட்டணி பலம், பெரும்பான்மை சமூகத்தினர் ஆதரவு ஆகிய எல்லாவற்றையும் பரிசீலித்து சௌந்தர பாண்டியனை சிபாரிசு செய்தனர். இதனை தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டு நிலக்கோட்டை வேட்பாளராக சௌந்திர பாண்டியனை அறிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க. கூட்டணியில் சௌந்தர பாண்டியனின் அதே சமூகத்தைச் சார்ந்தவரும் 2006-ல் இதே தொகுதியில் வெற்றிகண்டவ ருமான தேன்மொழியை களமிறக்கியிருக் கிறார்கள். இவரது கணவர் சேகர் நிலக் கோட்டை பேரூராட்சி தலைவராக இருந்தவர்.

Advertisment

தொடக்கத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆதரவாளராக இருந்த தேன்மொழியும் கணவர் சேகரும், தற்போது சிட்டிங் அமைச்சரான வனத்துறை சீனிவாசனின் ஆதரவாள ராக மாறியிருக்கிறார்கள். தேன் மொழிக்கு மீண்டும் சீட் கிடைத்ததில் அமைச்சர் சீனிவாசனின் பரிந் துரைக்கும் முக்கிய இடமுண்டு.

2016 தேர்தலில் வெற்றி பெற்றவரும் தகுதிநீக்கம் செய்யப் பட்டவருமான தங்கத்துரை அ.ம.மு.க. சார்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் வெற்றி நிலவரங்களை வைத்துப் பார்த்தால், காங்கிரசுக்குப் பின் நிலக்கோட்டைத் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கே செல்வாக்கு அதிகம். ஆனால் அ.ம.மு.க.வின் இடையீடு எத்தனை வாக்கு சதவிகிதங்களைப் பிரிக்குமென்பதும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் இதர கட்சி வேட்பாளர்களால் பிரியும் வாக்கு விகிதமும் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக அமையும்.

Advertisment

அதுவரைக்கும் ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் நிலக்கோட்டை தனக்குத்தான் என மனக்கோட்டை கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டவேண்டியதுதான்.

-சக்தி