"ந
கையைப் பறிகொடுத்து விட்டோம்'' என திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் புகாரளிக்க, அஜித்குமார் எனும் மடப்புரம் கோவில் ஊழியர் காவல் சித்ரவதையால் மரணமடைந்தார். மேலும் போலீசார், அஜித்குமாரை ரவுண்டு கட்டி மிருகத்தனமாகத் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி தமிழகமெங்கும் பரபரப்பானது. நிகிதாவிற்காக காவல்துறையை இயக்கியதாக சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பெயர்களும் உருண்டன. நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்படியேதும் வாய்ப்பில்லை என்றாலும், காவல் சித்ரவதை மரணத்திற்காக தமிழக முதல்வரும் 'நர்ழ்ழ்ஹ்' சொல்லவேண்டியிருந்தது. இந்த நிலையில் 9.5 பவுன் திருட்டுப் புகார் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. புகார் கொடுத்தவரே பெரிய சீட்டிங் பேர்வழி என தகவல்கள் வெளியாகியுள்ளது.

யார் அந்த நிகிதா?

மறைந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஜெயபெருமாள் -சிவகாமியின் மகளான நிகிதா. மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர். தாவரவியலில் முனைவர் பட்டம்பெற்ற நிகிதா தற்பொழுது திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் பேராசிரி யையாகப் பணியாற்றிவருகின்றார். 10.5.2011-ல் திருமங்கலம் தாலுகா காவல்நிலையத்தில், "அப்போதைய துணைமுதல்வரின் பி.ஏ. எனக்கு உறவுக்காரர். அவர் மூலம் ஆசிரியர் பணி, வி.ஏ.ஓ. பணி உள்ளிட்டவற்றை எளிதாக வாங்கித் தரமுடியும் என்றதால் அந்தக் குடும்பத்தினை நம்பி சுமார் ரூ.16 லட்சம் கொடுத்தேன். வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தைக் கேட்டால் கொலைசெய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்' என பச்சகோப்பன்பட்டியை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் புகார்கொடுத்தார். இதில் சிவகாமி, ஜெயபெருமாள், கவியரசு, சுகதேவி, நிகிதா மற்றும் பகத்சிங் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து மோசடி செய்துவிட்டதாக வழக்கு எண் 128/11 பதிவானது. 

nikitha1

Advertisment

அதற்கடுத்ததாக, "நான் மதுரையில் வீடுகட்டி செட்டிலாகவுள்ளேன். வீடு வேலை நடந்துகொண்டிருக்கின்றது. ஆகையால் ஆலம்பட்டியிலுள்ள என்னு டைய வீட்டை விற்கவுள்ளேன்'' என பேராசிரியர் பாசில் என்பவரிடம் ரூ.70 லட்சத்திற்கு வீட்டை விலை பேசி யிருக்கிறார். இதில் பேராசிரியர் ரூ.25 லட்சத்தை அட்வான்ஸாகத் தந்த நிலையில், "மார்க்கெட் விலை கூடிவிட்டது. ரூ.95 லட்சமாக கொடுத்தால் மட்டுமே கிரையம் செய்துதருவேன்'' என சீட்டிங் நிகிதா பேச வெலவெலத்திருக்கிறார் பேராசிரியர் பாசில். “சரி, எனக்கு வீடு வேண்டாம். கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு” எனக் கேட்க, "நீ சொன்னபடி கிரையம் செய்திருக்கணும், செய்யலை. அதனால் அட்வான்ஸைத் திருப்பித் தரமுடியாது'' என மிரட்டல் விடுத்தார். இதில் நிகிதா மீது சீட்டிங் வழக்கு பாய்ந்துள்ளது. இதுபோல் செக்கானூரணி தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம், அரசு வேலைக்காக நிகிதாவிடம் ரூ.25 லட்சம் கொடுத்து ஏமாந்ததும் வழக்காகப் பதிவாகியுள்ளது.

"இந்த வழக்குகள் தவிர நிகிதாமேல் கொடுக்கப்பட்ட சீட்டிங் புகார்கள் மட்டும் இதுவரை 17. பெயரளவில் சி.எஸ்.ஆர். மட்டும் போடப்பட்டுள்ளது. விசாரிக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சீட்டிங் ராணி பட்டம் நிகிதாவிற்கு கிடைக் கும். அஜித்குமார் விவகாரத்தில் இவள் கொடுத்த புகார் உண்மையாக இருக்காது. புகாரைக்கொடுத்து அவனை மிரட்டிப் பார்ப்போம். அதில் பயந்து நாம் புகார் கூறியதில் பாதியாவது கொடுத்துவிடுவான் என மிரட்டிப் பார்த்திருக்கின்றார். அஜித்குமார் நகையை எடுக்கலை. பயப்படவும் இல்லை. அஜித்குமாரிடம் இவளுடைய சீட்டிங் தந்திரம் வேலைசெய்யவில்லை. இவளுடைய நடவடிக்கையே இப்படித்தான் இருக்கும்'' என்கின்றார் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர்.

இது இப்படியிருக்க, "தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. இப்பொழுது ட்ரெயினிங்கில் உள்ளேன். திருமணத்தில் விருப்பமில்லை. இருந்தாலும் அப்பா, அம்மா கூறியதால் இந்த திருமணத்தை ஒத்துக்கொள் கிறேன்'' என  செல்லம்பட்டி மாப்பிள்ளைக்கு ஆசை காண்பித்திருக்கிறார் நிகிதா. தனக்கு மனைவியாக வரப்போகிறவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என நினைத்து செல்லம்பட்டி மாப்பிள்ளை சிக்கிய நிலையில் திருமணம் நடந்துள்ளது. சரியாக 20 நாட்களில் டுபாக்கூர் ஐ.ஏ.எஸ். எனத் தெரியவர திருமணம் விவாகரத்தானது. அந்த அப்பாவி மாப்பிள்ளை பா.ஜ.க.வுடன் இணக்கம் காட்டும் ஒரு கட்சியின் நிறுவனர் என்பதுதான் ஹாட் டாபிக்கே.

Advertisment

இப்படிப்பட்ட சீட்டிங், எப்படி நகையைத் தொலைத்திருக்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!        

nikithabox