கீழ்வேளூர் தாலுகா அலு வலகத்தில் பெண் ஊழியர்களை விசாரணை என்ற பெயரில் நள்ளிரவுவரை அலைக்கழித்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு 13 பெண்கள், ஊனமுற்றவர்கள் என 19 பேர் கிராம உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தை காரணமே இல்லாமல் நாகை மாவட்ட ஆட்சியர் அருந்தம்புராஜ், கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் மூலமாக ரத்துசெய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட 19 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணிநீக்கம் குறித்து 19 பேரிடமும் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, 19 பேரிடமும் விசாரிக்க கீழ்வேளூர் தாசில்தாருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி 13 பெண் உள்ளிட்ட 19 பேரும், கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்தனர். ஆனால் விசாரணையை மாலை நான்கு மணிக்குமேல் துவங்கி, இரவுவரை நீட்டித்ததும், விசாரணை அதிகாரிகளாக ஆண்கள் மட்டுமே இருந்ததும் சர்ச்சையாகி யுள்ளது.

Advertisment

ee

இதுகுறித்து பெண் கிராம உதவியாளர்கள் சிலரிடம் விசாரித்தோம். "முறையாக நேர்காணல் வைத்துதான் எங்களை தேர்வுசெய்தனர். ஆனால் எந்தவித காரணமும் இல்லாமல் எங்கள் நியமனம் செல்லாது எனக்கூறி நீக்குகிறார்கள். எந்த ஆட்சியர் எங்களை நியமனம் செய்தாரோ அதே மாவட்ட ஆட்சியர், எங்கள் நியமனம் செல்லாது என நீக்குகிறார். மாவட்ட ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த கடுமையான அழுத் தத்தால்தான் எங்களை நீக்கியதாகத் தெரிகிறது. பணத் திற்காக எங்க வாழ்க்கையில மண்ணள்ளிப் போடுறாங்க. பலர் கணவனை இழந்தவங்க... கணவ னால் கைவிடப்பட்டவங்க... ஊனமுற்றவர்கள்... என வறுமைக்கோட்டிற்குக்கீழே உள்ளவர்கள்தான். இந்த வேலை இல்லன்னா குடும்பத்தோடு விஷம் குடித்துச் சாவதைத் தவிர வேற வழியே இல்லை''’என்கிறார்கள்.

Advertisment

eeமேலும், "விசாரணையில் அரசு விதிகளைப் பின்பற்றவே இல்லை. விசாரணையை இரவு வரை தொடர்ந்தனர். எங்களில் 13 பெண் ஊழியர்கள். ஆனால் வட்டாட்சியர் ரமேஷ் தலை மையிலான விசாரணைக் குழு வில் ஒரு பெண்கூட இல்லை. காலையிலிருந்து எங்களைக் காக்கவைத்து, அலுவலக வேலை முடியும் நேரத்தில்தான் விசாரணைக்கே கூப்பிட்டார் கள்.

கிட்டத்தட்ட மனரீதியாக சிதைப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. ஒவ்வொரு வரிடமும் சம்பந்தமே இல்லாத கேள்விகளைக் கேட்டனர். அவர்களின் முக்கிய கேள்வியே, பணம் கொடுத்தீர்களா? யாரிடம் கொடுத்தீர்கள்? என்பதுதான். இதுவரை நாங்கள் என்ன தவறு செய்தோமென்றே கூறாமல் அலைக்கழிக்கிறாங்க'' என்றார் கள்.

Advertisment

வட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் கூறுகையில், "நீக்கப்பட்டுள்ள அனைவருமே அதிகாரிகள் மூலம் பணம் கொடுத்து வேலைக்கு வந்திருக்காங்க என்பதுதான் உண்மை. அந்த பணம் ஆளுங்கட்சி யின் மாவட்ட முக்கிய பிரமுகருக்கு போகல. அதனால அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களைப் போடணும்னு பிடிவாதமாக இருந்தார். அவர்கள் மீது முறையாக விசாரணை நடத்தப்பட்டு சட்டரீதியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் நீதிமன்ற உத்தரவுபடி வட்டாட்சியர் விசா ரணையை ஒரு அறையில் தன்னுடன் மூன்று ஆண் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, 13 பெண் ஊழியர்களை தனித்தனியாக வரவழைத்து விசாரணை செய்ததுதான் இந்த சர்ச்சைக்கு காரணமாயிடுச்சி. பெண் ஊழியர்களை இரவு நேரத்தில் தனிமைப்படுத்தி ரகசியமாக விசாரணை செய்ய இவருக்கு யார் அனுமதி அளித்தது என்கிற கேள்வியைப் பிடித்துக்கொண்டனர். அதேநேரம் அந்த 19ee நபர்களுக்குப் பதிலாக ஆளுங்கட்சியின் மாவட்டப் புள்ளி ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளார். அதை மாவட்ட ஆட்சியர் வாங்க வில்லை. எனவே, மாவட்டப் புள்ளிக்கும் ஆட்சியருக்கும் உரசல் துவங்கியிருக்கு'' என்கிறார்.

விசாரணை நடத்திய தாசில்தார் ரமேஷ்குமார் கூறுகையில்...’"விசாரணை தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. யாரும் ஆஜராகவில்லை. பத்து நாட்களுக்கு முன்பு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட் டது. மாலை 5 மணியுடன் அலுவலக நேரம் முடிவதால் மறுநாள் வாங்க என்று தெரிவித்தோம். ஆனால் அவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும், எத்தனை மணி ஆனாலும் விசாரணையை முடித்து விட்டு அனுப்புங்கள் என்றும் தெரிவித்ததால்தான் இரவுவரை விசாரணை நடத்தி கடிதம் வழங்கப்பட்டது. இதைத் திட்டமிட்டே திரித்துப் பேசுறாங்க'' என்றார்.

மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜிடம் கேட்டோம். "இரவு நேரத்தில் விசாரணை நடத்திய தாகக் கூறுவது பொய்யான தகவல். அவர்களின் வற்புறுத்தலால்தான் இரவு வரை விசாரணை நடந்துள்ளது. அதற்கான ஆதாரமும் இருக்கிறது. அவர்கள் அனைவருமே குறுக்கு வழியில் வேலைக்கு வந்துள்ளனர். தகுதியுடையோருக்கு கிடைக்கவேண்டிய வேலையை இவர்கள் தட்டிப் பறித்துள்ளனர். பல குளறுபடிகள் நடந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை செய்து அறிக்கை கொடுத்துள்ளோம். அவர்களுக்கு வேலை திரும்பக் கிடைக்க வாய்ப்பே இருக்காது. அதனால்தான் இரவில் விசாரணை செய்ததாக பொய்யான பிம்பத்தை உண்டாக்குகிறார்கள்'' என்றார்.