ந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.

tt

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என என்.ஐ.ஏ. இதுவரை 30 பேரை கைது செய்தது. 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்தது. தமிழ்நாடு, கேரளா, சவுதி அரேபியா என பல இடங் களிலிருந்தும் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றது.

இலங்கையில் வெடி குண்டு வைத்த தீவிரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்திருக் கிறார்களா என தேடினார்கள்.

Advertisment

"இவ்வளவு சல்லடை போட்டுத் தேடியும் வில்சனை கொலை செய்த தீவிரவாதி கள் தமிழகத்தில் எப்படி இயங்கினார்கள் என சஒஆ-வால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை' என கேள்வி யெழுப்புகிறார்கள் தமிழக காவல்துறை அதிகாரிகள்.

அம்பத்தூரில் சுரேஷ்குமார் என்கிற இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்துவிட்டு, ஜாமீனில் வந்த கைதிகளான காஜாமுகம்மது (எ) காஜாமொய்தீன், சையதுஅலி நவாஸ், அப்துல்சமீம் ஆகியோர் தலைமறைவானார்கள். பெங்களூருக்குச் சென்ற இவர்களுக்கு ஆதார் கார்டு, பாஸ்போர்ட் எல்லாம் எடுத்துக் கொடுத்து ஒரு திருமண கோஷ்டியின் போர்வையில் நேபாளத்துக்கு சாலை மார்க்கமாக தப்பிக்க வைக்கிறார்கள் ஹன்பதானி, இம்ரான்கான், முகம்மது சையது ஆகியோர்.

இந்தக் கும்பலின் தலைவன் காஜா. தீவிரவாத சிந்தனை மிகுந்தவன். இவன் சுரேஷ்குமாரைக் கொன்றதே, தன்னை ஒரு தீவிரவாத தலைவனாக வெளிக்காட்டத்தான். அவன் இந்தியா முழுவதும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் ஒரு தீவிரவாத நெட்வொர்க்கை உருவாக்கி வைத்திருந்தான்.

Advertisment

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததும் அதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தேசப்பற்றுடன் போராடுவதும் பரவலாக இந்தச் சூழலை வேறுவிதமாகப் பயன் படுத்தும் திட்டத்துடன், காஜாவை இந்தியாவிற்குள் தீவிரவாத செயல்களைச் செய்வதற்கு வர வழைத்தது.

si

டெல்லியில் அவனை போலீசார் கைது செய்தனர். அவன் வைத்திருந்த ஆதார் கார்டுகள் பொய் என தெரிந்தவுடன் அவனை தீவிரமாக விசாரித்தார்கள். அதில் "சுரேஷ்குமார் படுகொலை குற்றவாளி' என தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்ததில் அவனுக்கு போலி ஆதார் கார்டு எடுத்துக் கொடுத்து நேபாளத்திற்கு அனுப்பிய பெங்க ளூரு டீம் பிடிபட்டது. அடுத்து அவனது தீவிரவாத நெட்வொர்க்கில் இருந்த குஜராத் மாநில வடோதராவைச் சேர்ந்த ஜாபர்அலி என்பவனை கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த அப்துல்சமீம், தௌபீக் ஆகியோரை தேடிவந்தனர்.

இந்நிலையில் "காஜாவை டெல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள், அவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும்' என காஜாவின் தீவிரவாத நெட்வொர்க்கில் மெசேஜ் பதியப்பட்டது. தங்களின் செல்வாக்கை காட்ட போலீசை தாக்குவது என தீர்மானித்தார்கள். அதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குப் பக்கத்திலுள்ள நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த அப்துல்சமீமும் தௌபீக்கும் அவர்களது சொந்த ஊர்களுக்கும் கேரளாவுக்கும் நெருக்கமான எல்லைப்பகுதியான களியக்காவிளைக்கு வந்தார்கள். அங்கே சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் ஒரு மூலையில் எந்த ஆயுதமும் இல்லாமல் இருந்த வில்சனை கத்தியால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தார்கள்.

அதன்பிறகு நடந்தே கேரளப் பகுதிகளுக்குச் சென்றார்கள். இதில் சமீம், சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடையவன். இருவரும் தமிழக எல்லைப்பகுதியான களியக்காவிளை பகுதியை நன்கு தெரிந்தவர்கள் என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர். இவ்வளவு பெரிய தீவிரவாத நெட்வொர்க் இதுவரை சஒஆ-விடம் பிடிபடாமல் எப்படி இருந்தது என கேள்வி எழுந்துள்ளது.

tte

1998-ல் கோவையில் வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய அல்உம்மாவின் நெட்வொர்க்கில் இருந்த கர்நாடக குண்டல்பெட் பகுதியைச் சேர்ந்த சதக்கத்துல்லாகான், காஜாவின் நெட்வொர்க்கில் இருந்ததாக கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

இப்படி தமிழக, கேரள, கர்நாடக போலீசார், வில்சன் கொலை தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கேரள காவல்துறைதான், வில்சனை கொன்றவர்களின் புகைப்படத்தை முதலில் வெளியிட்டதோடு அவர்களின் தலைக்கு விலையும் நிர்ணயித்து தேடிவருகிறது.

இந்த வழக்கு இதுவரை சஒஆ-விடம் ஒப்படைக்கப்படவில்லை. சஒஆ-வின் செயல் பாடுகள் மீது அமித்ஷா கடுமையான கோபத்தில் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-தாமோதரன் பிரகாஷ்