நம்பிக்'கை' கொடுத்த நக்கீரன் செயற்கை கால் கொடுத்த என்.ஜி.ஓ.!

NGO

"வணக்கம் நக்கீரன்...… இரத்த அடைப்பு காரணமாக எனக்கு ஆபரேஷன் செய்ததால் வலதுகால் துண்டிக்கப்பட்டு விட்டது. செயற்கை கால் பொருத்த பணம் இல்லை. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்' என்று கண்ணீரோடு கடிதம் ngoஅனுப்பியவருக்கு இலவச செயற்கைக் கால் பொருத்த நக்கீரன் உறுதுணையாக இருந்தது மற்ற மாற்றுத்திறனாளி களுக்கும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

""எனது பெயர் சுப்பிரமணியன். நான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

"வணக்கம் நக்கீரன்...… இரத்த அடைப்பு காரணமாக எனக்கு ஆபரேஷன் செய்ததால் வலதுகால் துண்டிக்கப்பட்டு விட்டது. செயற்கை கால் பொருத்த பணம் இல்லை. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்' என்று கண்ணீரோடு கடிதம் ngoஅனுப்பியவருக்கு இலவச செயற்கைக் கால் பொருத்த நக்கீரன் உறுதுணையாக இருந்தது மற்ற மாற்றுத்திறனாளி களுக்கும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

""எனது பெயர் சுப்பிரமணியன். நான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இரத்த அடைப்பின் காரணமாக மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை செய்து எனது வலதுகால் எடுக்கப் பட்டது. என்னால் நடக்கவே முடியாது. வேலைக்கும் செல்ல முடியாது. எனக்கு மூன்று கைக் குழந்தைகள் உள்ளார்கள். பிள் ளைகள் படிப்புச்செலவுக்குக்கூட பணம் இல்லை. செயற்கைக் கால் பொருத்தினால் நடக்கமுடியும்'' என்று டாக்டர் கூறினார். உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும். அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று நக்கீரனுக்கு கண்ணீரோடு கடிதம் அனுப்பி யிருந்தார். அரசு தரப்பிலான உதவிகளுக்காகப் போராடி, முடியாமல் போன நிலையில்தான் நக்கீரனை நாடினார்.

நமது ஆசிரியரின் உத்தரவின் பேரில் டிசம்பர்- 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக்நாதனை தொடர்புகொண்டு கால் இழந்த சுப்பிரமணியனுக்கு செயற்கை கால் பொருத்த நாம் உதவி கேட்டபோது உடனடியாக, ஃப்ரீடம் ட்ரஸ்ட் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான ஸ்டீஃபனின் தொடர்பு எண்ணை கொடுத்து பேசச் சொன்னார்.

நாம் பேசிய சில நாட்களிலேயே, செயற்கைக்கால் இலவசமாக பொருத்தப்பட்டதாக தூத்துக்குடி சுப்பிரமணியன் ஆனந்த கண்ணீரோடு நக்கீர னுக்கு தகவல் தெரிவித்தார்.

dd

இதுகுறித்து, ஃப்ரீடம் ட்ரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீஃபனிடம் நாம் பேசிய போது,

""செயற்கை கால் மட்டுமல்ல, செயற்கை கை, கேலிபர் ஷூ, மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கான உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து உதவி உபகரணங்களை யும் கடந்த 24 வருடங்களுக்கு மேலாக எங்களது தலைவர் சுந்தர் மற்றும் குழுவினர் மூலம் இலவச மாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். 10 மாநி லங்களில் உதவிகள் செய்து கொண்டிருக்கிறோம். எந்த மாற்றுத்திறனாளிக்கு எந்த உபகரணம் தேவை என்றாலும் எனது 98844 54673 செல்ஃபோன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இலவசமாக வழங்குகிறோம்'' என்றார் சேவை உள்ளத்தோடு.

நக்கீரன் நம்பிக்கை கொடுத்தது. ஃப்ரீடம் டெஸ்ட் செயற்கை கால் கொடுத்தது. சுப்பிரமணியனைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை வசப்படும்.

-மனோசௌந்தர்

nkn301220
இதையும் படியுங்கள்
Subscribe